Published:Updated:

`குடியுரிமை மசோதாவும் நடைபாதையில் வசிப்பவர்களும்...!' - ஜவாஹிருல்லா எழுப்பும் கேள்வி

ஜவாஹிருல்லா

`இலங்கையில் மதரீதியிலான ஒடுக்குமுறை இல்லை' என்கிறார்கள். சிங்களப் பேரினவாதத்தால் பாதிக்கப்பட்டு தமிழகத்தில் தஞ்சம் புகுந்தவர்கள் பெரும்பாலும் இந்துக்களாக இருக்கும் தமிழர்கள்தான்.

`குடியுரிமை மசோதாவும் நடைபாதையில் வசிப்பவர்களும்...!' - ஜவாஹிருல்லா எழுப்பும் கேள்வி

`இலங்கையில் மதரீதியிலான ஒடுக்குமுறை இல்லை' என்கிறார்கள். சிங்களப் பேரினவாதத்தால் பாதிக்கப்பட்டு தமிழகத்தில் தஞ்சம் புகுந்தவர்கள் பெரும்பாலும் இந்துக்களாக இருக்கும் தமிழர்கள்தான்.

Published:Updated:
ஜவாஹிருல்லா

இந்திய குடியுரிமை சட்ட மசோதா மக்களவையில் கடந்த திங்கள் கிழமை தாக்கல் செய்யப்பட்டது. பல்வேறு எதிர்ப்புகளைச் சந்தித்து வரும் குடியுரிமை மசோதாவை உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்தார்.

அமித் ஷா
அமித் ஷா

மாநிலங்களவையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா ``இந்தியாவில் வசிக்கும் இஸ்லாமியர்களுக்கும் குடியுரிமை மசோதாவிற்கும் என்ன சம்பந்தம்? இந்த மசோதா இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்று பொய்யான தகவல்களைப் பரப்புகின்றனர். நாட்டில் இருக்கும் இஸ்லாமியர்கள் இதற்கு பயப்படத் தேவையில்லை. இந்தியாவில் வசிக்கும் இஸ்லாமியர்கள் எப்போதும் இந்திய குடிமக்கள்தான்” என்று கூறியுள்ளார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

`இந்தியாவில் வசிக்கும் இஸ்லாமியர்களுக்கும் குடியுரிமை மசோதாவிற்கும் என்ன சம்பந்தம்?' என்று அமித் ஷா எழுப்பியுள்ள கேள்விக்கு விவாதங்கள் கிளம்பியிருக்கின்றன. இதுதொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம். எச்.ஜவாஹிருல்லாவிடம் பேசினோம்.

ஜவாஹிருல்லா
ஜவாஹிருல்லா

அவர் நம்மிடம் பேசுகையில், ``சொல்பவர் யார் என்பதை வைத்துதான் ஒரு விஷயத்தை முடிவு செய்ய வேண்டும். இதைச் சொல்லியிருப்பது அமித் ஷா. 2002-ல் குஜராத்தில் நடந்த கலவரங்களில் பெரும் பங்கு வகித்தவர். இவர் இப்படி சொல்கிறார் என்றால் அதற்கு நேர் மாறாக நடக்கப்போகிறது என்று பொருள். நமது சட்டத்தினுடைய அடிப்படையே மதச்சார்பின்மையும் அனைவரையும் சமமாக மதிப்பதும்தான். மத்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை பாகுபாட்டுத் தன்மையின் வெளிப்பாடாகவே பார்க்கிறேன்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா வெறும் முன்னோட்டம்தான். இதைத் தொடர்ந்து என்.ஆர்.சி வரப்போகிறது. நடைபாதை, குடிசை போன்ற இடங்களில் வாழும் மக்கள், ஆவணங்களுக்கு எங்கே செல்வார்கள். ஆவணங்கள் இல்லாதபோது சட்டவிரோத குடியேற்றக்காரர்களாகக் கருதப்படுவார்கள். அவர்களுக்குக் குடியுரிமை கிடைக்காது. குடியுரிமை கிடைக்காதபட்சத்தில், இஸ்லாமியர்களாக இல்லாதபோது மசோதாவில் அறிவிக்கப்பட்ட மூன்று நாடுகளிலிருந்து வந்தவர்களென்று குடியுரிமை வழங்கும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. நாட்டை மதரீதியாகப் பிளவுப்படுத்தவே இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

`இலங்கையில் மதரீதியிலான ஒடுக்குமுறை இல்லை' என்கிறார்கள். சிங்களப் பேரினவாதத்தால் பாதிக்கப்பட்டு தமிழகத்தில் தஞ்சம் புகுந்தவர்கள் பெரும்பாலும் இந்துக்களாக இருக்கும் தமிழர்கள்தான். அவர்களுக்குக் குடியுரிமை வழங்க மத்திய அரசு ஏன் முன்வரவில்லை. இந்தச் சட்டத்தை அவசரமாக கொண்டுவர காரணம் என்ன இருக்கிறது. 1955ல் இயற்றப்பட்ட குடியுரிமைச்சட்டமே போதுமான ஒன்று" என்றார்.

ஜவாஹிருல்லாவின் கருத்து பற்றி பா.ஜ.வைச் சேர்ந்த கே.டி.ராகவனிடம் கேட்டபோது, ``சட்ட விரோதமாகக் குடியேறியவர்களை வெளியேற்ற வேண்டும் என்பதுதான் மசோதா கொண்டு வந்ததன் அடிப்படையே. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளுமே தனது நாட்டினுடைய மதம் இஸ்லாம் என்று அறிவித்துக்கொண்டவை. சிறுபான்மையினருக்கு அங்கு உரிமைகள் இல்லை. துன்புறுத்தல் காரணமாக அகதிகளாக இங்கு வந்தவர்களை அந்தநாட்டு அரசாங்கங்கள் ஏற்றுக்கொள்வதில்லை. அதனால்தான் அவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்படுகிறது.

கே.டி.ராகவன்
கே.டி.ராகவன்

இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை அந்நாட்டின் தேசியமொழி தமிழாக இருக்கிறது. அங்குள்ள தமிழர்கள் முதலமைச்சர்கள் போன்ற முக்கியப் பொறுப்புகளில் இருக்கிறார்கள். இந்தியாவில் இருக்கும் இலங்கைத் தமிழர்களும் இலங்கைக்குச் செல்லவே விரும்புகின்றனர். இன ரீதியாக அங்குள்ள தமிழர்கள் பாதிக்கப்படும்போது இன்னொரு நாட்டுத் தமிழன் என்று விடாமல் ஆதரவு தரத்தான் செய்கிறோம்" என்றார்.