Published:Updated:

``அரசியல் சாசனத்துக்கு எதிரான போக்கை ஆளுநர் மாற்றிக்கொள்ள வேண்டும், இல்லையெனில்..!" - கமல்ஹாசன்

கமல்ஹாசன்

``மாநிலத்துக்கும் மக்களுக்கும் எதிரான போக்கை தமிழ்நாடு ஆளுநர் மாற்றிக்கொள்ளவேண்டியது அவசியம் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது." - கமல்ஹாசன்

``அரசியல் சாசனத்துக்கு எதிரான போக்கை ஆளுநர் மாற்றிக்கொள்ள வேண்டும், இல்லையெனில்..!" - கமல்ஹாசன்

``மாநிலத்துக்கும் மக்களுக்கும் எதிரான போக்கை தமிழ்நாடு ஆளுநர் மாற்றிக்கொள்ளவேண்டியது அவசியம் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது." - கமல்ஹாசன்

Published:Updated:
கமல்ஹாசன்

இன்று நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில், மாநில அரசு தயார்படுத்திக்கொடுத்த உரையிலிருந்த சில வரிகளையும், அம்பேத்கர், பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் பெயர்களையும் ஆளுநர் ஆர்.என்.ரவி தன்னுடைய உரையின்போது வாசிக்காமல் தவிர்த்துவிட்டார். அதேசமயம் அவையிலிருந்து பாதியிலேயே ஆர்.என்.ரவி கிளம்பிவிட்டார்.

சட்டமன்றத்திலிருந்து பாதியில் வெளியேறிய  ஆளுநர் ஆர்.என்.ரவி
சட்டமன்றத்திலிருந்து பாதியில் வெளியேறிய ஆளுநர் ஆர்.என்.ரவி

இது பெரும் சர்ச்சையானதையடுத்து அரசியல் கட்சிகள் பலவும், ஆர்.என்.ரவி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும், பதவி விலக வேண்டும் என்றும் கூறிவருகின்றன. அந்த வரிசையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், `சட்டமன்றத்தின் மாண்புகளை மீறி மக்களை அவமதிக்கும் ஆளுநருக்குக் கண்டனம்' என அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையில், ``ஒவ்வோர் ஆண்டும் சட்டப்பேரவையின் முதல் கூட்டம், ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். இந்த உரையில் மாநில அரசின் கொள்கைகளை, திட்டங்களை ஆளுநர் வாசிப்பது மரபு. ஆனால், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடப்பாண்டுக்கான முதல் கூட்டத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு தயாரித்த உரையின் (ஆளுநரால் ஒப்புதலளிக்கப்பட்ட உரையும்கூட) பல பகுதிகளை ஆளுநர் படிக்காமல் புறக்கணித்தது ஏற்கத்தக்கதல்ல. அதுமட்டுமின்றி, அரசு தயாரித்துக் கொடுத்திருக்கும் உரையில் இல்லாத சில புதிய விஷயங்களைச் சொந்தமாகச் சேர்த்துப் பேசியிருக்கிறார்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

சட்டமன்ற நடவடிக்கைகள் முறையாக முடிவடைந்து, தேசியகீதம் இசைக்கப்படுவதற்கு முன்பே சட்டப்பேரவையிலிருந்து வெளியேறியிருக்கிறார் ஆளுநர். சட்டமன்றத்தை மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் அவமதிக்கும் இந்தச் செயல் கடும் கண்டனத்துக்குரியது. பா.ஜ.க அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில், ஆளுநர்களின் செயல்பாடுகள் சர்ச்சைகள் நிறைந்ததாகவே இருக்கின்றன. குறிப்பாக, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசிவரும் பல கருத்துகள், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் கொள்கை நிலைப்பாட்டுக்கு எதிராக இருப்பதோடு, மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலும் இருக்கின்றன.

ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி

அதுமட்டுமின்றி, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களை, மாதக்கணக்கில் கிடப்பில் போட்டிருக்கிறார். இது போன்று மாநிலத்துக்கும் மக்களுக்கும் எதிரான போக்கை தமிழ்நாடு ஆளுநர் மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது. அரசியல் சாசன மாண்புகளுக்கு எதிரான இந்தப் போக்குகள் ஆளுநரால் மாற்றிக்கொள்ளப்படவில்லை எனில், ஆளுநரை மாற்றவேண்டிய கோரிக்கையை முன்வைக்கும் நிலைக்கே நாங்கள் தள்ளப்படுவோம்" என கமல்ஹாசன் கூறியிருக்கிறார்.