Published:Updated:

திமுக தலைவராக 5-ம் ஆண்டில் மு.க.ஸ்டாலின் - தந்தையைக் குறிப்பிட்டு உருக்கம்!

மு.க.ஸ்டாலின் ( M.K Stalin | Twitter )

2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 28-ம் தேதி தி.மு.க தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற நிலையில், இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடைகின்றன.

திமுக தலைவராக 5-ம் ஆண்டில் மு.க.ஸ்டாலின் - தந்தையைக் குறிப்பிட்டு உருக்கம்!

2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 28-ம் தேதி தி.மு.க தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற நிலையில், இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடைகின்றன.

Published:Updated:
மு.க.ஸ்டாலின் ( M.K Stalin | Twitter )

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க தலைவராக இன்று ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 28-ம் தேதி தி.மு.க தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற நிலையில், இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதனையொட்டி இன்று காலை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா, கருணாநிதியின் நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்தினார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஸ்டாலின் தி.மு.க-வின் இளைஞர் அணி செயலாளர், துணை பொதுச்செயலாளர், பொருளாளர், செயல் தலைவர், மேயர், சட்டமன்ற உறுப்பினர், உள்ளாட்சித் துறை அமைச்சர், துணை முதலமைச்சர் என பல்வேறு பொறுப்புகளை வகித்து... தற்போது அந்தக் கட்சியின் தலைவராக செயலாற்றி வருகிறார்.

இந்த நிலையில், இது தொடர்பாக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ``தகைசால் தந்தையே, தன்னிகரற்ற தலைவரே, முதல்வர்களில் மூத்தவரே, கலையுலக வேந்தரே... எங்களின் உயிரே! உணர்வே... தாங்கள் வகித்த தி.மு.க தலைவர் பொறுப்பில் நான் அமர்ந்து நான்கு ஆண்டுகள் நிறைவடைந்து ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன். ஒவ்வொரு அடியும் - நீங்கள் அமைத்த படியில்தான் ஏறுகிறேன். உங்கள் சொற்படியே நடக்கிறேன். அதனால்தான் வென்றபடியே இருக்கிறேன்! மேலும் வெல்ல, மென்மேலும் வாழ்த்துங்கள்'' எனப் பதிவிட்டிருக்கிறார்.