Published:Updated:

`சமூகநீதியில் நம்பிக்கை கொண்ட நாம், ஒன்றிணைய வேண்டும்!’ - 37 தலைவர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

ஸ்டாலின்

``அனைத்து இந்தியச் சமூக நீதி கூட்டமைப்பில் இணையுமாறு” ஓபிஎஸ் உட்பட 37 தலைவர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

`சமூகநீதியில் நம்பிக்கை கொண்ட நாம், ஒன்றிணைய வேண்டும்!’ - 37 தலைவர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

``அனைத்து இந்தியச் சமூக நீதி கூட்டமைப்பில் இணையுமாறு” ஓபிஎஸ் உட்பட 37 தலைவர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

Published:Updated:
ஸ்டாலின்

கடந்த ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு காணொலி காட்சி வாயிலாக திமுக தலைவர் மாநிலக் கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். சமூகநீதிக் கொள்கையை முன்னெடுத்து, பிற்படுத்தப்பட்ட – பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் இட ஒதுக்கீடு உள்ளிட்ட நலன்களைப் பாதுகாத்திட “அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பு” தொடங்கப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டார்.

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

இதையொட்டி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் , சோனியா காந்தி, சரத்பவார், லாலு பிரசாத், பவன் கல்யாண், ஓவைசி, அரவிந்த் கெஜ்ரிவால், என். ரங்கசாமி, மாயாவதி, வைகோ, திருமாவளவன், ராமதாஸ், மம்தா பானர்ஜி உட்பட 37 அரசியல் கட்சித் தலைவர்களுக்கு மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தில், ``தனித்தன்மை மிக்கதும் பன்முகத்தன்மை வாய்ந்த பல பண்பாடுகளால் ஆனதுமான நமது ஒன்றியம் பிரிவினை மற்றும் சமய மேலாதிக்கத்தினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. சமத்துவம், சுயமரியாதை மற்றும் சமூகநீதி ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டுள்ள நாம் அனைவரும் ஒன்றிணைந்தால்தான் இவற்றை எதிர்த்துப் போரிட முடியும். இது அரசியல் ஆதாயம் பற்றியதல்ல. மாறாக நமது குடியரசு அமையப் பாடுபட்டோர் காண விழைந்த அடையாளத்தை மீண்டும் நிலைநிறுத்துவது பற்றியது ஆகும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மு.க.ஸ்டாலின் கடிதம்
மு.க.ஸ்டாலின் கடிதம்

`எல்லாருக்கும் எல்லாம்’ என்பதை அடிப்படையாய்க் கொண்டதுதான் சமூகநீதியாகும். சமூகநீதி என்பது அனைவருக்கும் சமமான பொருளாதார, அரசியல், சமூக உரிமைகளும் வாய்ப்புகளும் அமையவேண்டும் என்ற எண்ணம்தான். அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் என்பதை உறுதிசெய்வதன் வழியாகத்தான் நமது அரசியல் சட்டத்தை இயற்றியவர்கள் காண விரும்பிய சமத்துவச் சமுதாயத்தைக் கட்டியமைக்க முடியும். இந்தியாவில் சமூக நீதி கருத்தியலை முன்னெடுத்துச் செல்ல, சமூக நீதி கூட்டமைப்பு முயற்சி செய்யும். இந்த கூட்டமைப்பின் பிரதிநிதிகளாகத் தக்க நபர்களை நியமிக்குமாறு” கட்சிகளின் தலைவர்களுக்கு திமுக எழுதிய கடிதத்தில் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism