Published:Updated:

``அமலாக்கத்துறையின் சம்மன்களை எம்.பி-க்கள் தவிர்க்க முடியாது; அது நம் கடமை!" - வெங்கைய நாயுடு

வெங்கைய நாயுடு

``நாடாளுமன்ற அமர்வின்போதும் சரி, மற்ற நேரங்களிலும் சரி... கிரிமினல் வழக்குகளில் அமலாக்கத்துறையின் சம்மன்களை எம்.பி-க்கள் தவிர்க்க முடியாது." - வெங்கைய நாயுடு

``அமலாக்கத்துறையின் சம்மன்களை எம்.பி-க்கள் தவிர்க்க முடியாது; அது நம் கடமை!" - வெங்கைய நாயுடு

``நாடாளுமன்ற அமர்வின்போதும் சரி, மற்ற நேரங்களிலும் சரி... கிரிமினல் வழக்குகளில் அமலாக்கத்துறையின் சம்மன்களை எம்.பி-க்கள் தவிர்க்க முடியாது." - வெங்கைய நாயுடு

Published:Updated:
வெங்கைய நாயுடு

மத்திய அரசின் ஏஜென்சியான அமலாக்கத்துறை, ஊழல் மற்றும் பண மோசடியில் ஈடுபடும் அமைச்சர்கள், எம்.பி-க்கள் மற்றும் தொழிலதிபர்கள் உட்பட பலரையும் கைதுசெய்து நடவடிக்கை எடுத்துவருகிறது. அண்மையில்கூட நேஷனல் ஹெரால்டு முறைகேடு தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுலிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி, யங் இந்தியா நிறுவனத்தின் அலுவலகத்துக்கு சீல் வைத்தது. மேலும், பண மோசடி மற்றும் ஊழல் தொடர்பாக, மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் ஆகியோரை அமலாக்கத்துறை கைதுசெய்தது.

அமலாக்கத்துறை
அமலாக்கத்துறை

ஆனால், அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கைகளை, பா.ஜ.க-வின் பழிவாங்கல் அரசியல் என எதிர்க்கட்சிகள் மத்திய அரசைச் சாடிவருகின்றன. இன்றுகூட டெல்லியில் போராட்டம் நடத்திய ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உட்பட காங்கிரஸ் கட்சியினர் பலரை போலீஸ் கைதுசெய்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வெங்கைய நாயுடு
வெங்கைய நாயுடு

இந்த நிலையில் இது போன்ற நடவடிக்கைகள் தொடர்பாக ராஜ்ய சபாவில் பேசிய அவைத்தலைவர் வெங்கைய நாயுடு, ``நாடாளுமன்ற அமர்வின்போதும் சரி, மற்ற நேரங்களிலும் சரி... கிரிமினல் வழக்குகளில் அமலாக்கத்துறையின் சம்மன்களை எம்.பி-க்கள் தவிர்க்க முடியாது. சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக, சட்டம் மற்றும் அதன் நடைமுறைகளை மதிப்பது நம்முடைய கடமை" என்று கூறினார்.