Published:Updated:

"ஜனவரி முதல் ஏழை குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை”- புதுவை முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

முதல்வர் ரங்கசாமி

”பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.470/- மதிப்புள்ள பொங்கல் பொருள்கள் வழங்கப்படும். அதற்காக ரூ.67 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.” – முதல்வர் ரங்கசாமி

"ஜனவரி முதல் ஏழை குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை”- புதுவை முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

”பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.470/- மதிப்புள்ள பொங்கல் பொருள்கள் வழங்கப்படும். அதற்காக ரூ.67 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.” – முதல்வர் ரங்கசாமி

Published:Updated:
முதல்வர் ரங்கசாமி

புதுவை முதல்வர் ரங்கசாமி சட்டப்பேரவை வளாகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள, அரசின் எந்த உதவியும் பெறாத குடும்பத் தலைவிகளுக்கு ரூ1,000/- உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தோம். அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வழங்க முடிவுசெய்திருக்கிறொம். பொங்கலுக்குள் இந்த உதவித்தொகை வழங்கப்படும். பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள், லேப்டாப் ஆகியவையும் ஜனவரி முதல் வழங்கப்படும். பால் உற்பத்தியாளர்கள் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.

புதுச்சேரி அரசு
புதுச்சேரி அரசு

அதை ஏற்று பால் கொள்முதல் விலையை ரூ.34-லிருந்து ரூ.37-ஆக உயர்த்தியிருக்கிறோம். இன்று முதல் இந்த விலை அமலுக்குவருகிறது. வழக்கமாக பாலுக்கான ஊக்கத்தொகை ஆண்டுக்கு ஒரு முறை வழங்கப்படும். இந்தத் தொகையை மாதம்தோறும் 5 சதவிகிதம் வழங்கவிருக்கிறோம். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.470/- மதிப்புள்ள பொங்கல் பொருள்கள் வழங்கப்படும். அதற்காக ரூ.67 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பொங்கல் பொருள்களுடன் மஞ்சள் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.1,200/-ம், சிவப்பு ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.2,400/-ம், நான்கு மாத இலவச அரிசிக்கான ரொக்கப்பணமும் வங்கியில் செலுத்தப்படும்.

ஓராண்டில் எங்கள் அரசு சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறது. உள்கட்டமைப்பை மேம்படுத்த நிதி ஒதுக்கி பல பணிகளை செய்திருக்கிறோம். மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், மக்களுக்கும் நிவாரணம் வழங்கியிருக்கிறோம். மழையால் பாதிக்கப்பட்ட சாலைகளைச் சீரமைக்கும் பணியைத் தொடங்கியிருக்கிறோம். சுற்றுலாப்பயணிகளின் வருகை புதுவையில் அதிகரித்திருக்கிறது. இதனால் அரசுக்கு வருவாய் உயர்ந்திருக்கிறது. அதேபோல அறிவித்த அனைத்துத் திட்டங்களையும் செயல்படுத்தவிருக்கிறோம்.

2021-22-ம் ஆண்டு கால்நடைத்தீவன மானியத்தொகை ரூ.4.5 கோடி வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்திவருகிறோம். மத்திய அரசு மாநில அந்தஸ்தை வழங்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. மாநில அந்தஸ்தைப் போராடித்தான் பெற வேண்டும். வரும் சட்டமன்றக் கூட்டத்திலும் மாநில அந்தஸ்து வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றுவோம். பிரதமர், ஜனாதிபதியை எம்.எல்.ஏ-க்களோடு சந்திக்கவும் திட்டமிட்டிருக்கிறோம்” என்றார்.