Published:Updated:

``கூட்டணி குறித்து விவாதித்தோம்; ஆனால், இப்போது விவரிக்க முடியாது” - கமல்ஹாசன்

கமல்ஹாசன்

``நான் எதற்காக வந்தேனோ, அதைவிட்டு மாற மாட்டேன். இங்கு லாபம் பார்க்க வரவில்லை.” - மநீம தலைவர் கமல்ஹாசன்.

``கூட்டணி குறித்து விவாதித்தோம்; ஆனால், இப்போது விவரிக்க முடியாது” - கமல்ஹாசன்

``நான் எதற்காக வந்தேனோ, அதைவிட்டு மாற மாட்டேன். இங்கு லாபம் பார்க்க வரவில்லை.” - மநீம தலைவர் கமல்ஹாசன்.

Published:Updated:
கமல்ஹாசன்

2024 நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி, சென்னை அண்ணாநகரிலுள்ள தனியார் ஹோட்டலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அந்தக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் இன்று (16.11.2022) நடைபெற்றது. 117 மாவட்டச் செயலாளர்களில் 114 பேர் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், அனைவரது செல்போன்களும் வெளியிலேயே வாங்கிவைக்கப்பட்டன. ஒவ்வொருவரும் ரூ.00 கொடுத்து, தங்களது ஐ.டி கார்டுகளைப் பெற்றுக்கொண்டு கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

ம.நீ.ம மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்
ம.நீ.ம மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

ஊடகங்கள், வெளிநபர்கள் அனுமதிக்கப்படாத இந்தக் கூட்டத்துக்குப் பிறகு, அரங்குக்குள் என்ன நடந்தது என்பதை, பங்கேற்ற சிலரிடம் விசாரித்தோம். ``2024 தேர்தலில் நம் பங்கு என்னவாக இருக்க வேண்டும் என்பதை முடிவுசெய்யும் இடத்தில் இருக்கிறோம். தனியாக நிற்பதற்கு என் பலம் சரியாக இருக்க வேண்டும். யாராவது கூட்டணிக்கு அழைத்தால்கூட அங்கு பேசுவதற்கும் சரியான பலத்தை நாம் நிரூபிக்க வேண்டும். எனவே, கட்சி வளர்ச்சி முக்கியம். நான் எதற்காக வந்தேனோ அதையெல்லாம்விட்டு மாற மாட்டேன்.

இங்கு லாபம் பார்க்க வரவில்லை. என்னுடைய கொள்கையில் தெளிவாக இருப்பேன். என்னைத் தாண்டியும் இந்தக் கட்சி இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதில் நீங்கள் இருக்கிறீர்களா, இல்லையா என்பதை நீங்கள்தான் முடிவுசெய்ய வேண்டும்” என்று நிர்வாகிகள் மத்தியில் கமல்ஹாசன் பேசிய பிறகு, வந்திருந்த மாவட்டச் செயலாளர்களுடன் கேள்வி பதிலாக, கட்சி வளர்ச்சிக்குச் சில விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள்.

இந்தக் கூட்டத்திலேயே, “இனி வரும் காலங்களில் கட்சி சார்ந்த நிகழ்வுகள், கூட்டங்கள் போன்ற விஷயங்களுக்குத் தனியாக மண்டபம் கட்ட திட்டமிடப்பட்டிருக்கிறது. அதற்கான இடமும் பார்த்துவருகிறோம். கட்சி நிகழ்ச்சிகள் போக, கட்சித் தொண்டர்களின் இல்லத் திருமணங்களை இலவசமாக நடத்தை இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம்” என்று பேசப்பட்டதாகச் சொல்கிறார் மற்றொரு நிர்வாகி. ஒரு மணி நேர, இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு, மாநிலச் செயலாளர்கள் 18 பேரும் இதில் இணைந்தனர். அவர்களுடனான சிறிது ஆலோசனைக்குப் பிறகு கமல்ஹாசன் கிளம்பிச் சென்றார்.

`கடந்த முறை செய்த தவறுகளை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் செய்யக் கூடாது’ என ம.நீ.ம நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு பேட்டியளித்த கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார். ``2024 நாடாளுமன்றத் தேர்தல் குறித்து இன்றைய கூட்டத்தில் பேசினோம். கூட்டணி குறித்து விவாதித்துக்கொண்டிருக்கிறோம். இப்போது விவரிக்க முடியாது. தனித்துப் போட்டியிட்டாலும், கூட்டணி அமைத்தாலும் தேர்தலுக்கான பணிகளைத் தீவிரமாக செய்ய வேண்டும்” எனவும் கூறினார்.

ம.நி.ம மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்
ம.நி.ம மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்

அதைத் தொடர்ந்து நடந்த மாவட்டச் செயலாளர்களுக்கான பயிற்சிப் பாசறையில், அவரவர் பகுதியில் இருக்கும் பிரச்னைகளைச் சட்டப்படி எப்படி அணுக வேண்டும், கீழ்மட்ட அளவில் கட்சியை எப்படி வளர்த்தெடுக்க வேண்டும், ஆர்.டி.ஐ- சம்பந்தமான புத்தகம் வழங்கி, அது குறித்தான விழிப்புணர்வை மக்களிடையே எப்படி ஏற்படுத்த வேண்டும், புதிய வாக்காளர்களை எப்படிக் கவர வேண்டும்... போன்ற விஷயங்கள் பகிரப்பட்டன” என்றனர் இதில் பங்கேற்றவர்கள்.

படங்கள்: து.மோகன்