Published:Updated:

மிஸ்டர் கழுகு: கட்சியிலும் ஆட்சியிலும் மாற்றம்!

எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
எடப்பாடி பழனிசாமி

டாப் கியரில் எடப்பாடி

மிஸ்டர் கழுகு: கட்சியிலும் ஆட்சியிலும் மாற்றம்!

டாப் கியரில் எடப்பாடி

Published:Updated:
எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
எடப்பாடி பழனிசாமி

‘வேலூர் வரை சென்றுள்ளேன். எனக்காக மாலை வரை காத்திரும்’ என்று வாட்ஸ்-அப்பில் செய்தி அனுப்பியிருந்தார் கழுகார். மாலை மயங்கிய நேரத்தில் உள்ளே நுழைந்த கழுகாருக்கு சூடாக காபி கொடுத்து உபசரித்துவிட்டு, ‘‘காஷ்மீர் விவகாரம், வேலூர் தேர்தல் வரை எதிரொலித்துவிட்டதுபோலவே?’’ என்ற கேள்வியை முன்வைத்தோம். படபடவென தகவல்களைக் கொட்டத் தொடங்கினார்.

‘‘ஆமாம். தேர்தல் அன்றா இப்படியோர் அறிவிப்பை வெளியிட்டிருக்க வேண்டும் என்ற வருத்தம் அ.தி.மு.க-வினர் மத்தியில் உள்ளது. வேலூர் தொகுதியில் உள்ள கணிசமான இஸ்லாமியர் வாக்குகளைப் பெறுவதற்கு, பல உத்திகளைக் கையாண்டது ஆளும் தரப்பு. பிரசாரம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோதே, முத்தலாக் விஷயத்தில் முந்திக்கொண்டு ரவீந்தரநாத் பேசியது சர்ச்சையானது. அதை சரிகட்டியவர்களுக்கு, காஷ்மீர் விவகாரம் அடுத்த சிக்கலை ஏற்படுத்திவிட்டது. ஓட்டுப்பதிவு நண்பகல் வரை மந்தமாகவே நடந்தேறியது. அடுத்த சில மணிநேரங்களில் விறுவிறுப்படைந்தது. குறிப்பாக ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் இஸ்லாமிய மக்கள் பலரும் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தது, ஆளுங்கட்சிக்கு பாதகமாகவே பார்க்கப்படுகிறது.’’

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘‘ஓஹோ!’’

‘‘தேர்தல் களத்தில் அ.தி.மு.க தரப்பு பி.ஜே.பி-யை இழுக்காமல் இருந்ததற்குக் காரணமே, இஸ்லாமியர் வாக்குகளை மனதில்வைத்துதான். பி.ஜே.பி-யின் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தரப்பு, பிரசாரம் செய்ய வருவதாக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்திடம் சொன்னபோது, ‘நீங்கள் வரும் நாளில் முதல்வரும் பிரசாரம் செய்யவுள்ளார். எனவே, பிறகு பார்த்துக்கொள்ளலாம்’ என்று சொல்லி விட்டாராம். தி.மு.க தரப்பிலும், கூட்டணிக் கட்சிகளைப் பிரசாரத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. கடைசி நாளில் அனைத்துக் கூட்டணிக் கட்சிகளையும் அழைத்து பிரசாரப் பொதுக்கூட்டத்தை நடத்தி நிறைவுசெய்து விட்டார்கள். அதுபோன்ற கூட்டத்தைக்கூட அ.தி.மு.க நடத்தவில்லை. முதல்வரும் துணை முதல்வரும் இணைந்துகூட பிரசாரம் செய்யவில்லை. இதனால் அ.தி.மு.க-வினர் கடைசிக் கட்டத்தில் சோர்ந்து போய்விட்டதாகச் சொல்கிறார்கள்.’’

மிஸ்டர் கழுகு: கட்சியிலும் ஆட்சியிலும் மாற்றம்!

‘‘தேர்தல் முடிந்த பிறகு அமைச்சரவையில் மாற்றம் என்கிறார்களே?’’

‘‘அப்படித்தான் தகவல். கடந்த இதழில் சொன்னதுபோலவே, சில அமைச்சர்கள்மீது மத்திய அரசு கண்வைத்துவிட்டதாம். அவர்களிடமிருந்து முதல்வருக்கு சில ஓலைகள் வந்துள்ளன. ‘இந்த அமைச்சரவையை கடைசி வரை வைத்திருந்தால், 2021 சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வியைச் சந்திக்க வேண்டிவரும். எனவே, சிக்கலானவர்களைக் கழற்றிவிடுங்கள்’ என்று குறிப்பு போட்டுள்ளார் களாம். ஆகையால் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சிக்கலுக்குள்ளான சில அமைச்சர்களைக் கழற்றிவிடும் முடிவில் உறுதியாக இருக்கிறாராம் முதல்வர்.’’

