Published:Updated:

``போராட வேண்டிய அவசியமில்லை; ஸ்டாலின்மீது நம்பிக்கை இருக்கிறது!’’ - ராமதாஸ்

ராமதாஸ்

‘‘வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு விவகாரத்தில் நாம் போராட வேண்டிய அவசியமில்லை. அந்த வழியும் தேவையில்லை. முதலமைச்சர் ஸ்டாலின்மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது’’ என்கிறார் பா.ம.க நிறுவனர் ராமதாஸ்.

``போராட வேண்டிய அவசியமில்லை; ஸ்டாலின்மீது நம்பிக்கை இருக்கிறது!’’ - ராமதாஸ்

‘‘வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு விவகாரத்தில் நாம் போராட வேண்டிய அவசியமில்லை. அந்த வழியும் தேவையில்லை. முதலமைச்சர் ஸ்டாலின்மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது’’ என்கிறார் பா.ம.க நிறுவனர் ராமதாஸ்.

Published:Updated:
ராமதாஸ்

ன்னியர் சங்கம் சார்பில் ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டையில் நடைபெற்ற வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில், பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசுகையில், ‘‘இட ஒதுக்கீடு என்ற வார்த்தையை நாம் அப்புறப்படுத்திவிட்டோம். யாரோ ஒருவர் பார்த்து ஒதுக்குவதுதான் இட ஒதுக்கீடு. நாம் கேட்பதும், பெற்றதும் இட பங்கீடு. வன்னியர் சங்கம் ஆரம்பிக்காத அந்தக் காலத்தில், பண்ருட்டி பக்கமாக நான் போய்க்கொண்டிருந்தேன். ரோட்டோரத்தில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த சிறுவனை அருகில் அழைத்து, ‘இட பங்கீடுப் பற்றி உனக்கென்ன தெரியும், ஒரு தேங்காயை மூன்று பேருக்கு எப்படி பகிர்ந்து கொடுப்பாய்?’ என்று கேட்டேன். அந்தச் சிறுவனோ, ‘ஒரு கத்தியால் ரெண்டு மூடியாக தேங்காயை உடைத்து, கீத்து கீத்தா வெட்டி பத்தைப்போட்டு 3 பேரையும் வரிசையில் நிற்கச்சொல்லி ஆளுக்கொரு பத்தையாகக் கொடுப்பேன்’ என்று எனக்குப் பாடம் சொல்லிக்கொடுத்தான்.

ராமதாஸ்
ராமதாஸ்

இப்படி, நம் போராட்டத்தால் கிடைத்த 20 சதவிகிதத்தைத் தான் 108 சாதிகளுக்கு கொடுத்தார்கள். அது பின்னாளில் 117 சாதியாக மாறி, அவ்வளவுப் பேருக்கும் போய்விட்டது. நமக்கு ஆரம்பத்தில் கொஞ்சம் கிடைத்தது. அப்புறம் ஒன்றும் கிடைக்கவில்லை. அதனால்தான் வன்னியர்களுக்கு 10.5 சதவிதிகம் ஒதுக்க வேண்டும் எனச்சொல்லி, சென்றமுறை ஆட்சியில் இருந்தவர்களிடமும் சட்டம் இயற்றச் சொன்னோம். சதிகாரர்களுடைய சதியாலயே உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டியதாயிற்று. இந்த ஆட்சியில், வன்னியர்களுக்காக அதனை சட்டமாக்குவதாக முதலமைச்சர் சொல்லியிருக்கிறார். சென்ற வாரம்கூட முதலமைச்சரிடம் தொலைப்பேசியில் 15 நிமிடங்கள், இதுபற்றிதான் பேசினேன். சட்டமாக்கும் முயற்சியில் முதலமைச்சர் ஈடுபட்டிருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதை முன்னெடுத்து செல்வதிலும், முனைப்புக் காட்டுவதிலும், அதிகாரிகளுக்கு ஆலோசனை சொல்வதிலும் ஜி.கே.மணி ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார். ஆக, 10.5 சதவிகிதம் நமக்கு நிச்சயமாக கிடைக்கும். எனக்கு முதலமைச்சர்மீது நம்பிக்கை இருக்கிறது. இதற்காக நாம் போராட வேண்டிய அவசியமுமில்லை. அந்த வழியும் தேவையில்லை. வீரம் என்பது நம் ரத்தத்தில் ஊறிப்போயிருக்கிறது. அந்த வீரத்தோடு விவேகமும் வந்திருக்கிறது. வீரம் பின்வாங்கப்படவில்லை. விவேகத்தோடு காயை நகர்த்தவேண்டியிருக்கிறது. அதற்காக எல்லோரும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வீட்டில் அடுப்பு எரிந்தால் அடுத்த வீட்டில் பசி இருக்காது. அப்படி வாழ்ந்தது நம்முடைய சமுதாயம். உலகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்திருக்கின்றன.

ராமதாஸ்
ராமதாஸ்

ஆனால், நம்முடைய 7 நாள் சாலை மறியல் போராட்டத்தைப்போல உலகிலேயே வேறு எந்தப் போராட்டமும் நடந்ததே கிடையாது. அப்போது, அமெரிக்காவிலிருந்து வெளிவந்த ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையில்கூட 7 நாள் போராட்டம் பற்றி கால் பத்திக்கு செய்தி வெளியிட்டிருந்தார்கள். பெரிய வரலாறு அது. அதன்பின்னர், சோனியா அம்மையார் வீட்டில் நடந்த சர்வக்கட்சி கூட்டத்திலும், ‘கல்வியில் ஓ.பி.சி மக்களுக்கு இடஒதுக்கீடு’ கேட்டு நான் கொதித்துப்போனேன். என்னுடைய ஆவேசத்தைப் பார்த்து, சோனியா அம்மையார் அருகில் வந்து, சமாதானம் செய்தார். பெண் குழந்தைகள் பிறந்தால், ‘பெண் தெய்வங்களாக’ வணங்க வேண்டும். பெண் குழந்தைகளைப் பெற்றால் கோயிலுக்குப் போக வேண்டியதில்லை. தெய்வத்தையும் தொழ வேண்டியதில்லை. அவரவர் பெண் குழந்தைகளைப் பார்த்தாலே போதும். பெண்கள் இல்லாமல் நாம் ஏது. அந்த வகையில் பெண்களைப் போற்றுவோம்’’ என்றார்.