Published:Updated:

``மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்குவது இலவசம் இல்லை... கடமை!''- முதல்வர் ஸ்டாலின்

புதுமைப்பெண் திட்ட தொடக்கவிழா

``இல்லம் தேடிக் கல்வி, நான் முதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டங்கள் நமது ஆட்சியின் அடையாளங்கள்.'' - மு.க.ஸ்டாலின்!

``மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்குவது இலவசம் இல்லை... கடமை!''- முதல்வர் ஸ்டாலின்

``இல்லம் தேடிக் கல்வி, நான் முதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டங்கள் நமது ஆட்சியின் அடையாளங்கள்.'' - மு.க.ஸ்டாலின்!

Published:Updated:
புதுமைப்பெண் திட்ட தொடக்கவிழா

மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். அதையடுத்து தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், அந்த நிகழ்ச்சியில் பேசினார்.

அப்போது பேசிய அவர், `` புதுமைப்பெண் திட்டத்தால் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி அதிகரிக்கும். இல்லம் தேடிக் கல்வி, நான் முதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டங்கள் நமது ஆட்சியின் அடையாளங்கள். கல்வி எனும் நீரோடை எந்த வேறுபாடுமின்றி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் உருவானதே நீதிக்கட்சி. அனைவருக்குமான வளர்ச்சி, எல்லாருக்கும் எல்லாம் என்பதே அரசின் நோக்கம். நீதிக்கட்சியின் நீட்சியே திராவிட இயக்க ஆட்சி. ஏழை, பணக்காரர், உயர்ந்த சாதி, தாழ்த்தப்பட்ட சாதி, கிராமம், நகரம் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்பதுதான் நீதிக்கட்சியின் நோக்கம். திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கையும் இதுதான். மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்குவதை இலவசமாக நினைக்கவில்லை, அதைத் தமிழ்நாடு அரசு கடமையாகக் கருதுகிறது.

``மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்குவது இலவசம் இல்லை... கடமை!''- முதல்வர் ஸ்டாலின்

அன்றைய காலகட்டத்தில் ஆண்கள் மட்டும்தான் படிக்க முடியும் என்ற நிலை இருந்தது. அப்போது இட ஒதுக்கீட்டையும், பள்ளிகளையும் உருவாக்கியது நீதிக்கட்சி. அந்தச் சமூகநீதியை அரசியல்ரீதியாகக் காப்பாற்றியவர் தந்தை பெரியார். ஆட்சிரீதியாக அதைக் காத்தவர் பெருந்தலைவர் காமராஜர். பேரறிஞர் அண்ணா, கலைஞர் அவர்களின் வழித்தடத்தில் நம்முடைய திராவிட மாடல் அரசு அமைந்திருக்கிறது.

பெண்கள் பட்டம் பெற்றதோடு நின்றுவிடாமல் தகுதியான வேலையில் சேருங்கள். பெண்களுக்குப் பொருளாதார விடுதலை என்பது மிக மிக முக்கியம். தகுதியுள்ள வேலைவாய்ப்புகளை அங்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள். படிக்கும் காலத்தில் திறமையாகச் செயல்படக்கூடிய பெண்கள் திருமணத்துக்குப் பிறகு வீட்டுக்குள்ளேயே முடங்கிப் போய்விடுகிறார்கள். கல்வியறிவும், கலைத்திறனும், தனித்திறமைகளும்தான் யாராலும் அழிக்க முடியாத சொத்துகள். அவற்றைப் பெண்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.

``மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்குவது இலவசம் இல்லை... கடமை!''- முதல்வர் ஸ்டாலின்

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜிரிவால் தமிழ்நாட்டில் 26 தகைசால் பள்ளிகள் மற்றும் 15 மாதிரிப் பள்ளிகளைத் தொடங்கிவைத்தார். இது தொடர்பாக பேசிய அவர், ``முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு வந்தபோது பள்ளிகளைப் பார்வையிட வேண்டும் என என்னிடம் கேட்டுக்கொண்டார்.

தனியார் பள்ளிகளுக்கு நிகரான அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி அளித்தால் மட்டுமே இந்தியா வளர்ந்த நாடாக உருவாகும். அனைவருக்கும் இலவசமான, தரமான கல்வி கிடைக்கப்பெறுவதை அரசு உறுதிசெய்ய வேண்டும். புதுமைப்பெண் திட்டம் உட்பட கல்வித்துறையில் பல புதிய முன்னெடுப்புகளை எடுத்துவரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். இந்தியாவுக்கே வழிகாட்டும் புரட்சிகரமான திட்டம்தான் புதுமைப்பெண் திட்டம்” என்றார்.