Published:Updated:

`நீங்கள் யாருக்கு பலத்தை காட்டுகிறீர்கள்?' - சிஏஏ குறித்து ராஜ் தாக்கரே!

ராஜ் தாக்கரே
ராஜ் தாக்கரே ( twitter )

``பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து வந்த ஊடுருவல்காரர்கள் நமது நாட்டின் எதிரிகள். அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்றும் ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது நிலைபாடுகளை அவ்வபோது பொதுக்கூட்டங்களிலும் பேரணிகளிலும் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் தற்போது மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே இந்த சட்டத்திற்கு ஆதரவாக தனது கருத்தினைப் பதிவு செய்துள்ளார்.

மும்பையில், ஆசாத் மைதானத்தில் கட்சித் தொண்டர்கள் மத்தியல் ராஜ் தாக்கரே பேசுகையில், ``குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக இஸ்லாமியர்கள் ஏன் போராட்டங்களை நடத்துகிறார்கள் என எனக்கு புரியவில்லை. இந்தியா முழுவதும் இந்த போராட்டங்கள் பெரும்பாலும் இஸ்லாமியர்களால் வழிநடத்தப்படுகிறது. இங்குள்ள இஸ்லாமியர்களுக்கு இந்தச் சட்டம் பொருந்தாது” என்றார். ``நீங்கள் யாருக்கு உங்கள் பலத்தை காட்டுகிறீர்கள்?” என்றும் கேள்வி எழுப்பினார்.

ராஜ் தாக்கரே
ராஜ் தாக்கரே

மேலும், ``பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து வந்த ஊடுருவல்காரர்கள் நமது நாட்டின் எதிரிகள். அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநில அரசு இந்த சட்டங்கள் தொடர்பாக கலவையான முடிவுகளை தெரிவித்து வருகிறது. ஆனால், உத்தவ் தாக்கரேவின் உறவினரான ராஜ் தாக்கரேவின் நிலைப்பாடு முற்றிலும் குழப்பமானது என அம்மாநில அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பேரணியில் ஏராளமான மகாராஷ்டிரா நவநிர்மான் கட்சி உறுப்பினர்கள் இந்த சட்டங்களுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு