Published:Updated:

மழைக்காலக் கூட்டத்தொடரில் அமளி... திமுக எம்.பி-க்கள் உட்பட 19 பேர் இடைநீக்கம்!

மாநிலங்களவை

அமளியில் ஈடுபட்ட திமுக எம்.பி-க்கள் 19 எம்.பி-க்களை இடைநீக்கம் செய்து, அவையின் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் உத்தரவிட்டிருக்கிறார்.

மழைக்காலக் கூட்டத்தொடரில் அமளி... திமுக எம்.பி-க்கள் உட்பட 19 பேர் இடைநீக்கம்!

அமளியில் ஈடுபட்ட திமுக எம்.பி-க்கள் 19 எம்.பி-க்களை இடைநீக்கம் செய்து, அவையின் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் உத்தரவிட்டிருக்கிறார்.

Published:Updated:
மாநிலங்களவை

நடப்பு ஆண்டுக்கான நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 18-ம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. நாடாளுமன்றத்தில் விலைவாசி உயர்வு, உணவுப்பொருள்கள் மீதான ஜி.எஸ்.டி வரி விதிப்பு, அக்னிபத் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுவருகிறது.

நேற்றைய தினம் மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையின் மையப் பகுதிக்கு வந்து விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரி விதிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கோஷமிட்டு அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர், கரூர் எம்.பி ஜோதிமணி உள்ளிட்ட நான்கு காங்கிரஸ் எம்.பி-க்களை இடைநீக்கம் செய்து சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார். இடைநீக்கம் செய்யப்பட்ட நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும் நடப்பு மழைக்கால கூட்டத்தொடரில் கலந்துகொள்ள முடியாது எனக் கூறப்படுகிறது.

மாநிலங்களவை
மாநிலங்களவை

இந்த நிலையில், மாநிலங்களவையில் இன்றும் விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி உள்ளிட்டவை தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, மாநிலங்களவையில் கனிமொழி என்.வி.என்.சோமு, சண்முகம், என்.ஆர்.இளங்கோ, அப்துல்லா, கிரிராஜன், சுஷ்மிதா தேவ், டோலாசென் உட்பட 19 பேர் மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்படுவதாக அவையின் துணைத்தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் தெரிவித்தார். இன்று இடைநீக்கம் செய்யப்பட்டவர்களில் ஆறு தி.மு.க எம்.பி-க்களும் அடக்கம்.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி-க்கள்:

1.சுஷ்மிதா தேவ், திரிணாமுல் காங்கிரஸ்

2.மௌசம் நூர், திரிணாமுல் காங்கிரஸ்

3.சாந்தா சேத்ரி, திரிணாமுல் காங்கிரஸ்

4.டோலா சென், திரிணாமுல் காங்கிரஸ்

5.சாந்தனு சென், திரிணாமுல் காங்கிரஸ்

6.அபி ரஞ்சன் பிஸ்வர், திரிணாமுல் காங்கிரஸ்

7.எம்.டி.நதிமுல் ஹக், திரிணாமுல் காங்கிரஸ்

8.எம். முகமது அப்துல்லா, தி.மு.க

9.பி லிங்கய்யா யாதவ், தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்)

10. ஏ.ஏ.ரஹீம், சி.பி.ஐ.

11.ரவிஹந்திர வத்திராஜூ, டி.ஆர்.எஸ்

12.எஸ்.கல்யாணசுந்தரம், தி.மு.க

13.ஆர்.கிரஞ்சன், தி.மு.க

14. என்.ஆர்.இளங்கோ, தி.மு.க

15.வி.சிவதாசன், சிபிஐ(எம்)

16.எம்.சண்முகம், தி.மு.க

17.தாமோதர் ராவ் திவகொண்டா, டிஆர்எஸ்

18.சந்தோஷ் குமார்.பி, சிபிஐ

19.கனிமொழி என்.வி.என்.சோமு, தி.மு.க

இந்த நிலையில் தங்கள்மீதான இடைநீக்க நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி தி.மு.க எம்.பி-க்கள் உட்பட 19 பேர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!