Published:Updated:

``எனக்குத் தெரியாமலேயே என் வீட்டில் பணம் வைக்கப்பட்டிருக்கிறது''- கைதான அமைச்சரின் உதவியாளர்

பார்த்தா சாட்டர்ஜி, உதவியாளர் அர்பிதா முகர்ஜி

அமலாக்கத்துறை காவலில் இருக்கும் பார்த்தா சாட்டர்ஜி, அர்பிதா முகர்ஜி ஆகிய இருவரும் மருத்துவப் பரிசோதனைக்காக கொல்கத்தாவிலுள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

``எனக்குத் தெரியாமலேயே என் வீட்டில் பணம் வைக்கப்பட்டிருக்கிறது''- கைதான அமைச்சரின் உதவியாளர்

அமலாக்கத்துறை காவலில் இருக்கும் பார்த்தா சாட்டர்ஜி, அர்பிதா முகர்ஜி ஆகிய இருவரும் மருத்துவப் பரிசோதனைக்காக கொல்கத்தாவிலுள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

Published:Updated:
பார்த்தா சாட்டர்ஜி, உதவியாளர் அர்பிதா முகர்ஜி

மேற்குவங்கத்தில், பள்ளி ஆசிரியர் பணி நியமன முறைகேடு தொடர்பாக, கடந்த வாரம் அமலாக்கத்துறையினரால் திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, அவரின் உதவியாளர் அர்பிதா முகர்ஜி ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். இவர்கள் கைதுசெய்யப்படுவதற்கு முன்பாக, அர்பிதா முகர்ஜியின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 21 கோடி ரூபாய் ரொக்கத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி கைது
அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி கைது

அதைத் தொடர்ந்து அன்றிரவே அமைச்சரும், அவரின் உதவியாளரும் கைதுசெய்யப்பட்டனர். பின்னர் மீண்டும், அர்பிதா முகர்ஜிக்குச் சொந்தமான மற்றொரு வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கிட்டத்தட்ட 29 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த விவகாரம் பெரிதாகவே, பார்த்தா சாட்டர்ஜியின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதுடன், கட்சியிலிருந்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். பின்னர் இது குறித்து பார்த்தா சாட்டர்ஜி, தான் சதியால் சிக்கவைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துவந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அர்பிதா முகர்ஜி
அர்பிதா முகர்ஜி

இந்த நிலையில், அமலாக்கத்துறை காவலில் இருக்கும் பார்த்தா சாட்டர்ஜி, அர்பிதா முகர்ஜி இருவரும் மருத்துவப் பரிசோதனைக்காக கொல்கத்தாவிலுள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது வாகனத்தில் இறங்கிய அர்பிதா முகர்ஜி, ``எனக்குத் தெரியாமலேயே என் வீட்டில் பணம் வைக்கப்பட்டிருக்கிறது" எனச் செய்தியாளர்களிடம் கூறினார்.

முன்னதாக அமலாக்கத்துறை விசாரணையில், தன் வீட்டையும், மற்றொரு பெண்ணின் வீட்டையும் பார்த்தா சாட்டர்ஜி மினி வங்கியாகப் பயன்படுத்தினார் என்று அர்பிதா முகர்ஜி கூறியதாக செய்திகள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.