‘‘இதை சிக்கல் இல்லாமல் எடப்பாடி நிறைவேற்றிவிடுவாரா?’’

‘‘அவராக முடிவு எடுத்தால்தானே சிக்கல்... மேலிடம் சொல்வதைச் செயல்படுத்தும்போது என்ன சிக்கல் வரப்போகிறது? அப்படி சிக்கல் ஏற்படுத்துபவர்களை டெல்லி தலைமையே பார்த்துக்கொள்ளும் என்று எடப்பாடி நம்புகிறார். சட்டமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.க-வுடன்தான் கூட்டணி என்ற முடிவில் பி.ஜே.பி தரப்பு இருப்பதால், இந்த முன்னேற்பாட்டைச் செய்கிறார்களாம். ஆனால், இன்னொருபுறம், ‘அ.தி.மு.க அமைச்சர்களின் செயல்பாடுகள் சரியில்லை. தமிழகத்தில் அ.தி.மு.க கூட்டணியில் இருந்தால், அங்கு நம் கட்சியை வளர்க்க முடியாது. அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதுதான் தமிழகத்தில் பி.ஜே.பி வளர்வதற்கான வழி’ என்ற கருத்தையும் பி.ஜே.பி செயல்தலைவர் ஜே.பி.நட்டா முன்வைத்துவருகிறாராம்.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘‘ஓஹோ!’’

‘‘மாவட்டச் செயலாளர்கள் சிலரை மாற்றவும் எடப்பாடி முடிவுசெய்துள்ளாராம். ஒரு மாதத்துக்கு முன்பே பட்டியலைத் தயாரித்து வைத்துள்ளார். பன்னீர் ஒத்துழைக்க மறுப்பதால், இழுபறி நீடிக்கிறது. தேர்தல் முடிந்த பிறகு, இதுகுறித்து பன்னீரிடம் பேசி, நான்கு மாவட்டச் செயலாளர்களை மாற்றம் செய்ய எடப்பாடி முடிவுசெய்துவிட்டார். கட்சியை பலப்படுத்தவும் தொடர் குற்றச்சாட்டில் சிக்கிவருபவர்களுக்கு செக் வைக்கவுமே இந்த மாற்றம் இருக்கும் என்கிறார்கள்.’’

மிஸ்டர் கழுகு: கட்சியிலும் ஆட்சியிலும் மாற்றம்!

‘‘டாப் கியரில் எடப்பாடி செல்கிறார் என்று சொல்லும்?’’

“அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கு காலம் நெருங்குவதால் இந்த வேகம். கடந்த இரண்டு ஆண்டுகளில் பல திட்டங்களை எடப்பாடி அரசு அறிவித்துள்ளது. ஆனால், அந்தத் திட்டங்கள் கடைக்கோடி வரை சென்றடைவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. இந்த நிலையில் அரசின் திட்டங்கள் மக்களிடம் சென்றடைந் துள்ளனவா என்பது குறித்தும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சிப் பணிகள் குறித்தும் அறிந்திட, மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தைக் கூட்ட எடப்பாடி முடிவுசெய்துள்ளார். ஆகஸ்ட் 8-ம் தேதி இந்தக் கூட்டம் தொடங்க வாய்ப்புள்ளது. இரண்டு நாள்கள் இந்தக் கூட்டத்தை நடத்தி மாவட்ட வாரியாக ஆய்வுகளை நடத்த இருக்கிறாராம் முதல்வர்.’’

‘‘நல்ல முயற்சிதானே?’’

‘‘ஆமாம். மறுபுறம் `தொகுதியில் நடக்கும் பணிகளை, நேரில் சென்று ஆய்வுசெய்யுங்கள்’ என்று எம்.எல்.ஏ-க்களுக்கு எடப்பாடி தரப்பிலிருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.’’

‘‘டெல்லி தி.மு.க-வில் உரசல் அதிகமாகி விட்டதாமே?’’

