கட்டுரைகள்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: தீபாவளி ‘ஸ்வீட்’ விநியோக முறைகேடு... கலக்கத்தில் தி.மு.க அமைச்சர்கள்!

ஆர்.காமராஜ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆர்.காமராஜ்

மாங்கனி மாவட்டத்தில் ஒரு தொழிலதிபருக்கும், பிரபல ரெளடிக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னை இருந்திருக்கிறது

தி.மு.க நிர்வாகிகளுக்கு தீபாவளி ‘ஸ்வீட்’ வழங்குவதற்கான தொகையைக் கணக்கிட்டு அனைத்து மாவட்டச் செயலாளர்களிடமும் கொடுத்திருந்தது மேலிடம். அனைத்து மாவட்டங்களிலும் 20% முதல் 30% வரை நிறுத்திக்கொண்டு, 70% வரை கட்சிக்காரர்களுக்குக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், இரு வடக்கு மாவட்டங்களில் மட்டும் வெறும் 30% ‘ஸ்வீட்’ மட்டும்தான் கட்சிக்காரர்களைச் சென்றடைந்ததாம். மீதியை அமைச்சர்களே அமுக்கிவிட்டார்களாம். கடுப்பான உடன்பிறப்புகள், “சாமி வரம் கொடுத் தாலும் பூசாரி தடுக்கிறார்” என அறிவாலயத்துக்குப் புகார்களை தட்டிவிட்டிருக் கிறார்கள். இது குறித்து மேலிடம் விளக்கம் கேட்பதால், சம்பந்தப்பட்ட இரண்டு அமைச்சர்களும் கலக்கத்தில் இருக்கிறார்களாம்.

ஆர்.காமராஜ்
ஆர்.காமராஜ்

தொழிலதிபரோடு டீலிங்... ரெளடியைக் கடத்திய போலீஸ்!

மாங்கனி மாவட்டத்தில் ஒரு தொழிலதிபருக்கும், பிரபல ரெளடிக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னை இருந்திருக்கிறது. அது பெரிய தொகை என்பதால் சம்பந்தப்பட்ட தொழிலதிபர் சமீபத்தில் அந்த ரெளடியை ஆள்வைத்துக் கடத்தியிருக்கிறார். இது புகாரானதால், கடத்தப்பட்ட ரெளடியை போலீஸ் மீட்டிருக்கிறது. இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை, மீட்கப்பட்ட ரெளடியை மீண்டும் அவரைக் கடத்திய தொழிலதி பரிடமே கொண்டு சென்று அடிக்கவைத்திருக் கிறது போலீஸ். மேலும், எந்தவித வாரன்ட்டும் இல்லாமல், ரெளடிக்குச் சொந்தமான வீடுகளுக்குச் சென்று சோதனையும் நடத்தியிருக்கிறார்கள். இந்தச் சட்டவிரோத டீலிங்குகளையெல்லாம் அந்தத் தொழிலதி பருக்காகச் செய்தவர் ‘படமெடுக்கும்’ ராஜ அதிகாரிதானாம். சட்டவிரோத ரெய்டில் சிக்கிய லட்சக்கணக்கான பணத்தைப் பற்றியும் அவர் இதுவரை தன்னுடைய உயரதிகாரிகளுக்கே தெரிவிக்கவில்லையாம். இந்த விஷயம் சென்னையிலுள்ள காவல்துறைத் தலைவர் காதுக்குச் செல்லவே சம்பந்தப்பட்ட படமெடுக்கும் அதிகாரியிடம் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது.

முன்னாள் அமைச்சரின் சொத்து விவரங்கள்!

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்குப் பிறகு, அவரது சொத்துகள் குறித்த கணக்கெடுப்பில் இறங்கியிருக்கிறதாம் அரசுத் தரப்பு. ஆர்.காமராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் பெயரிலுள்ள விவசாய நிலங்கள் தொடங்கி அசையும், அசையாத சொத்துகள் குறித்த முழுத் தகவல்களையும் திரட்டியிருக்கிறார்கள். “ரெய்டை ஒட்டி நடந்த டீலில் பேசியபடி, ‘ஸ்வீட் பாக்ஸ்’ கைமாறவில்லையாம். அதனாலேயே இந்த வழிமுறையைக் கையில் எடுத்திருக்கிறார்கள்” என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்!

அமைச்சரின் நாட்டாமைத்தனம்... ஊரிலேயே முடங்கிய நிர்வாகிகள்!

குறைந்தபட்சம் மாதம் ஒரு முறையாவது சென்னைக்குச் சென்று அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகளைச் சந்திப்பது, லோக்கல் அரசியலில் இறங்கியடிப்பது எனப் பரபரப்பாக இயங்கிவந்த மேற்கு மாவட்ட தி.மு.க நிர்வாகிகள், தற்போது அநியாயத்துக்கு அடக்கமாக இருக்கிறார்கள். “என்னை மீறி யாரும் சென்னைக்குச் செல்லக் கூடாது, மேலிடத்தில் பேசக் கூடாது” என அந்த மாவட்டத்துக்குப் பொறுப்பாளரான அணில் அமைச்சர் உத்தரவிட்டிருப்பதே இதற்குக் காரணம் என்கிறார்கள். ``அதை மீறி யாராவது தனித்து இயங்கினால், கடைசி வரை தனியாகத்தான் இருக்க வேண்டும்’’ என ஓப்பனாகச் சொல்லிவிட்டாராம் அவர். நாட்டாமைத் தீர்ப்பை மீற முடியாமல் தவிக்கிறார்கள் உ.பி-கள்.

‘சேர்ந்தால் நஷ்டம்... பிரிந்திருப்பதே லாபம்!’

ஒற்றைத் தலைமை விவகாரத்தால், அ.தி.மு.க-வே சுணங்கிவிட்டது... ஒற்றுமைக்கு வழி பிறக்காதா என்று சில சீனியர்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள். ஆனால், திண்டுக்கல் மாவட்ட முன்னாள் அமைச்சர்களோ, ‘ஆத்தா... கட்சி மட்டும் ஒண்ணு சேர்ந்துடக் கூடாது’ என்று வேண்டாத தெய்வம் இல்லையாம். காரணம், கட்சி இரண்டுபட்டதாலேயே இவர்களுக்கு முக்கியமான மாநிலப் பொறுப்புகள் கிடைத்தன. மீண்டும் பணிவானவர் கட்சிக்குள் வந்தால், பொருளாளர் உள்ளிட்ட பொறுப்புகளையெல்லாம் இழக்க வேண்டியிருக்கும் என்பதே அவர்களது எண்ணமாம். பிரதமரின் திண்டுக்கல் வருகையின்போது எங்கே இரண்டு பேரின் கையையும் சேர்த்துவைத்துவிடுவாரோ என்று அதிகம் பதறியது இவர்கள்தானாம்.