Published:Updated:

``மோடி, அசோக் கெலாட்டைப் புகழ்ந்து பேசியிருக்கிறார்" - காங்கிரஸ் தலைமைக்கு சச்சின் பைலட் எச்சரிக்கை

அசோக் கெலாட் - மோடி

``இந்திய முதல்வர்களில் மூத்த முதல்வர் எனும் பெருமை அசோக் கெலாட்டுக்கு உண்டு. அசோக் கெலாட்டும் நானும் ஒரே காலத்தில் முதல்வராகப் பணியாற்றியிருக்கிறோம்." - பிரதமர் மோடி

``மோடி, அசோக் கெலாட்டைப் புகழ்ந்து பேசியிருக்கிறார்" - காங்கிரஸ் தலைமைக்கு சச்சின் பைலட் எச்சரிக்கை

``இந்திய முதல்வர்களில் மூத்த முதல்வர் எனும் பெருமை அசோக் கெலாட்டுக்கு உண்டு. அசோக் கெலாட்டும் நானும் ஒரே காலத்தில் முதல்வராகப் பணியாற்றியிருக்கிறோம்." - பிரதமர் மோடி

Published:Updated:
அசோக் கெலாட் - மோடி

கடந்த 1-ம் தேதி ராஜஸ்தானில் பிரிட்டிஷ் ஆட்சியின்போது கொல்லப்பட்ட பழங்குடிச் சமூகத்தினர் நினைவாக அமைக்கப்பட்டுள்ள 'மன்காட் தாம்' என்ற இடத்தை தேசியச் சின்னமாக பிரதமர் மோடி அறிவித்தார். இதற்காக ராஜஸ்தானின் `பன்ஸ் வாரா' பகுதியில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, ``இந்தியாவின் முதல்வர்களில் மூத்த முதல்வர் எனும் பெருமை அசோக் கெலாட்டுக்கு உண்டு. அசோக் கெலாட்டும், நானும் ஒரே காலத்தில் முதல்வராகப் பணியாற்றியிருக்கிறோம்" எனப் பாராட்டிப் பேசினார்.

அசோக் கெலாட்
அசோக் கெலாட்

இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ராஜஸ்தான் முதல்வருமான அசோக் கெலாட், ``மோடி எந்த வெளிநாட்டுக்குச் சென்றாலும் அவருக்கு மிகச் சிறந்த வரவேற்பும் கௌரவமும் அளிக்கப்படுகின்றன. ஜனநாயகம் மிகவும் ஆழமாக வேரூன்றிய காந்தி பிறந்த நாட்டிலிருந்து, பிரதமர் வந்திருக்கிறார் என்பதற்காக இப்படிப்பட்ட வரவேற்பை வெளிநாட்டு மக்கள் அவருக்கு அளிக்கின்றனர். இதை அவர்கள் பெருமையாகக் கருதுகின்றனர்" எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநில முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட், "நேற்று முதல்வர் அசோக் கெலாட்டை பிரதமர் மோடி பாராட்டிப் பேசியதைப் பார்த்தோம். இதே போன்று மாநிலங்களவை எம்.பி பதவியிலிருந்து ஓய்வு பெற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தையும் மோடி புகழ்ந்து பேசியதையும் பார்த்தோம். ஆனால் அதன் பிறகு என்ன நடந்தது என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

சச்சின் பைலட்
சச்சின் பைலட்
ட்விட்டர்

நேற்று நடந்தது சுவாரஸ்யமான சம்பவம். இதை காங்கிரஸ் கட்சி மேலிடம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. கட்சி விதிகளுக்கு மாறாக நடந்துகொண்ட ராஜஸ்தான் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டிய நேரம் இப்போது வந்துவிட்டது.

கடந்த செப்டம்பர் 25-ம் தேதி ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் கூட்டப்பட்டது. ஆனால், அதில் யாரும் கலந்துகொள்ளவில்லை. இந்த விஷயத்தில் புதிய காங்கிரஸ் தலைவர் விரைவில் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பார் என்று நான் நம்புகிறேன்" எனப் பேசினார்.