Published:Updated:

உக்ரைன் - ரஷ்ய அதிபர்களுடன் பிரதமர் மோடி பேசியது என்ன?

இந்தியப் பிரதமர் மோடி- விளாடிமிர் புதின்

``உக்ரைன் - ரஷ்யா பிரச்னையில் இரு நாடுகளுக்கும் மத்தியில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இந்தியா எப்போதும் ஆதரவாக இருக்கும்’’ எனப் பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்!

உக்ரைன் - ரஷ்ய அதிபர்களுடன் பிரதமர் மோடி பேசியது என்ன?

``உக்ரைன் - ரஷ்யா பிரச்னையில் இரு நாடுகளுக்கும் மத்தியில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இந்தியா எப்போதும் ஆதரவாக இருக்கும்’’ எனப் பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்!

Published:Updated:
இந்தியப் பிரதமர் மோடி- விளாடிமிர் புதின்

உக்ரைன் ரஷ்யா இடையே தொடர்ந்துவரும் போர் இன்னும் நீடித்துவருகிறது. இரு தரப்பிலும் நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகியிருக்கின்றன. இந்தப் போர் நிறுத்தப்பட வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்திவருகின்றன.

மேலும், ரஷ்யாமீது பொருளாதாரத் தடைகளையும் விதித்து வருகின்றன. ஐ.நா சபையில் ரஷ்யாவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானங்களை இந்தியா தொடர்ந்து புறக்கணித்துவந்தது.

உக்ரைன் - ரஷ்யா
உக்ரைன் - ரஷ்யா

இன்று ரஷ்யா - உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினுடன், பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது இரு நாடுகளுக்கு மத்தியில் நடக்கும் பேச்சுவார்த்தைகள், மோதல் தொடர்பான விவரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அதன் பிறகு புதினிடம் பேசிய பிரதமர் மோடி, மனிதாபிமான பிரச்னைகள் குறித்து வருத்தங்களைத் தெரிவித்தார். மேலும், இரண்டு நாடுகளுக்கும் மத்தியில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இந்தியா எப்போதும் ஆதரவாக இருக்கும் எனத் தெரிவித்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புதின்
புதின்

அதேபோல, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடனும் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார். சுமார் 35 நிமிட உரையாடல் நீடித்தது. உக்ரைனிலிருந்து 20,000-க்கும் அதிகமான இந்தியக் குடிமக்களை அழைத்துவர வசதி செய்ததற்காக ஜெலன்ஸ்கியிடம் பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.

இன்னமும் உக்ரைனில் இருக்கும் இந்திய மாணவர்களைப் பாதுகாப்பாக, இந்தியாவுக்கு அனுப்பத் தொடர்ந்து உதவ வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism