Published:Updated:

நபிகள் நாயகம் குறித்த சர்ச்சைக் கருத்து: உ.பி போராட்டத்தில் கலவரம்... 130-க்கும் மேற்பட்டோர் கைது!

உத்தரப்பிரதேசத்தில் போராட்டம் ( ட்விட்டர் )

பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவைக் கண்டித்து உத்தரப்பிரதேசத்தில் போராட்டம் நடத்திய 130-க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நபிகள் நாயகம் குறித்த சர்ச்சைக் கருத்து: உ.பி போராட்டத்தில் கலவரம்... 130-க்கும் மேற்பட்டோர் கைது!

பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவைக் கண்டித்து உத்தரப்பிரதேசத்தில் போராட்டம் நடத்திய 130-க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Published:Updated:
உத்தரப்பிரதேசத்தில் போராட்டம் ( ட்விட்டர் )

பா.ஜ.க-வின் முன்னாள் செய்தித் தொடர்பாளரான நுபுர் ஷர்மா, அண்மையில் ஊடக விவாத நிகழ்ச்சியில், நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தது இஸ்லாமியர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக நுபுர் ஷர்மாவைக் கைதுசெய்யக் கோரி இஸ்லாமியர்கள் டெல்லி, உத்தரப்பிரதேசம், தெலங்கானா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் போரட்டம் நடத்தினர். டெல்லியில் உள்ள ஜும்மா மசூதியில் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகையை முடித்துவிட்டு வெளியே வந்த இஸ்லாமியர்கள், நுபுர் ஷர்மாவைக் கண்டித்து திடீரெனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நுபுர் ஷர்மா
நுபுர் ஷர்மா

மேலும் உத்தரப்பிரதேசத்தில் நடந்த போராட்டத்திலும் வன்முறை வெடித்தது. அந்த வன்முறையின்போது பிரயாக்ராஜில் சில மோட்டார் சைக்கிள் மற்றும் வண்டிகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. மேலும் ஒரு போலீஸ் வாகனத்தை எரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதைத் தடுக்க போலீஸ் கண்ணீர்ப் புகைக்குண்டுகள், லத்திகளைப் பயன்படுத்தி அந்தக் கும்பலைக் கலைத்தனர். அப்போது ஒரு போலீஸ் உயரதிகாரி கடுமையாகத் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பிறகு அந்தப் பகுதியில் அமைதி நிலவியது.

இந்த நிலையில், உத்தரப்பிரதேசம் முழுவதும் சட்டம்-ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தியதாகவும், மத நல்லிணக்கத்தைச் சீர்குலைத்ததற்காகவும் ஆறு மாவட்டங்களிலிருந்து 130-க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism