Published:Updated:

Live Updates: டெல்லி திரும்பிய மோடி - வழியனுப்பி வைத்த முதல்வர், ஆளுநர்!

இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே இன்று இரண்டாம் நாள் சந்திப்பு நடைபெறவுள்ளது.

மோடி
மோடி
12 Oct 2019 3 PM

புறப்பட்டார் மோடி!

பிரதமர் மோடி கோவளத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை விமான நிலையம் வந்தார். பின்னர் அங்கிருந்து தனியார் விமானம் மூலம் மும்பை புறப்பட்டார். மோடியை தமிழக முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், எம்.பி ரவீந்திர நாத் குமார் ஆகியோர் விமான நிலையம் வந்து வழியனுப்பி வைத்தனர்.

12 Oct 2019 1 PM

விமான நிலையம் வந்தார் சீன அதிபர்!

சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்னை விமான நிலையம் வந்தார். அவரை வழியனுப்ப முதல்வர் ஆளுநர் ஆகியோர் வருகை தந்துள்ளனர். இன்னும் சற்று நேரத்தில் தனி விமானத்தில் சீன அதிபர் நேபாளம் செல்கிறார்.

12 Oct 2019 1 PM

இந்திய - சீன உறவினை மேம்படுத்த ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை!

12 Oct 2019 1 PM

சந்திப்பு நிறைவு!

Live Updates: டெல்லி திரும்பிய மோடி - வழியனுப்பி வைத்த முதல்வர், ஆளுநர்!

தலைவர்கள் இடையேயான சந்திப்பு நிறைவடைந்தது. இதையடுத்து கோவளத்தில் இருந்து புறப்பட்ட ஜி ஜின்பிங் சென்னை விமான நிலையம் விரைகிறார். முன்னதாக ஜின்பிங்கை வாசல் வரை வந்து வழியனுப்பினார் மோடி. தமிழக பயணத்தை முடித்து கிளம்பும் ஜின்பிங் இரண்டு நாள் பயணமாக நேபாளம் செல்கிறார்.

12 Oct 2019 12 PM

உயர்மட்ட கூட்டத்தில் பேசிய மோடி தமிழகத்துக்கும் சீனாவுக்கு சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்னரே தொடர்பு இருப்பதாகத் தெரிவித்தார். சீன அதிபர் பேசும்போது, நானும் இந்திய பிரதமர் மோடியும் இருநாட்டு உறவு குறித்து பல்வேறு விஷயங்களை விவாதித்தோம் என்றார்.

12 Oct 2019 12 PM

ஒருமணி நேரம் நடந்த உயர்மட்ட குழு ஆலோசனை!

Live Updates: டெல்லி திரும்பிய மோடி - வழியனுப்பி வைத்த முதல்வர், ஆளுநர்!

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் தங்களின் தனிப்பட்ட ஆலோசனைகளை முடித்த பின்னர் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.

12 Oct 2019 11 AM

முடிவுக்கு வந்த பேச்சுவார்த்தை!

கோவளம் கடற்கரையில் அமைந்திருந்த கண்ணாடி அறையில் பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் ஒருமணி நேரமாக ஆலோசனை நடத்தினர். அந்த ஆலோசனைக் கூட்டம் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. இனி இருநாட்டு அதிகாரிகளுடன் உயர்மட்ட ஆலோசனையில் ஈடுபடவுள்ளனர்.

12 Oct 2019 10 AM

தொடங்கியது பேச்சுவார்த்தை!

Live Updates: டெல்லி திரும்பிய மோடி - வழியனுப்பி வைத்த முதல்வர், ஆளுநர்!

சென்னை கிண்டி ஓட்டலில் இருந்து புறப்பட்ட சீன அதிபர் ஜி ஜின்பிங் காலை 10.15 மணிக்கு கோவளம் ஹோட்டலுக்கு வந்தார். அங்கு அவரை பிரதமர் மோடி வரவேற்றார். பின்னர் பேட்டரி காரில் ஹோட்டலின் பசுமைசாலை வழியாகப் பயணித்து, கடற்கரை அருகே உள்ள அறையில் மோடியும் சீன அதிபரும் ஆலோசனை நடத்துகின்றனர்.

