Published:Updated:

'மோடி - அமித் ஷா தமிழகம் வருகை' - இது 2024 தேர்தலுக்கான கணக்கா?!

பாஜக - அமித் ஷா, மோடி

தமிழ்நாட்டுக்கு வரும் 11, 12-ம் தேதிகளில் மோடி, அமித் ஷா வருகின்றனர். அப்போது, 2024-ம் ஆண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து அந்த கட்சி நிர்வாகிகளிடத்தில் பேசவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

'மோடி - அமித் ஷா தமிழகம் வருகை' - இது 2024 தேர்தலுக்கான கணக்கா?!

தமிழ்நாட்டுக்கு வரும் 11, 12-ம் தேதிகளில் மோடி, அமித் ஷா வருகின்றனர். அப்போது, 2024-ம் ஆண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து அந்த கட்சி நிர்வாகிகளிடத்தில் பேசவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

Published:Updated:
பாஜக - அமித் ஷா, மோடி

தமிழ்நாட்டில் எப்படியாவது அதிக தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என பாஜக தொடர்ந்து போராடிவருகிறது. இந்த நிலையில் வரும் 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில் அதிக இடங்களைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக பாஜக பல்வேறுவிதமான முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.

இதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் கடந்த சில மாதங்களாக மத்திய அமைச்சர்கள் அதிகமாகப் பங்கேற்றிருக்கின்றனர். இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பியுஷ் கோயல், ரயில்வேதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் அடங்குவர்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

அப்போதெல்லாம் மாணவர்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரிடமும் பேசிவருகின்றனர். குறிப்பாக தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிரான கருத்துகளையும் முன்வைத்து வருகின்றனர் எனச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம், காந்தி கிராம் கிராமியப் பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வரும் 11-ம் தேதி தமிழகத்துக்கு வருகிறார்.

அதற்கு அடுத்த நாள், 12-ம் தேதி தனியார் நிறுவனத்தின் ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகிறார். இவர்கள் நிகழ்ச்சிகளை முடித்த பிறகு, கட்சியின் முக்கிய நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசுகின்றனர். அப்போது 2024-ம் ஆண்டில் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி மேற்கொள்ளவேண்டிய பணிகள், கட்சியைப் பலப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் குறித்துப் பேசவிருப்பதாக அந்தக் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து நம்மிடம் பேசிய தி.மு.க செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், "மோடி, அமித் ஷா உள்ளிட்டவர்கள் வராமல் இருந்தாலாவது அந்த 5% ஓட்டு இருக்கும். இவர்களை மக்கள் பார்க்கப் பார்க்கக் கோபம்தான் அவர்களுக்கு வரும். ஏனென்றால், தமிழகத்துக்கு எதிரான எல்லா வேலைகளையும் இவர்கள்தான் பார்க்கிறார்கள் என்று மக்களுக்குத் தெரியும்.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

எனவே, அவர்கள் வருவது ஒரு வகையில் தி.மு.க-வுக்கு நல்லது. அமித் ஷாவைப் பார்க்கும்போதும் மக்களுக்குக் கோபம்தான் வரும். மோடியைப் பார்த்தாலும் தமிழக மக்களுக்குக் கோபம்தான் வரும். 10% இட ஒதுக்கீட்டால் மக்கள், வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு உட்காந்திருக்கிறார்கள். எனவே, அவர்கள் முகத்தைக் காட்டாமல் இருந்தால், ஏற்கெனவே போட்ட 5% பேர் ஓட்டுப்போடுவார்கள்" என்றார்.