Published:Updated:

`இந்தியர்களின் உழைப்பைக்கண்டு உலகமே வியக்கிறது!’ - ஐ.ஐ.டியில் நெகிழ்ந்த மோடி

மோடி ( ANI )

சென்னையில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.

`இந்தியர்களின் உழைப்பைக்கண்டு உலகமே வியக்கிறது!’ - ஐ.ஐ.டியில் நெகிழ்ந்த மோடி

சென்னையில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.

Published:Updated:
மோடி ( ANI )

சென்னை ஐ.ஐ.டி-யின் 56-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திரமோடி இன்று சென்னை வந்தடைந்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா மற்றும் அமைச்சர்கள் விமான நிலையத்தில் மோடிக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.

அப்போது பேசிய மோடி, ``நான் அமெரிக்கா சென்று வந்திருக்கிறேன். அங்கு பேசுகையில், `தமிழ்மொழி மிகவும் பழைமையான மொழி’ என்று சொல்லியிருக்கிறேன்.

மோடி
மோடி
ANI

இதுதான் ஊடகங்களில் பேசப்பட்டுவருகிறது. அமெரிக்கர்களுக்கு நம் நாடு மீது பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. சென்னைக்கு வருவது எனக்கு மிகவும் பிடிக்கும். இப்படியொரு வரவேற்பு அளித்த உங்களுக்கு நன்றி. மக்கள் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கைத்தான் தூக்கி எறிய வேண்டும் என்று கூறினேன். காந்திஜியின் 150-வது பிறந்தநாளையொட்டி பாதயாத்திரை மேற்கொள்ளவிருக்கிறோம். அதில் நமது சித்தாந்தங்களை மக்களிடம் எடுத்துச்செல்ல வேண்டும்” என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தொடர்ந்து ஐ.ஐ.டி-யில் நடந்த நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார். இந்திய-சிங்கப்பூர் ஹேக்கத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பிரதமர் மோடி பரிசுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற சிங்கப்பூர் கல்வி அமைச்சர் ஓங் ஒய் குங், `8,000 இந்திய நிறுவனங்கள் சிங்கப்பூரில் இருக்கின்றன. தமிழர்களின் தாய்மொழியான தமிழ்மொழி சிங்கப்பூரில் அலுவல் மொழியாக இருக்கிறது” என்று பெருமிதம் தெரிவித்தார்.

உரையாற்றிய மோடி
உரையாற்றிய மோடி
ANI

இதையடுத்து உரையாற்றிய மோடி, ``தமிழர்களின் விருந்தோம்பல் சிறந்தது. இட்லி, வடை ஆகிய உணவுகளைச் சாப்பிட்டால் உற்சாகம் பிறக்கும். ஹேக்கத்தான் என்பது இளம் தலைமுறையினருக்கு அறிவுத்திறனை வளர்க்கக்கூடியது. இங்கு இளைஞர்கள் பலர் பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வைக் கண்டுபிடித்துள்ளனர்.

குறிப்பாக, யார் கவனிக்கிறார்கள் என்பதை கேமரா அடையாளம் காட்டும் வகையில் வடிவமைத்துள்ளனர். நாடாளுமன்றத்தில் இது எனக்கு நிச்சயம் உதவும். புதிய தொழில் தொடங்கும் உத்வேகத்தை ஹேக்கத்தான் வழங்கும் என நம்புகிறேன். புதிய தொழில்நுட்பங்கள், தொழில் முனைவுகள், வளங்களை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்களை அரசு கொண்டுவந்துள்ளது. இந்தியாவின் புதுமையான கண்டுபிடிப்புகள் வறுமையை ஒழிக்கும்” என்றார்.

ஐ.ஐ.டியின் 56-வது பட்டமளிப்பு விழாவையொட்டி மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கினார் பிரதமர் மோடி. இதையடுத்து உரையாற்றியவர், ``உலகின் மிகப்பழைமையான மொழி தமிழ். எனவே தமிழைப்போற்றுவோம். நாட்டின் மிக உயர்ந்த கல்வி நிறுவனமாக சென்னை ஐ.ஐ.டி விளங்குகிறது. எதிர்கால இந்தியாவின் கனவுகளை உங்கள் கண்களில் பார்க்கிறேன். இந்தியர்களின் முயற்சி, உழைப்பு, தன்னம்பிக்கையைக் கண்டு உலகமே வியக்கிறது. இளைய தலைமுறையினரின் நம்பிக்கை பிரமிப்பைத் தருகிறது. இந்திய இளைஞர்களின் திறமைக்குப் பின்புலமாக ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. 200 ஸ்டார்ட் அப் தொழில்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

மோடி
மோடி
ANI

வாகனம், சுகாதாரம் உள்ளிட்ட முக்கியமான துறைகளில் ஸ்டார்ட் அப் தொழில்கள் அதிகரித்து வருகின்றன. ஓய்வு, உணவு, உறக்கத்தை மறந்து மாணவர்கள் கண்டுபிடிப்புகளில் தங்களை அர்ப்பணிக்கின்றனர். கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதில் ஐ.ஐ.டி சிறப்பாக விளங்குகிறது. இளம் தலைமுறையினரால் இந்தியப் பொருளாதாரம் 5 ட்ரில்லியன் டாலரை நோக்கி உயரும். உங்கள் அனைவருக்கும் நான் ஒரு வேண்டுகோள் வைத்திருக்கிறேன். நீங்கள் எங்கு வேலை செய்தாலும், நீங்கள் எங்கு வாழ்ந்தாலும் சரி, உங்கள் தாய்நாட்டின் தேவைகளை மனதில் கொள்ளுங்கள்" என்றார்.