Published:Updated:

``நாங்கள் அதிகாரமற்றவர்களும் இல்லை, நீங்கள் அதிகாரம் படைத்தவர்களும் இல்லை" - சு.வெங்கடேசன் சுளீர்!

சு.வெங்கடேசன்

`நீட் விலக்குக்காகக் காத்திருந்து மனு கொடுத்ததால் நாங்கள் அதிகாரமற்றவர்களாகவும், நீங்கள் அதிகாரம் படைத்தவர்களாகவும் மாறிவிடுவது இல்லை.' - எம்.பி சு.வெங்கடேசன்

``நாங்கள் அதிகாரமற்றவர்களும் இல்லை, நீங்கள் அதிகாரம் படைத்தவர்களும் இல்லை" - சு.வெங்கடேசன் சுளீர்!

`நீட் விலக்குக்காகக் காத்திருந்து மனு கொடுத்ததால் நாங்கள் அதிகாரமற்றவர்களாகவும், நீங்கள் அதிகாரம் படைத்தவர்களாகவும் மாறிவிடுவது இல்லை.' - எம்.பி சு.வெங்கடேசன்

Published:Updated:
சு.வெங்கடேசன்

2022-2023-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி முதல் நாடாளுமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. பிப்ரவரி 2-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைமீது நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், நேற்று மக்களவையில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி சு.வெங்கடேசன், ``தமிழகத்தை வெறும் வரைபடத்தைப் பார்த்து நீங்கள் புரிந்துகொள்ள முடியாது. மூவாயிரம் ஆண்டு முற்போக்குச் சிந்தனையும் சமத்துவச் சிந்தனையும் சமூகநீதி தத்துவமும்கொண்ட தமிழகத்தின் குரல் இந்த மண்ணில், இந்த அவையில் மீண்டும் மீண்டும் எதிரொலித்துக்கொண்டேயிருக்கும்.

நாடாளுமன்ற மக்களவை
நாடாளுமன்ற மக்களவை

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரிய மசோதாவுக்கான மனுவை நாங்கள் காத்திருந்து கொடுத்தோம், மனு கொடுப்பதாலேயே நாங்கள் அதிகாரமற்றவர்களாக, நீங்கள் அதிகாரம் படைத்தவர்களாக மாறிவிடுவது இல்லை. ஒன்றியமும் மாநிலமும் சம அதிகாரம்கொண்ட அமைப்புகள் என்று அரசியல் சாசனச் சட்டம் சொல்கிறது. அதைத்தான் நாங்களும் சொல்கிறோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்

எங்களின் குரல் ஒரு மாநிலத்தின் குரல் அல்ல, இந்திய மாநிலங்களின் குரல், அரசியல் சாசனத்தின் குரல். இந்த குரலுக்குச் செவிமடுங்கள், செவிமடுக்க மறுக்கிற நபரை வாடகை வீட்டிலிருந்து வெளியேற்றுங்கள் அல்லது திரும்பப்பெற்றுக்கொள்ளுங்கள்" என நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பியனுப்பியதை எதிர்த்து மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism