Published:Updated:

மன் கி பாத்: ``அதற்கு மிகப்பெரிய மனம் வேண்டும்!” - திருப்பூர் தாயம்மாள் குறித்து பிரதமர் மோடி

மன் கி பாத் | மோடி ( PremKumar SK )

``இந்தியா கல்வி மற்றும் அறிவின் பூமி, கல்வியை நாம் புத்தக அறிவுக்குள் மட்டுமே கட்டுப்படுத்தாமல், நம் முழு வாழ்வின் அனுபவமாகவே பார்க்கிறோம்" என பிரதமர் மோடி 85-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று உரையாற்றினார்.

மன் கி பாத்: ``அதற்கு மிகப்பெரிய மனம் வேண்டும்!” - திருப்பூர் தாயம்மாள் குறித்து பிரதமர் மோடி

``இந்தியா கல்வி மற்றும் அறிவின் பூமி, கல்வியை நாம் புத்தக அறிவுக்குள் மட்டுமே கட்டுப்படுத்தாமல், நம் முழு வாழ்வின் அனுபவமாகவே பார்க்கிறோம்" என பிரதமர் மோடி 85-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று உரையாற்றினார்.

Published:Updated:
மன் கி பாத் | மோடி ( PremKumar SK )

ஜனவரி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று, பிரதமர் மோடி காலை 11:30 மணியளவில் வானொலி வாயிலாக 85-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றினார். இதில் பேசிய பிரதமர் மோடி, ``இந்த ஆண்டின் முதல் மன் கி பாத் நிகழ்ச்சி இது, இன்று நாம் மீண்டும், நம் நாடு மற்றும் நாட்டு மக்களின் நேர்மையான உத்வேகம் மற்றும் கூட்டு முயற்சிகள் தொடர்பான உரையாடல்களை எடுத்துச் செல்வோம். நம் மதிப்பிற்குரிய மகாத்மா காந்தியின் நினைவு தினமான இன்றைய நாள்(ஜனவரி 30), மகாத்மா காந்தியின் போதனைகளை நமக்கு நினைவூட்டுகிறது.

அமர் ஜவான் ஜோதி
அமர் ஜவான் ஜோதி

கடந்த சில தினங்களுக்கு முன்பு நாம் குடியரசு தின விழாவைக் கொண்டாடினோம். இந்தியா கேட்டில் சுடர் விட்டுக் கொண்டிருந்த அமர் ஜவான் ஜோதி, தற்போது தேசிய போர் நினைவிடத்தில் ஒளிர்ந்துகொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம். வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு இதுபோன்று மரியாதை செலுத்தியதற்காக பல தியாகிகள் குடும்பத்தினர் எனக்கு கடிதம் எழுதியுள்ளனர்” என பிரதமர் மோடி உரையாற்றினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருப்பூர் தாயம்மாள்
திருப்பூர் தாயம்மாள்
ANI tweet

மேலும், ``பத்ம விருதுகளுக்கு தேர்வானவர்களுக்கு எனது வாழ்த்துகள், பத்ம விருதுகளுக்கு தேர்வானவர்கள் நாட்டின் போற்றப்படாத நாயகர்கள்” என்று மோடி பேசினார். இதனையடுத்து பால புரஸ்கார் விருது வழங்கப்பட்டதை குறித்துப் பேசிய மோடி, ``இளம் வயதிலேயே துணிச்சலான மற்றும் உத்வேகமான செயல்களைச் செய்த குழந்தைகளுக்கு இந்த விருதுகள் வாழப்பட்டிருக்கின்றன. இதனை நாம் நம் வீட்டிலுள்ள குழந்தைகளிடத்தில் கூற வேண்டும், அப்போது நாட்டின் பெயரை ஒளிரச்செய்யும் உற்சாகம் அவர்களிடத்தில் பிறக்கும். இந்தியா கல்வி மற்றும் அறிவின் பூமி, கல்வியை நாம் புத்தக அறிவிற்குள் மட்டுமே கட்டுப்படுத்தாமல், நம் முழு வாழ்வின் அனுபவமாகவே பார்க்கிறோம்" என்று கூறினார்.

தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் உரையாடிய மோடி, "தமிழகத்தின் திருப்பூரைச் சேர்ந்த, இளநீர் விற்கும் தாயம்மாள், அவரின் குடும்பத்தினருக்கு என பாராட்டுக்கள், குடும்பத்தின் வறுமை நிலையிலும், பள்ளிக்கு 1 லட்சம் நன்கொடையாக வழங்க மிகப்பெரிய மனம் வேண்டும்" என்று இளநீர் விற்கும் தாயம்மாளை நினைவுகூர்ந்து இந்த நிகழ்ச்சியில் பேசினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism