Published:Updated:

மிஸ்டர் மியாவ்

அதிதி ஷங்கர்
பிரீமியம் ஸ்டோரி
அதிதி ஷங்கர்

பைக் நடிகருக்கு ஜோடியாக, மலையாளத்தில் கொடிகட்டிப் பறக்கும் சீனியர் நடிகையை புக் பண்ணி ஷூட்டிங்கை நடத்திவருகிறார்கள்

மிஸ்டர் மியாவ்

பைக் நடிகருக்கு ஜோடியாக, மலையாளத்தில் கொடிகட்டிப் பறக்கும் சீனியர் நடிகையை புக் பண்ணி ஷூட்டிங்கை நடத்திவருகிறார்கள்

Published:Updated:
அதிதி ஷங்கர்
பிரீமியம் ஸ்டோரி
அதிதி ஷங்கர்

முன்னணி ஹீரோக்களை வைத்து கிராமத்துப் படங்களில் ஹிட்டடித்த எதற்கும் துணிந்த இயக்குநர், சூப்பர் நடிகர் தொடங்கி பிரகாச நடிகர் வரை ஒன்லைன் சொல்லி ஓகே வாங்கிவைத்திருந்தார். ஆனால், அவருடைய கடைசி படம் போதிய கவனம் பெறாததால், முன்னணி ஹீரோக்கள் அவரைப் புறந்தள்ளிவிட்டார்களாம். இத்தனைக்கும் அவர் செய்த படங்களில் ஒன்றுதான் ஃபிளாப் ஆனது. “மனுஷங்க இவ்வளவு மோசமா இருக்காங்களே…” என நொந்து புலம்பும் இயக்குநர், வளர்ந்து வரும் ஹீரோ ஒருவரைவைத்துப் படம் தயாரிக்கும் பணியில் இறங்கி விட்டாராம். தினம்தோறும் பெருகும் ஆவேசத்தில் படத்தை அவரே இயக்கினாலும் ஆச்சர்யத்துக்கு இல்லை என்கிறார்கள்.

பைக் நடிகருக்கு ஜோடியாக, மலையாளத்தில் கொடிகட்டிப் பறக்கும் சீனியர் நடிகையை புக் பண்ணி ஷூட்டிங்கை நடத்திவருகிறார்கள். பைக் நடிகருடன் நடிக்கிற பதற்றமே இல்லாமல் கேஷுவலாக அம்மணி நடிக்க, மெய்ம்மறந்து யூனிட்டே கைதட்டிவிட்டதாம். யூனிட்டில் பைக் நடிகருக்குக் கூட இப்படிப்பட்ட அங்கீகாரம் கிடைக்கவில்லையாம். ஆனாலும், அதை மனவருத்தமாக எண்ணாமல், ‘சிங்கிள் டேக் ஆர்ட்டிஸ்ட்’ என அம்மணியைத் தட்டிக்கொடுத்துப் பாராட்டினாராம் பைக் நடிகர்.

அதிதி ஷங்கர்
அதிதி ஷங்கர்
அதிதி ஷங்கர்
அதிதி ஷங்கர்
அதிதி ஷங்கர்
அதிதி ஷங்கர்
அதிதி ஷங்கர்
அதிதி ஷங்கர்
அதிதி ஷங்கர்
அதிதி ஷங்கர்

எப்போதுமே மிக கவனமாகப் பேசும் பரோட்டா காமெடி நடிகர், பிரகாச நடிகரின் பெருமையைப் பேசி சர்ச்சையில் சிக்கிக் கொண்டார். காவிக் கட்சியினர் அந்த விவகாரத்தைப் பூதாகரமாக மாற்ற, பலருக்கும் போன் பண்ணி வலிய விளக்கம் சொன்னாராம். ஆனாலும், சர்ச்சை கிளப்பியவர்கள் இதில் சமாதானம் ஆகாமல் போக, காவிக் கட்சியின் முன்னணி நிர்வாகிகளை நேரில் சந்திக்கவும் நினைத்தாராம். ஒருகட்டத்தில் என்ன நினைத்தாரோ… ‘நான் தவறாகப் பேசவில்லை. நீங்க என்ன பண்ணணுமோ பண்ணிக்கங்க…’ எனத் தெளிவாகச் சொல்லிவிட்டு, போனை ஆஃப் செய்து விட்டாராம். ஏற்கெனவே இதே சர்ச்சையில் சிக்கிய நடிகர் சொன்ன ஆலோசனையாம் இது.

பிரமாண்ட இயக்குநரின் மகள் நடிக்க முடிவெடுத்தவுடனேயே, சங்க நடிகரின் பெயரைத்தான் ஆசையாகச் சொன்னாராம். ஆனால், அந்தப் பேச்சை எடுத்தவுடனேயே சங்க நடிகர் `நோ’ சொல்லிவிட்டாராம். ஆனாலும் மனம் தளராத வாரிசு நடிகை, ‘என் திறமையால் அவர் மனதை ஈர்த்துக்காட்டுகிறேன்’ எனச் சவால்விட்டாராம். வேறொரு நாயகனுடன் நடித்து, நடிப்புச் சூறாவளியாக நல்ல பெயரும் வாங்கிவிட்டார். இப்போது சங்க நடிகரே தனக்கு ஜோடியாக வாரிசு நடிகையை அணுக, மகிழ்ச்சிப் பெருக்கில் குடும்பமே குதூகலிக் கிறதாம்.

யார் கதை சொல்லப்போனாலும், அந்தக் கதையைப் புறந் தள்ளிவிட்டு, “நான் சொல்லும் படத்தைப் பாருங்கள். அதை வைத்துக் கதை செய்யுங்கள். அவசியம் நான் நடிக்கிறேன்” எனச் சொல்லி, ஏதாவது ஒரு வேற்று மொழிப் படத்தைச் சிபாரிசு செய்கிறாராம் டான்ஸ் நடிகர். வரிசையாக அவர் நடித்த மூன்று படங்கள் மண்ணைக் கவ்வ, “நம்ம ஆட்களுக்குச் சரியா எடுக்கத் தெரியலை…” என்கிறாராம். அடுத்தகட்டமாகத் தனக்கு மகத்தான ஹிட் கொடுக்க, தன்னால் மட்டுமே முடியும் என்றெண்ணி, இயக்கத்தில் குதிக்கவிருக்கிறாராம். அதுவும் வேற்று மொழியில் ஹிட்டடித்த படத்தின் தழுவல்தானாம்!