Published:Updated:

`கோவாக்சினுக்கு அங்கீகாரம் கிடைப்பதைத் தடுக்க முயற்சிகள் நடந்தன!' - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா

தலைமை நீதிபதி ரமணா
News
தலைமை நீதிபதி ரமணா

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் கிடைக்காமல் தடுக்க சில பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் முயற்சி செய்ததாக குற்றம்சாட்டினார்.

இந்தியாவில் ஒமைக்ரான் பரவல் அதிகரிக்கத் தொடங்கியிருப்பதால், பல்வேறு மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உ.பி, ம.பி, அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களில் நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில் மாநில அரசுகள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியிருக்கின்றன. இந்தியாவில் மீண்டும் நோய்த்தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியிருப்பதை அடுத்து, நேற்றிரவு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

ஒமைக்ரான் குறித்துப் பதற்றமடைய வேண்டாம் எனக் கூறியவர், ஜனவரி 3-ம் தேதி முதல் 15-18 வயதுள்ளோருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்றார். அதேபோல, ஜனவரி 10-ம் தேதி முதல் முன் களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும் என்றும் பேசியிருந்தார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இந்த நிலையில், தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் கிடைக்காமல் தடுக்க சில பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் முயற்சி செய்ததாகக் குற்றம்சாட்டினார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நீதிபதி ரமணா
நீதிபதி ரமணா

ஹைதராபாத்தில், ராமினேனி என்ற அறக்கட்டளையின் விருது விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய நீதிபதி ரமணா, ``கொரோனா மற்றும் அதன் புதிய வகை திரிபுகளைக் கட்டுப்படுத்தும் தடுப்பூசியான கோவாக்சினை இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்திருக்கிறது. உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தடுப்பூசியான கோவாக்ஸின், உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரத்தைப் பெறுவதைத் தடுக்க பல்வேறு முயற்சிகள் நடைபெற்றன.

ஒருபுறம் ஃபைசர் போன்ற பல பன்னாட்டு மருந்து நிறுவனங்கள், மறுபுறம் இந்தியாவுக்குள் இருந்தே ஏராளமானோர், கோவாக்சின் குறித்து அவதூறு பரப்ப எண்ணற்ற முயற்சிகள் மேற்கொண்டனர். அவர்கள் இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பிடம் புகார் அளித்து, கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் கிடைப்பதைத் தடுத்து நிறுத்த முயன்றனர்.

COVAXIN | கோவேக்சின்
COVAXIN | கோவேக்சின்

கிருஷ்ணா மற்றும் அவர் மனைவி சுசித்ரா ஆகியோர் இந்த நிலைக்கு வர மிகவும் போராடினார்கள். இன்று அவர்கள் நாட்டுக்குப் புகழைத் தேடித் தந்திருக்கிறார்கள். நமது நாட்டுக்குப் பெயரும், புகழும் கொண்டு சேர்த்திருக்கும் நம் மாநில நிறுவனத்தின் பெருமையை உலகுக்கு எடுத்துரைக்க அனைத்து மக்களும் முன்வர வேண்டும்" என்று பேசினார்.