Published:Updated:

``ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் `தேசப்பிதா' " - தலைமை இமாம்

தலைமை இமாம் உமர் அகமது இல்யாஸி ( ட்விட்டர் )

``இந்தியாவில் இந்து முஸ்லிம்களாகிய நாம் கடவுளை வழிபடும் முறைகள் வேறு வேறு. ஆனால், நம் அனைவரும் ஒன்றுதான்" - தலைமை இமாம்

``ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் `தேசப்பிதா' " - தலைமை இமாம்

``இந்தியாவில் இந்து முஸ்லிம்களாகிய நாம் கடவுளை வழிபடும் முறைகள் வேறு வேறு. ஆனால், நம் அனைவரும் ஒன்றுதான்" - தலைமை இமாம்

Published:Updated:
தலைமை இமாம் உமர் அகமது இல்யாஸி ( ட்விட்டர் )

அகில இந்திய இமாம் அமைப்பின் தலைவர் உமர் அகமது இல்யாஸி ஆர்.எஸ்.எஸ் (ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம்) -ன் தலைவர் மோகன் பகவத்தை `தேசப்பிதா' என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் சமீபகாலமாக முஸ்லிம் தலைவர்களைச் சந்தித்துவருகிறார். அதனடிப்படையில், டெல்லியிலுள்ள முக்கிய மதகுருவை நேற்று சந்தித்துப் பேசினார்.

அதைத் தொடர்ந்து அகில இந்திய இமாம் அமைப்பின் தலைவர் உமர் அகமது இல்யாஸி செய்தியாளர்களிடம், ``என் அழைப்பின் பேரில் மோகன் பகவத் இன்று வருகை தந்தார். அவர் 'ராஷ்டிர-பிதா' தேசத்தின் தந்தை. அவர் வருகையிலிருந்து ஒரு நல்ல செய்தி வெளிப்படும். இந்தியாவில் இந்து, முஸ்லிம்களாகிய நாம் கடவுளை வழிபடும் முறைகள் வேறு வேறு. ஆனால், நாம் அனைவரும் ஒன்றுதான்" எனக் கூறினார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்

மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த நாடு முழுவதுமுள்ள முக்கிய ஐந்து மத குருக்களை மோகன் பகவத் சந்திப்பதாகத் தகவல் வெளியானது. இது குறித்து ஆர்.எஸ்.எஸ் செய்தித் தொடர்பாளர் சுனில் அம்பேகர், ``இந்தச் சந்திப்பு தொடர் விவாதத்தின் ஒரு பகுதி. ஆர்.எஸ்.எஸ் தலைவர் அனைத்துத் தரப்பு மக்களையும் சந்திக்கிறார்" என்று கூறினார்.