‘‘நான் ஏற்கெனவே சொன்னதுபோலவே கனிமொழி, டி.ஆர்.பாலு உள்ளிட்டவர்கள் இடையே சிறு உரசல்கள் எழுந்திருக்கின்றன. யாரிடம் கேட்டுப் பேசுவது என்று தெரியாமல் புதியவர்களும் முழிக்கிறார்கள். சேலம் உருக்காலையை தனியார்மயமாக்கப்போவதாக எழுந்திருக்கும் பிரச்னை குறித்து மத்திய அமைச்சரைச் சந்தித்துப் பேச, அந்த ஆலைத் தொழிற்சங்கத்தினர் டெல்லி வந்துள்ளார்கள். அவர்களை, சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் அழைத்துச் சென்றுள்ளார் கனிமொழி. இது டி.ஆர்.பாலுவுக்குத் தெரியவர, ‘நாடாளுமன்றக் குழுத் தலைவர் நானா, அவரா? என்னைக் கேட்காமல் எப்படி அமைச்சரைச் சந்திக்கலாம்?’ என்று கோபப்பட்டாராம். சேலம் எம்.பி-யான பார்த்திபனோ, ‘அவர்களை அழைத்துச் சென்றது எனக்கே தெரியாது’ என்று புலம்பியுள்ளார்.’’

மோடிக்கு திருக்குறள் பரிசளிக்கும் வைகோ
மோடிக்கு திருக்குறள் பரிசளிக்கும் வைகோ

‘‘அப்படியா?’’

‘‘மறுபுறம் `ஆ.ராசா தனி லாபி செய்கிறார்’ என்று சிலர் புலம்புகிறார்கள். தென் சென்னை எம்.பி-யான தமிழச்சி தங்கபாண்டியனுக்கு தமிழ்நாடு ஹவுஸில் சாதாரண அறையை முதலில் ஒதுக்கியுள்ளார்கள். அவர் நேரடியாக ராசாவிடம் சென்று, தனக்கு சூட் ரூம் வேண்டும் என்று கேட்டுள்ளார். ராசாவும் மல்லுக்கட்டி சூட் ரூம் வாங்கிக் கொடுத்துவிட்டாராம். அதேநேரம் மூத்த உறுப்பினரான வைகோவுக்கு சாதாரண அறையை ஒதுக்கியுள்ளனர். ‘மூத்த உறுப்பினரான எனக்கு சாதா ரூம்... புதியவர்களுக்கு சூட் ரூமா?’ என்று வைகோ கொந்தளித்துவிட்டாராம்.’’

‘‘அவர்தான் நாடாளுமன்றத்திலும் கடுமையாகக் கொந்தளிக்கிறராரே!’’

‘‘தன்னுடைய இருப்பை, சரியாகப் பதிவுசெய்கிறார் வைகோ. காஷ்மீர் விவகாரத்தில் இவரின் பேச்சு அனைத்து உறுப்பினர்களையும் கவனிக்கவைத்துவிட்டது. சிறப்புச் சட்டம் குறித்த மசோதாவில் அவரின் பேச்சுக்கு நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பலரும் பாராட்டு தெரிவிக்க, புன்னகையை பதிலாகத் தந்துள்ளார் வைகோ. நிர்மலா சீதாராமனைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளார் வைகோ. ‘அலுவலகத்துக்கு வாருங்கள்’ என்று நிர்மலா சொல்ல, ‘என் மனைவியோடு உங்களைச் சந்திக்க வேண்டும்’ என்று வற்புறுத்தியுள்ளார். ஒருவழியாக ஆடிவெள்ளி அன்று இரவு நிர்மலா வீட்டுக்கு தன் மனைவியோடு சென்றுள்ளார் வைகோ. `இந்தச் சந்திப்பு குறித்து எந்தப் புகைப்படத்தையும் வெளியிட வேண்டாம்’ என்று நிர்மலா சொன்னதும், மறுக்காமல் ஓகே சொல்லியுள்ளார். பட்டு வேஷ்டி, பட்டுச்சேலையை தம்பதிக்குப் பரிசாகக் கொடுத்துள்ளார் நிர்மலா.’’

‘‘ஒருபுறம் இணக்கம், மறுபுறம் பாய்ச்சல் என்று சொல்லும்!’’

‘‘காஷ்மீர் பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு முன்பாக, மோடியைத் தனியாகச் சந்தித்து திருக்குறள் புத்தகத்தைப் பரிசாகத் தந்துள்ளார் வைகோ. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாகவும் வெளியில் நட்புடனும் வைகோ செயல்படுவதைப் பார்த்த தி.மு.க உறுப்பினர்கள், ‘இவர் கேரக்டரையே புரிஞ்சிக்க முடியலையே!’ என்று குழம்பித் தவிக்கிறார்கள்’’ என்றபடியே சிறகை விரித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism