Election bannerElection banner
Published:Updated:

`சூரிய கிரகணத்தைப் பார்க்க விலையுயர்ந்த ஜெர்மன் கண்ணாடி!'- மோடி பகிர்வால் புதிய சர்ச்சை #CoolestPM

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள புகைப்படம்
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள புகைப்படம்

அனைத்து இந்தியர்களையும்போல சூரிய கிரகணத்தைக் காண்பதற்காக ஆர்வத்தோடும் உற்சாகத்தோடும் இருந்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.

சூரிய கிரகணத்தை ரசித்தது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அவர் அணிந்திருந்த விலையுயர்ந்த கூலிங் கிளாஸ் தற்போது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது.

சூரிய கிரகணத்தை ரசிக்கும் பிரதமர் மோடி
சூரிய கிரகணத்தை ரசிக்கும் பிரதமர் மோடி

இன்று நிகழ்ந்த சூரியகிரகணம் குறித்து பிரதமரின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், அனைத்து இந்தியர்களையும்போல சூரிய கிரகணத்தைக் காண்பதற்காக ஆர்வத்தோடும் உற்சாகத்தோடும் இருந்ததாகக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், மேகமூட்டம் காரணமாக தன்னால் சூரிய கிரகணத்தை நேரடியாகக் காண முடியவில்லை என்று தெரிவித்திருந்தார்.

எனினும், இந்தியாவின் மற்ற பகுதிகளில் காணமுடிந்த சூரிய கிரகணக்காட்சிகளை நேரலை மூலமாகக் கண்டுகளித்ததாகவும், அதுதொடர்பாக நிபுணர்களுடன் உரையாடி அறிவை மேம்படுத்திக்கொண்டதாகவும் பதிவிட்டிருந்தார்.

அந்தப் பதிவில், அவர் கூலிங் கிளாஸ் அணிந்து வானத்தைப் பார்ப்பதுபோலவும் சில நிபுணர்களுடன் உரையாடுவது போன்றும் சில புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருந்தன. அதில் அவர் அணிந்திருந்த கூலிங் கிளாஸ் மிகவும் விலையுயர்ந்தது என்று காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஒருவர் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

மோடி அணிந்திருந்த ஜெர்மன் நாட்டுக் கண்ணாடி
மோடி அணிந்திருந்த ஜெர்மன் நாட்டுக் கண்ணாடி

ஜெர்மனியைச் சேர்ந்த மேபேக் என்ற நிறுவனத்தின் தயாரிப்பான அந்த கூலிங் கிளாஸின் விலை, சுமார் ரூ.1.42 லட்சம் (1,995 டாலர்கள்) என்றும், பெரும்பணக்காரர்கள் அணியக்கூடிய ரகத்தை, தன்னை ஒரு ஏழை என்று கூறிக்கொள்பவரால் எப்படி அணிய முடிகிறது என்றும் கேள்வியெழுப்பியிருந்தார்.

அதிலேயே அந்தக் கண்ணாடியின் விலை குறித்த ஆதாரங்களையும் வெளியிட்டிருந்தார். தற்போது இந்தக் கண்ணாடி குறித்த செய்தி, சமூக வலைதளங்களில் பலராலும் விவாதிக்கப்பட்டுவருகிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு