Published:Updated:

பாதியில் வெளியேறிய ஆளுநர்: "முழு மரியாதை அளிக்கும் வகையில் நடந்துகொண்டோம்" - ஸ்டாலின் விளக்கம்..!

பாதியில் வெளியேறிய ஆளுநர்

சட்டப்பேரவை உரையில் பெரியார், அண்ணா, காமராஜர், கருணாநிதி பெயர்களை ஆளுநர் ஆர்.என்.ரவி தவிர்த்த சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

பாதியில் வெளியேறிய ஆளுநர்: "முழு மரியாதை அளிக்கும் வகையில் நடந்துகொண்டோம்" - ஸ்டாலின் விளக்கம்..!

சட்டப்பேரவை உரையில் பெரியார், அண்ணா, காமராஜர், கருணாநிதி பெயர்களை ஆளுநர் ஆர்.என்.ரவி தவிர்த்த சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

Published:Updated:
பாதியில் வெளியேறிய ஆளுநர்

இந்த ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அதில் அரசு தயார்செய்து கொடுத்த உரையை ஆளுநர் வாசிக்க வேண்டும் என்பது மரபாக இருந்துவருகிறது. ஆனால் ஆளுநர், அரசு கொடுத்த உரை தயாரிப்பில் பல செய்திகளைத் தவிர்த்துவிட்டு வாசித்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாகப் பேசிய முதல்வர் ஸ்டாலின், "ஆளுநருக்கு அனுப்பப்பட்ட உரை குறிப்புகள், ஏற்கெனவே ஆளுநருக்கு அரசால் அனுப்பப்பட்டு, அவரால் ஏற்பளிக்கப்பட்டு அதன் பின்னர் அச்சடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இன்றைக்கு அனைத்து உறுப்பினர்களும் கணினியிலும், தேவைப்படும் உறுப்பினர்களுக்கு அச்சிட்டப் பிரதிகளாகவும் வழங்கப்பட்டிருக்கின்றன.

நம்முடைய திராவிட மாடல் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறாக செயல்பட்டுவரும் ஆளுநரின் செயல்பாடுகள் முற்றிலும் எதிர்கொள்ள இயலாத நிலையில் இருக்கிறது. அரசின் சார்பாக நாம் இருக்கின்ற காரணத்தால், சட்டப்பேரவை விதிகளைப் பின்பற்றி ஆளுநர் உரையைத் தொடங்குவதற்கு முன்னர், எங்களது எதிர்ப்பு எதையும் நாங்கள் பதிவுசெய்யவில்லை. பேரவையில் மிகவும் கண்ணியத்தோடு அரசமைப்புச் சட்டத்தின் கீழ் உரையாற்ற வந்துள்ள ஆளுநருக்கு, முழு மரியாதை அளிக்கும் வகையில் நடந்துகொண்டோம்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

ஆனாலும் எங்களது கொள்கைகளுக்கு மாறாக மட்டுமல்ல, அரசின் கொள்கைகளுக்கும் மாறாக நடந்துகொண்ட ஆளுநர், தமிழ்நாடு அரசு தயாரித்து, ஆளுநரால் இசைவளிக்கப்பட்டு, அச்சிடப்பட்ட உரையை முறையாக, முழுமையாகப் படிக்காதது மிகவும் வருந்தத்தக்கது மட்டுமல்ல, சட்டமன்ற மரபுகளை மீறிய ஒன்றாகும்.

ஆகவே, சட்டப்பேரவை விதி 17- ஐ தளர்த்தி இன்று அச்சிடப்பட்டு பேரவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் ஆங்கில உரை, பேரவைத் தலைவரால் படிக்கப்பட்ட தமிழ் உரை ஆகியன மட்டும் அவைக்குறிப்பில் ஏற வேண்டும் எனும் தீர்மானத்தையும், அதேபோல இங்கே அச்சிடப்பட்ட பகுதிகளுக்கு மாறாக ஆளுநர் இணைத்தும், விடுத்தும் படித்த பகுதிகள் இடம் பெறாது என்னும் தீர்மானத்தையும் முன்மொழிகிறேன். தீர்மானத்தைப் பேரவை ஒருமனதாக நிறைவேற்ற வேண்டும்" என வலியுறுத்தியிருந்தார்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின் பேசிக்கொண்டிருக்கும்போதே ஆளுநர் பாதியில் எழுந்து சென்றிருக்கிறார். தேசியகீதம் முடிந்த பின்புதான் ஆளுநர் வெளியேற வேண்டும் என்ற மரபையும் ஆளுநர் ஆர்.என்.ரவி மீறியிருப்பதாகக் குற்றச்சாட்டு நீண்டுகொண்டே செல்கிறது.

இந்த நிலையில், ஆளுநர் தவிர்த்த வரிகள் தொடர்பாக வெளியான தகவலில், ``அரசு தயாரித்துக் கொடுத்த உரையில், சமூகநீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல் ஆகிய கொள்கைகள் இவ்வரசின் அடித்தளமாக அமைந்துள்ளன. தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற மாபெரும் தலைவர்களின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் பின்பற்றி பார் போற்றும் திராவிட மாடல் ஆட்சியை இந்த அரசு வழங்கிவருகிறது" என்ற பத்தியை படிக்காமல் தவித்திருக்கிறார்.

வானதி சீனிவாசன் - ஸ்டாலின்
வானதி சீனிவாசன் - ஸ்டாலின்

மேலும், தமிழ்நாடு அரசு (Tamilnadu government) என்ற இடங்களில் this government என மாற்றிப் படித்திருக்கிறார். இது தொடர்பாக பல்வேறு கண்டனங்கள் எழுந்திருக்கின்றன.

ஆனால், பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்," ஆளுநர் உரையாற்றும்போது ஆளும் அரசு, கூட்டணிக் கட்சிகளைத் தூண்டிவிட்டிருக்கிறது. ஆளுநரை தம் சித்தாந்தத்தைப் பரப்பும் நபராக அரசு கருதமுடியாது. மாநில அரசு, ஆளுநர் ஒப்புதல் பெறாமல், அவருடைய உரையைப் படித்தாக வேண்டுமென எப்படிக் கூறமுடியும்?" எனத் தெரிவித்திருக்கிறார்.