Published:Updated:

`புதிய கல்விக்கொள்கையை வடிவமைக்க மாநில அளவிலான குழு' - மு.க.ஸ்டாலின் உத்தரவு

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டின் புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க வல்லுநர்கள் அடங்கிய மாநில அளவிலான குழுவை அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ``கடந்த 2021-22-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் `தமிழ்நாட்டின் வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிர்காலக் குறிக்கோள்களுக்கு ஏற்ப, மாநிலத்திற்கெனத் தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கை ஒன்றை வகுப்பதற்கு, கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்றை இந்த அரசு அமைக்கும்' என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும்விதமாக, தமிழகத்தில் தற்போது இந்தகுழு அமைக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் புதிய கல்விக் கொள்கைக்கான குழுவை தமிழக அரசு அமைத்திருக்கிறது. இக்குழுவின் உறுப்பினர்களாக பேராசிரியர் எல். ஜவஹர்நேசன், இராமானுஜம், பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில், பேராசிரியர் திரு. இராம சீனிவாசன், முனைவர் அருணா ரத்னம், எஸ்.இராமகிருஷ்ணன், விஸ்வநாதன் ஆனந்த், டி.எம்.கிருஷ்ணா, துளசிதாஸ், முனைவர் ச.மாடசாமி, இரா.பாலு, தலைமை ஆசிரியர், ஜெயஸ்ரீ தாமோதரன் ஆகிய 12 பேர் இந்த மாநில கல்விக் கொள்கை குழுவில் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவானது புதிய கல்விக்கொள்கையை வடிவமைத்து, ஓராண்டு காலத்திற்குள் தனது பரிந்துரையை அரசுக்கு அளிக்கும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism