Published:Updated:

``வானளாவிய அதிகாரம் கொண்டவரா தமிழ்நாடு ஆளுநர்?” - பட்டமளிப்புவிழா விவகாரத்தில் வைகோ காட்டம்

``தமிழக ஆளுநர் தனக்கு வானளாவிய அதிகாரம் இருக்கிறது என்று நினைத்துச் செயல்படுவதையும், பேசுவதையும் நிறுத்திக்கொள்ள வேண்டும்'' என வைகோ தெரிவித்திருக்கிறார்.

``வானளாவிய அதிகாரம் கொண்டவரா தமிழ்நாடு ஆளுநர்?” - பட்டமளிப்புவிழா விவகாரத்தில் வைகோ காட்டம்

``தமிழக ஆளுநர் தனக்கு வானளாவிய அதிகாரம் இருக்கிறது என்று நினைத்துச் செயல்படுவதையும், பேசுவதையும் நிறுத்திக்கொள்ள வேண்டும்'' என வைகோ தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:

``தமிழ்நாடு அரசை ஆலோசிக்காமல் காமராஜர் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்புவிழா அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்தக் காரணத்தால் பட்டமளிப்பு விழாவை நான் புறக்கணிக்கிறேன்’’ என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேற்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இது தொடர்பாக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், ``பட்டமளிப்புவிழாவில் இணை வேந்தர் உரையாற்றிய பிறகு, ஒன்றிய இணை அமைச்சர் உரையாற்றும் வகையில் நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டிருப்பது மரபு மீறலாகும். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களின் அடாவடியான செயல்பாடுகள், போட்டி அரசு நடத்துவதைப்போல இருக்கிறது. அரசியலமைப்புச் சட்டப்படி ஆளுநர், மாநில முதல்வர் தலைமையிலான அமைச்சரவையின் அறிவுரைப்படிதான் இயங்க முடியும். ஆளுநரின் அதிகாரம் பரந்துபட்டது எனினும், பொதுவாக இவர் தன்னிச்சையாகச் செயல்படக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளில் சுட்டிக்காட்டியிருக்கிறது.

ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி

மேலும் ஒருவர் ஆளுநராக இருப்பதால்தான் பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருக்கிறார். ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியலமைப்புச் சட்ட நெறிகளைக் காலில் போட்டு மிதிப்பதையும், அதிகார வரம்பை மீறிச் செயல்படுவதையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அலட்சியப்படுத்துவதையும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

மதுரை காமராசர் பல்கலைக்கழக பட்டமளிப்புவிழாவை அரசியல் மேடையாக்குவதற்கு வழிவகுத்துத் தந்திருக்கும் ஆளுநரின் நடவடிக்கை கடும் கண்டத்துக்கு உரியது. தமிழ்நாடு ஆளுநர் தனக்கு வானளாவிய அதிகாரம் இருக்கிறது என்று நினைத்துச் செயல்படுவதையும், பேசுவதையும் நிறுத்திக்கொள்ள வேண்டும்'' எனத் தெரிவித்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!