Published:Updated:

``மோடி இந்திய வளர்ச்சிக்கான மிகப்பெரிய பிராண்டு அம்பாசிடர்" - கெளதம் கம்பீர்

கெளதம் கம்பீர்

5 மாநிலத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக பிரதமர் மோடியைப் புகழ்ந்து கெளதம் கம்பீர் ட்வீட் செய்திருக்கிறார்.

``மோடி இந்திய வளர்ச்சிக்கான மிகப்பெரிய பிராண்டு அம்பாசிடர்" - கெளதம் கம்பீர்

5 மாநிலத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக பிரதமர் மோடியைப் புகழ்ந்து கெளதம் கம்பீர் ட்வீட் செய்திருக்கிறார்.

Published:Updated:
கெளதம் கம்பீர்

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல்கள் நடைபெற்று முடிந்தன. நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் 7 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 403 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 202 இடங்கள் தேவை என்ற நிலையில், ஆட்சி அமைக்கத் தேவையான இடங்களைத் தாண்டி அங்கு பா.ஜ.க முன்னிலை வகித்து வருகிறது. பஞ்சாப் மாநில வெற்றியை ஆம் ஆத்மி கட்சியினரும், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட நான்கு மாநிலத் தேர்தல் வெற்றியை பா.ஜ.க-வினரும் கொண்டாடி வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறிய கௌதம் கம்பீர் தற்போது பா.ஜ.க-வின் கிழக்கு டெல்லி எம்.பி-யாக இருக்கிறார். இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர் தனது ட்விட்டர் பக்கத்தில், `` இந்திய வளர்ச்சிக்கான மிகப்பெரிய பிராண்டு அம்பாசிடர் (Brand Ambassador) மோடி'' என்று தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துப் பதிவிட்டிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism