Published:Updated:

`மதவெறி பாஜக, கோட்சேவின் வாரிசுகள்..!' - ஸ்டாலின் விமர்சனத்தை எப்படிப் பார்க்கிறது பாஜக?

மு.க.ஸ்டாலின் - பா.ஜ.க மோதல்

`தமிழ்நாட்டு மக்களின் மனதில் மதவெறியை விதைத்து, கலவரத்தைத் தூண்டிவிட்டு, அரசியல் குளிர்காய அவசரம் காட்டும் பா.ஜ.க-வின் சீரழிவு அரசியலை அம்பலப்படுத்துங்கள்.' - மு.க.ஸ்டாலின்.

`மதவெறி பாஜக, கோட்சேவின் வாரிசுகள்..!' - ஸ்டாலின் விமர்சனத்தை எப்படிப் பார்க்கிறது பாஜக?

`தமிழ்நாட்டு மக்களின் மனதில் மதவெறியை விதைத்து, கலவரத்தைத் தூண்டிவிட்டு, அரசியல் குளிர்காய அவசரம் காட்டும் பா.ஜ.க-வின் சீரழிவு அரசியலை அம்பலப்படுத்துங்கள்.' - மு.க.ஸ்டாலின்.

Published:Updated:
மு.க.ஸ்டாலின் - பா.ஜ.க மோதல்

தமிழகத்தில் நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தளுக்கான களம் சூடுபிடித்துவருகிறது. இடப் பங்கீடு, கூட்டணி, தனித்துப் போட்டி, அதிருப்தி, விமர்சனங்கள் என ஒவ்வொரு கட்சியின் நகர்வும் தேர்தலைச் சுற்றியே சுழன்றுகொண்டிருக்கிறது. அந்த வகையில், திமுக-வுக்கும் பாஜக-வுக்குமான மோதல், முரண்பாடுகளும் தீவிரமடைந்திருக்கின்றன.

உள்ளாட்சித் தேர்தல்
உள்ளாட்சித் தேர்தல்

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், வரும் பிப்ரவரி 19-ம் நாள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறபெறவிருக்கும் நிலையில் வேட்பாளர்களைத் தேர்வு செய்வது, வாக்குச் சேகரிப்பது, தோழமைக் கட்சிகளுக்கு இடத்தை பகிர்ந்தளிப்பது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளை அறிவுறித்தி தி.மு.க தொண்டர்களுக்குக் கடிதம் ஒன்றை எழுதினார். அந்தக் கடிதத்தில், மக்களிடம் தொண்டர்களின் அணுகுமுறைகள் எப்படி இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டதோடு, அ.தி.மு.க பா.ஜ.க-வையும் அம்பலப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

குறிப்பாக, `அ.தி.மு.க தலைமையினால் கடந்த 10 பத்து ஆண்டுகளாக பட்ட பாட்டை நினைவுபடுத்துங்கள்' என்று குறிப்பிட்டார். மேலும், தஞ்சை பள்ளியில் படித்துவந்த அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலை விவகாரத்தில் பா.ஜ.க-வின் செயல்பாடுகளை மறைமுகமாகச் சுட்டிக்காட்டும்விதத்தில், `தமிழ்நாட்டு மக்களின் மனதில் மதவெறியை விதைத்து, கலவரத்தைத் தூண்டிவிட்டு, அரசியல் குளிர்காய அவசரம் காட்டும் பா.ஜ.க-வின் சீரழிவு அரசியலை அம்பலப்படுத்துங்கள்' எனவும் தி.மு.க தொண்டர்களிடம் கடிதத்தின் வாயிலாகக் கேட்டுக்கொண்டார்.

ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதம்
ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதம்

அதேபோல, மகாத்மா காந்தி நினைவுநாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் சேர்ந்து மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இருவரும் இருக்கும் அந்தப் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, ``மக்களின் நலனே தேசத்தின் நலன் என உழைத்த உத்தமர் காந்தியடிகளின் நினைவுநாளில், அன்பும் சகோதரத்துவமும் கொண்டு ஒற்றுமை பேணிட உறுதியேற்று, கோட்சேவின் வாரிசுகளுக்கும் அவர்களது தீய எண்ணங்களுக்கும் நம் இந்திய மண்ணில் இடமில்லை எனச் சூளுரைப்போம்!" என மறைமுகமாக பா.ஜ.க-வைத் தாக்கியும் பதிவிட்டிருந்தார்.

