Published:Updated:

``மூர்த்தி ஒரே கல்லில் பல மாங்காய்களை அடிப்பார்" - பிரமாண்ட திருமணத்தைப் பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

அமைச்சர் மூர்த்தி வீட்டு திருமணவிழா

``திமுக வெற்றிபெற்று ஆட்சி அமைத்தபோது மூர்த்திக்கு அமைச்சர் பதவி தர முடிவானபோது கோபக்காரராச்சே என்று பயந்தேன். ஆனால், கோபம் இருக்குமிடத்தில்தான் குணம் இருக்கும் என்ற அடிப்படையில் அவருக்கு அமைச்சர் பொறுப்பைக் கொடுத்தோம்.” - ஸ்டாலின்

``மூர்த்தி ஒரே கல்லில் பல மாங்காய்களை அடிப்பார்" - பிரமாண்ட திருமணத்தைப் பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

``திமுக வெற்றிபெற்று ஆட்சி அமைத்தபோது மூர்த்திக்கு அமைச்சர் பதவி தர முடிவானபோது கோபக்காரராச்சே என்று பயந்தேன். ஆனால், கோபம் இருக்குமிடத்தில்தான் குணம் இருக்கும் என்ற அடிப்படையில் அவருக்கு அமைச்சர் பொறுப்பைக் கொடுத்தோம்.” - ஸ்டாலின்

Published:Updated:
அமைச்சர் மூர்த்தி வீட்டு திருமணவிழா

``எதையும் சிறியதாகச் செய்ய மாட்டார், பிரமாண்டமாகச் செய்வார்" என்று அமைச்சர் பி.மூர்த்தியின் மகனின் பிரமாண்டத் திருமணவிழாவைப் பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டிப் பேசியிருக்கிறார்.

திருமண விழா
திருமண விழா

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூவும், ஆர்.பி.உதயகுமாரும் போட்டி போட்டுக்கொண்டு மதுரை நகரமே குலுங்கக் குலுங்க பிரமாண்ட விழாக்களை நடத்தி மக்களை அவஸ்தைப்படவைத்தார்கள். ஒரு கட்டத்தில் அது மக்கள் மத்தியில் வெறுப்பைத்தான் ஏற்படுத்தியது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதற்குப் பிறகு கோவிட் காலத்தில் பிரமாண்ட விழாக்கள் குறைந்தன. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு அரசு விழாக்களும், தி.மு.க நிகழ்ச்சிகளும் நடந்துவந்தன.

இந்த நிலையில்தான் அமைச்சர் பி.மூர்த்தி, தன் மகன் திருமணத்தை மதுரை நகரமே அதிரும் வகையில் பிரமாண்டமாக நடத்தி முடித்திருக்கிறார்.

பி.மூர்த்தி
பி.மூர்த்தி

பிரமாண்டமான முறையில் திருமணவிழா எடுத்த மூர்த்தியை ஆதரித்து, பாராட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருக்கிறார்.

திருமணத்தை நடத்திவைத்த மு.க.ஸ்டாலின் அப்படி என்னதான் பாராட்டிப் பேசினார்? "அமைச்சர் மூர்த்தியின் இல்லத் திருமணவிழாவைத் தலைமை தாங்கி நடத்துவதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த விழாவை மணவிழா என்று விளம்பரப்படுத்தாமல், மாநாடு என்று விளம்பரப்படுத்தியிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.

திருமண விழா
திருமண விழா

அவர் கட்சி நிகழ்ச்சி உள்ளிட்ட எதையும் சிறியதாகச் செய்ய மாட்டார். பிரமாண்டமாக நடத்துவார். எதிலும் முத்திரை பதிப்பார். தன் மகன் திருமண விழாவையும் தி.மு.க ஆட்சியின் சாதனைகளைச் சொல்லும் வகையில் நடத்துகிறார்.

ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பார்கள். ஆனால், மூர்த்தி ஒரு கல்லில் பல மாங்காய்கள் அடிப்பார். தி.மு.க வெற்றிபெற்று ஆட்சி அமைத்தபோது மூர்த்திக்கு அமைச்சர் பதவி தர முடிவானபோது, `கோபக்காரராச்சே’ என்று நான் பயந்தேன். ஆனால், கோபம் இருக்குமிடத்தில்தான் குணம் இருக்கும் என்ற அடிப்படையில் அவருக்கு அமைச்சர் பொறுப்பைக் கொடுத்தோம். ஆனாலும் அந்த பயம் இருந்தது. ஆனால், பொறுப்பேற்ற பின்பு பொறுமையின் சிகரமாகிவிட்டார். பதவி ஏற்ற பிறகு பத்திரப்பதிவு, வணிகவரித்துறைகளில் நான் எதிர்பார்த்ததைவிட மிகச் சிறப்பாகச் செயல்ப்பட்டுவருகிறார்.

திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் மணமக்களை வாழ்த்த நான் குறிப்புகளை எடுத்துச் செல்வதில்லை. ஆனால், இந்தத் திருமண விழாவில் பேசுவதற்காக குறிப்புகளை எடுத்து வந்திருக்கிறேன். அந்த அளவுக்கு மூர்த்தி இந்தத் துறைகளில் பல சாதனைகளைச் செய்திருக்கிறார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி, சபரீசன்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி, சபரீசன்

நிதிப் பற்றாக்குறையால் அரசு தவித்தபோது அவர் வகித்த துறை மூலம் அரசுக்கு 13,913 கோடி ரூபாய் வருவாயைப் பெற்றுத் தந்திருக்கிறார். பத்திரப்பதிவுத்துறையில் பல புதிய திட்டங்களைக் கொண்டு வந்தார்.

அ.தி.மு.க ஆட்சியில் நடந்த போலி பத்திரப்பதிவுகளை ஒழிக்கும் வகையில் இந்தியவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற்றிருக்கிறோம்.

மூர்த்தி பெரியதா, கீர்த்தி பெரியதா என்று என்னிடம் கேட்டால் மூர்த்திதான் பெரிதென்று சொல்வேன். அந்த அளவுக்கு உழைத்திருக்கிறார்" என்று பேசினார்.

முதலமைச்சரின் பாராட்டு பி.மூர்த்தியை மகிழ்ச்சிப்படுத்தியது மட்டுமல்லாமல், இது போன்ற பிரமாண்ட விழாக்களைத் தொடர்ந்து நடத்த மற்ற அமைச்சர்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் உற்சாகத்தைக் கொடுக்கும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.