12 Oct 2019 9 AM

மோடி வெளியிட்ட நடைப்பயிற்சி படங்கள்!

12 Oct 2019 9 AM

கடற்கரையில் மோடியின் தூய்மைப் பணி!

12 Oct 2019 9 AM

போக்குவரத்து நிறுத்தம்!

சீன அதிபர் கோவளம் புறப்பட உள்ள நிலையில் சென்னை ஓ.எம்.ஆர், கிண்டி உள்ளிட்ட பல இடங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

12 Oct 2019 8 AM

இன்று...!

இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே இன்று இரண்டாம் நாள் சந்திப்பு நடைபெறவுள்ளது. இந்த சந்திப்பு முழுவதும் கோவளத்தில் உள்ள ஓட்டலில் நடைபெறும். இதற்காக காலை 9.05 மணிக்கு சீன அதிபர் கிண்டி ஓட்டலில் இருந்து கோவளம் செல்கிறார். 9.50 மணிக்கு மோடி தங்கியிருக்கும் ஓட்டலுக்கு செல்லும் சீன அதிபர், அங்கு மோடியுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். பின்னர் இருநாட்டின் உயரதிகாரிகள் கலந்துகொள்ளும் உயர்மட்ட ஆலோசனை கூட்டமும் நடைபெறும். அதனை தொடர்ந்து மதிய விருந்தில் இரு நாட்டு தலைவர்களும் கலந்துகொள்ள உள்ளனர். இந்த கூட்டத்தில் வர்த்தகம், தீவிரவாத ஒழிப்பு ,எல்லை பிரச்னைகள் தொடர்பாக விவாதிக்கப்படலாம் என தெரிகிறது.

அதன் பின்னர் சீன அதிபர் விமானம் நிலையம் செல்கிறார். அங்கிருந்து நேபாளம் செல்கிறார் சீன அதிபர். அதனை தொடர்ந்து பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் சென்னை விமான நிலையம் வருகிறார். மதியம் அவர் அங்கிருந்து டெல்லி செல்கிறார்.

12 Oct 2019 8 AM

முதல் நாள் சந்திப்பு!

கலை நிகழ்ச்சிகள்
கலை நிகழ்ச்சிகள்

இந்தியப் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் மாமல்லபுரத்தில் சந்தித்துப் பேசும் இன்ஃபார்மல் மீட்டிங் நேற்று மாமல்லபுரத்தில் வண்ணமயமான கலைநிகழ்ச்சி மற்றும் பாரம்பர்ய உணவுகளுடன் தொடங்கியது. உலக நாடுகளின் கவனத்த மோடி - ஜின்பிங் சந்திப்பு ஈர்த்துள்ளது.

நேற்று மாமல்லபுரத்தை சுற்றிபார்த்த இருநாட்டு தலைவர்களும் பின்னர் கலைநிகழ்ச்சிகளை கண்டு களித்தனர். அதன் பின்னர் கோவளத்தில் மோடி தங்கியிருக்கும் ஓட்டலில் சீன அதிபர் ஜின்பிங் -க்கு விருந்தளித்தார். பின்னர் நீண்ட நேரம் இருநாட்டு தலைவர்களும் ஆலோசனையில் ஈடுபட்டனர். பின்னர் சீன அதிபர் மீண்டும் கிண்டியில் உள்ள தனது ஓட்டலுக்கு காரில் புறப்பட்டார். அவரை கார் வரையிலும் வந்து வழியனுப்பி வைத்தார் மோடி.

Live Updates: `இரவு விருந்து; ஒரு மணிநேரத்துக்கும் மேலாக ஆலோசனை!' - மோடி - ஜி ஜின்பிங் முதல்நாள் சந்திப்பு நிறைவு