Published:Updated:

`அது ஸ்டாலினுக்கே தெரியாது!'- தேனி பிரச்சாரத்தில் ஆவேசமான ரவீந்திரநாத் குமார்

தேனி எம்.பி ரவீந்திரநாத்குமார்
தேனி எம்.பி ரவீந்திரநாத்குமார்

தேனி மாவட்ட அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து, தேனி எம்.பி ரவீந்திரநாத்குமார் இன்று பிரசாரம் மேற்கொண்டார்.

ஊரக உள்ளாட்சித் தேர்தலின் இரண்டாம் கட்ட தேர்தல், வரும் 30-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேனி மாவட்ட அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து, தேனி எம்.பி ரவீந்திரநாத்குமார் இன்று பிரசாரம் மேற்கொண்டார். தேனி அன்னஞ்சி பகுதியில் பிரசாரத்தைத் தொடங்கிய ரவீந்திரநாத்குமார் பேசுகையில், “மதுரை-போடி அகல ரயில்பாதைத் திட்டப்பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்றுவந்தது. நாடாளுமன்ற கூட்டத்தொடரில், ரயில்வே பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தேன்.

தேனி எம்.பி ரவீந்திரநாத்குமார்
தேனி எம்.பி ரவீந்திரநாத்குமார்

அதன் அடைப்படையில், தற்போது மதுரை - உசிலம்பட்டி வரை பணிகள் நிறைவுபெற்று, சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டுள்ளது. 2020-க்குள், போடி வரை பணிகள் நிறைவுற்று ரயில் சேவை தொடங்கப்படும். நான் வாக்குறுதி கொடுத்தது போல, படித்த இளைஞர்கள், பெண்கள் பணிபுரிவதற்கான மத்திய அரசு நிறுவனம் ஒன்று தேனியில் அமைப்பதற்கான நடவடிக்கை எடுத்துவருகிறேன்.

தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். ஆனால், மக்களுக்குத் தேவையான திட்டங்களைச் செயல்படுத்துவது யார் என்பதைப் பார்த்து அவர்களைத்தான் வெற்றிபெறச் செய்ய வேண்டும். தேனி மாவட்டத்தில், தி.மு.க என்ன திட்டம் கொண்டுவந்தது? வாயிலேயே வடை சுடுவதுதான் தி.மு.க. ஜெயலலிதா இறந்த பிறகு ஆட்சியைக் கவிழ்ந்து, குறுக்கு வழியில் முதல்வராகிவிடலாம் எனப் பல சூழ்ச்சிகளைச் செய்தவர், ஸ்டாலின்.

` நாம் முதலில் இந்து… அப்புறம் தான் மற்றது!' - சர்ச்சையை ஏற்படுத்திய ரவீந்திரநாத் குமார் பேச்சு
தேனி எம்.பி ரவீந்திரநாத்குமார்
தேனி எம்.பி ரவீந்திரநாத்குமார்

தேர்தல் நேரத்தில் மட்டுமே தி.மு.க மக்களைச் சந்திக்கிறது. மக்களைக் குழப்பி, வாக்குகள் பெற முயற்சிசெய்கிறது. ஆயிரக்கணக்கான போராட்டத்தை நடத்திவருகிறார் ஸ்டாலின். நேற்று ஒரு போராட்டம், இன்று ஒரு போராட்டம் எனத் தினம் தினம் போராட்டம்தான். நேற்று என்ன போராட்டம் எதற்காக நடத்தினோம் என ஸ்டாலினுக்கே தெரியாது” என்று தி.மு.க மற்றும் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துப் பேசினார் ரவீந்திரநாத்குமார்.

அடுத்த கட்டுரைக்கு