Published:Updated:

இளம்பெண் பாலியல் வன்கொடுமை: `அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும்' - மு.க.ஸ்டாலின் உத்தரவு!

டி.ஜி.பி சைலேந்திரபாபு! - ஸ்டாலின்

விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளைக் கைதுசெய்து அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இளம்பெண் பாலியல் வன்கொடுமை: `அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும்' - மு.க.ஸ்டாலின் உத்தரவு!

விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளைக் கைதுசெய்து அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Published:Updated:
டி.ஜி.பி சைலேந்திரபாபு! - ஸ்டாலின்

விருதுநகரில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரைப் பள்ளி மாணவர்கள் நான்கு பேர், தி.மு.க நிர்வாகிகள் உட்பட எட்டு பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பாதிக்கப்பட்ட இளம்பெண் இது குறித்து விருதுநகர் ஊரக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் ஹரிஹரன், மாடசாமி, பிரவீன், ஜுனைத் அகமது, பள்ளி மாணவர்கள் நான்கு பேர் என எட்டுப் பேரும் கைதுசெய்யப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டுள்ள ஜூனைத் அகமது, விருதுநகர் 10-வது வார்டு திமுக இளைஞர் அணி அமைப்பாளராகப் பதவி வகித்துவருகிறார். இளம்பெண்ணின் காதலன் என்று கூறப்படும் ஹரிஹரனும் 22-வது வார்டு இளைஞரணி உறுப்பினராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தச் செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனத்தைத் தெரிவித்துவருகின்றனர்.

ஜுனைத்
ஜுனைத்

இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இது தொடர்பாக, ''விருதுநகரில் இளம்பெண் ஒருவரை திமுக பிரமுகர் உட்பட எட்டுப் பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி அவரது வாழ்வைச் சீரழித்துள்ள கொடுஞ்செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். கண்துடைப்பு கைது நடவடிக்கை என்பதாக இல்லாமல், திமுக அரசு இந்தக் குற்றத்துக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் பன்மடங்கு இந்த அரசின் கீழ் அதிகரித்திருக்கின்றன. இதுதான் தாங்கள் பெண்களுக்கு அளிக்கும் பாதுகாப்பா?'' எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இந்தச் சம்பவம் தொடர்பாக தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ``விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கில் தீவிர விசாரணை மேற்கொண்டு நேரடியாகவும் மறைமுகமாகவும் குற்றத்தில் ஈடுபட்ட அனைத்துக் குற்றவாளிகளையும் கைதுசெய்து அவர்கள் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன் அடிப்படையில் டி.எஸ்.பி அர்ச்சனாவிடம் வழக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஐ.ஜி அஸ்ரா கார்க், டி.ஜி.ஜி பொன்னி மேற்பார்வையில் வழக்கு விசாரணை நடைபெற்றுவருகிறது´´ என டி.ஜி.பி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

இளம்பெண் பாலியல் வன்கொடுமை: `அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும்' - மு.க.ஸ்டாலின் உத்தரவு!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism