Published:Updated:

`மோடியின் பிரசாரம் தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்!’ - ஏ.சி.சண்முகம்

லோகேஸ்வரன்.கோ
ச.வெங்கடேசன்

வேலூர் தேர்தல் பிரசாரத்துக்காகப் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்திருப்பதாக அ.தி.மு.க கூட்டணிக் கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் தெரிவித்திருக்கிறார்.

ஏ.சி.சண்முகம்
ஏ.சி.சண்முகம்

வேலூர் மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க கூட்டணி சார்பில் மீண்டும் களமிறங்கியுள்ள புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகத்துக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பல சவால்கள் காத்திருக்கின்றன.

ஏ.சி.சண்முகம்
ஏ.சி.சண்முகம்

எதிர்ப்புகளைத் தவிடுபொடியாக்குவதற்காக அவர் வியூகம் அமைத்துவருகிறார். தனக்காகப் பிரசாரம் செய்ய கூட்டணிக்கட்சித் தலைவர்கள் அனைவரையும் வேலூருக்கு வருமாறு அழைப்பு விடுத்திருக்கிறார்.

தேர்தல் களம் இன்னும் சூடுபிடிக்காத நிலையில் அனல் பறக்கும் பிரசாரத்துக்காகத் தயாராகிவருகிறார் ஏ.சி.சண்முகம். கூட்டணி கட்சியினரை அடிக்கடி சந்தித்து கள நிலவரங்களை அறிந்துகொள்கிறார்.

பிரசாரத்தில் ஏ.சி.சண்முகம்
பிரசாரத்தில் ஏ.சி.சண்முகம்

இந்தநிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஏ.சி.சண்முகம்,``மோடி அரசுக்கும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கும் எதிராக மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

ஏ.சி.எஸ் கல்விக் குழுமம் சார்பில் வேலை வாய்ப்பு, மருத்துவ முகாம் எனப் பல முகாம்களை நடத்திவருகிறோம். இவையெல்லாம் ஓட்டுக்காகச் செய்யவில்லை. மக்கள் நலனுக்காகத்தான் செய்கிறோம்.

பிரசாரத்தில் ஏ.சி.சண்முகம்
பிரசாரத்தில் ஏ.சி.சண்முகம்

என்னுடைய வெற்றிக்காகப் பிரதமர் மோடி பிரசாரம் செய்ய வேலூர் வருகிறார். அ.தி.மு.க கூட்டணி நிச்சயம் வெல்லும். இந்த ஒரு தொகுதியின் தேர்தல், தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்’’ என்றார்.