Published:Updated:

`சென்னையில் படிப்பு; முதன்மை செயலாளர் பணி!’ - மோடி, ஜின்பிங் சந்திப்பில் இருந்த தமிழர் மதுசூதன்

தற்போது சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்தின் முதன்மைச் செயலராகப் பணியாற்றி வரும் மதுசூதன் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

மதுசூதன் ரவீந்திரன்
மதுசூதன் ரவீந்திரன் ( DD Podhigai )

வரலாற்றுச் சிறப்புமிக்க மாமல்லபுரத்தில் மற்றொரு வரலாற்றுச் சந்திப்பு நடைபெற்றது. இந்திய பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையேயான சந்திப்புதான் அது. மொத்தம் இரண்டு நாள்கள் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. நேற்று இருநாட்டு தலைவர்களும் மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்களைக் கண்டு ரசித்தனர். சிற்பங்களின் பெருமையைப் பிரதமர் மோடி, சீன அதிபருக்கு விளக்கினார். இருவரும் இளநீர் பருகியபடியே நீண்ட நேரம் உரையாடினர். தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது; இதை இரு நாட்டு தலைவர்களும் கண்டு ரசித்தனர்.

மசூதன் ரவீந்திரன்
மசூதன் ரவீந்திரன்
DD Podhigai

சீன அதிபருக்கு நினைவுப்பரிசை வழங்கியமோடி, அவருக்கு இரவு உணவு விருந்து ஒன்றையும் ஏற்பாடு செய்தார். இரண்டாம் நாளான இன்று இரு நாட்டு தலைவர்களும் கலந்துகொள்ளும் உயர்மட்ட ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. மதிய உணவையடுத்து, இந்த வரலாற்றுச் சந்திப்பு நிறைவடைந்தது. இந்தச் சந்திப்பில், பெரிதும் கவரப்பட்டவர் தமிழகத்தைச் சேர்ந்த மசூதன் ரவீந்திரன். மாமல்லபுரத்தில் இருநாட்டு தலைவர்களும் புராதன சின்னங்களைப் பார்வையிட்டபோது, அவர்களுடன் இரண்டு அதிகாரிகள் உடனிருந்தனர். ஒருவர் இந்திய அதிகாரி, மற்றொருவர் சீன அதிகாரி. மாமல்லபுர சிற்பங்கள் குறித்தும் ஜின்பிங்குக்கு விவரித்தவர் இந்த மதுசூதன் ரவீந்திரன்.

யார் இந்த மதுசூதன் ரவீந்திரன் :

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பை முடித்தவர் மதுசூதன். 2007-ம் ‌ஆண்டு குடிமைப் பணி தேர்வில் தேர்ச்சி பெற்று, இந்திய வெளியுறவுப் பணியில் சேர்ந்தார். 2009-11-ம் காலகட்டத்தில் சீனாவின் மூன்றாவது வெளியுறவுத்துறை செயலாளராகப் பணியாற்றினார். பின்னர், சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத்தூதரகத்தில் 2 ஆண்டுகள் பணியாற்றினார். இதையடுத்து, 2013-ம் ஆண்டு மீண்டும் சீனாவில் பணியமர்த்தப்பட்டார். நீண்ட நாள்கள் சீனாவில் பணியாற்றியதால் அந்நாட்டின் அதிகாரபூர்வ மொழியான மாண்டரின் மொழியை நன்கு கற்றுக்கொண்டார். 2014-ம் ஆண்டு ஜி ஜின்பிங் இந்தியா வந்தபோது, மொழிபெயர்ப்பாளராகச் செயல்பட்டார் மதுசூதன்.

மசூதன் ரவீந்திரன்
மசூதன் ரவீந்திரன்
DD Podhigai

தற்போது சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்தின் முதன்மைச் செயலராகப் பணியாற்றி வரும் மதுசூதன் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். பொதுவாக, பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களின்போது, வெளியுறவு அமைச்சக இயக்குநரான நிலாக்ஷி சஜா சின்ஹாதான் இருப்பார். நிலாக்ஷி இந்தி, ஆங்கிலம், பெங்காலி, பிரெஞ்ச் மொழிகளை நன்கு கற்றறிந்தவர். இருந்தபோதிலும், இரண்டாவது நாளான இன்று, மதுசூதனைக் காணவில்லை. அவருக்குப் பதிலாகப் பெண் அதிகாரி பிரியங்கா சோஹானி மொழிபெயர்ப்பாளராக இருந்தார்.