காந்தி நினைவுநாளில் முதல்வரும் ஆளுநரும்
காந்தி நினைவுநாளில் முதல்வரும் ஆளுநரும்

இதுமட்டுமல்லாமல், குடியரசு தினத்தன்று ஆளுநர் நீட் தேர்வை ஆதரித்துப் பேசியதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக, கடந்த சில நாள்களுக்கு முன்னர், ​தி.மு.க-வின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலி, `கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா? இது நாகலாந்து அல்ல.. தமிழ்நாடு!' என தமிழக ஆளுநர் ரவியை விமர்சித்துக் கட்டுரை எழுதியிருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதைக் கண்டித்து, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ``முரசொலி பத்திரிகையில் தமிழக ஆளுநர் குறித்து எழுதியிருப்பது அவதூறுதான். கருத்து விமர்சனத்துக்கும், அவதூறுக்கும் நூலிழை வித்தியாசம்தான் உள்ளது. இன்றைக்கு அதை அவர்கள் தாண்டிவிட்டார்கள். அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஆளுநர் என்பவர் மாநிலத்தின் ஒரு முக்கிய பொறுப்பு வகிப்பவர். அவரை அவதூறு செய்திருப்பதை, நடுநிலையாக இருக்கக்கூடிய எந்தவொரு சாமானியனும் கண்டிக்க வேண்டும்!" என பதிலுரைத்திருந்தார்.

மாநிலத் தலைவர் அண்ணாமலை-பாஜக
மாநிலத் தலைவர் அண்ணாமலை-பாஜக

இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினே, `மதவெறி பா.ஜ.க, கோட்சேவின் வாரிகள்' என நேரடியாகவும் மறைமுகமாகவும் பா.ஜ.க-வைத் தாக்கிப் பேசியிருப்பது தமிழக அரசியல் களத்தில் தற்போது பேசுபொருளாகியிருக்கிறது. இது குறித்து தமிழக பா.ஜ.க பொதுச்செயலாளர் கரு.நாகராஜனிடம் பேசினோம். ``பா.ஜ.க வளர்கிறது; அதைப் பார்த்து தி.மு.க பதறுகிறது! பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை விவகாரத்தில் நீதி கேட்டு பா.ஜ.க போராடியதை, மதவெறிப் பிரசாரம், கலவரத்தைத் தூண்டுதல் என பொய் பேசிக்கொண்டிருக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, மதுரை உயர் நீதிமன்றம் லாவண்யா வழக்கு விசாரணையை சி.பி.ஐ-க்கு மாற்றி உத்தரவிட்டத்தை பதிலாகச் சொல்கிறேன்.

கரு.நாகராஜன்
கரு.நாகராஜன்

மாணவியின் மரண வாக்குமூலத்தில் மதமாற்ற வற்புறுத்தல் காரணம் எதுவும் இல்லை, நாங்கள் தீர விசாரித்துவிட்டோம் என்று கூறி தற்கொலை வழக்கை மூடிமறைக்கப் பார்த்தது தி.மு.க அரசாங்கம். இப்போது சி.பி.ஐ விசாரணையில் உண்மை வெளிவரப்போகிறது.

ஒரு மதத்தை புண்படுத்துவதும், புறக்கணிப்பதும்தான் மதவெறி. நாங்கள் எந்த மதத்தையும் புறக்கணிக்கவில்லை; எங்கள் கட்சியிலும் கிறிஸ்தவ, இஸ்லாமிய சிறுபான்மையினர்கள் நிர்வாகிகளாக இருக்கிறார்கள். உண்மையில், மதவெறிக்கு எடுத்துக்காட்டே தி.மு.க-தான்! மக்களிடம் அதை தோலுரித்துக் காட்டுவோம்!" என காட்டமாக பதிலளித்தார்.

தற்கொலை செய்துகொண்ட மாணவி லாவண்யா, பா.ஜ.க போராட்டம்
தற்கொலை செய்துகொண்ட மாணவி லாவண்யா, பா.ஜ.க போராட்டம்

மேலும் ஆளுநர் குறித்த விமர்சனங்கள் குறித்துக் கேட்டபோது, ``ஆளுநர் இவரைப்போல பல அரசியல்வாதிகளைப் பார்த்துவிட்டு இங்கு வந்திருக்கிறார். இப்படி `டிப்' வைத்து பேசுவதை கேட்டெல்லாம் ஆளுநர் அஞ்சப்போவதில்லை; மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்கிற சட்ட அதிகாரம் அவருக்கு இருக்கிறது. இவர்களால் சட்டமன்றத்தில் மட்டும்தான் ஆளுநர் என்ன பேச வேண்டும் என எழுதிக் கொடுக்க முடியும். பொதுவெளியிலும் அலுவலகத்திலும் அவர் தனது சொந்தக் கருத்தைத் தெரிவிக்க உரிமை இருக்கிறது. அவர் மனதைப் புண்படுத்தும்விதமாக தி.மு.க நடந்துகொள்வது மிகப்பெரிய தவறு!" என கரு.நாகராஜன் தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism