சமூகம்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: மணிகண்டன் முதல் விக்கெட்... இன்னும் மூவருக்கு பிராக்கெட்!

எடப்பாடியுடன் மணிகண்டன்
பிரீமியம் ஸ்டோரி
News
எடப்பாடியுடன் மணிகண்டன்

கழுகார்

துள்ளலோடு உள்ளே வந்த கழுகார், நாம் கொடுத்த ஃபில்டர் காபியைக் குடித்ததும் மேலும் உற்சாகமாகி, ‘‘விகடன் இணையதளத்தில், `மீண்டும் கேபிளைப் பிடித்த உடுமலை ராதாகிருஷ்ணன்... அமைச்சர் மணிகண்டன் பதவிக்கு ஆபத்து!’ என்று ஜூலை 29 அன்றே செய்தி வெளியிட்ட உமது நிருபருக்குப் பாராட்டு’’ என்று சொன்னார்.

சுடச்சுட தயாராகிக்கொண்டிருந்த அட்டைப் படக் கட்டுரையைப் படித்துவிட்டு, ‘‘மணிகண்டன் நீக்கத்தால், ஜூனியர் அமைச்சர்கள் சிலர் ஆடிப் போயிருக்கிறார்கள். மணிகண்டன் முதல் விக்கெட்தான்... அவரின் நெருங்கிய நண்பரான பெண் அமைச்சர் ஒருவர்மீதும் முதல்வர் கடுப்பில் இருக்கிறாராம். அதேபோல் சர்ச்சையில் சிக்கிய மூத்த அமைச்சர் ஒருவர், வட மாவட் டத்தைச் சேர்ந்த அமைச்சர் ஆகியோரையும் கண்காணிப்பு வளையத்துக்குள் வைத்திருக்கிறா ராம் எடப்பாடி.’’

‘‘உதயகுமாருக்கு முக்கியத்துவம் தரப்படு கிறதே?’’

மிஸ்டர் கழுகு: மணிகண்டன் முதல் விக்கெட்... இன்னும் மூவருக்கு பிராக்கெட்!

‘‘மணிகண்டன் நீக்கத்தின் மூலமாக முக்குலத் தோரை ஒதுக்குகிறார் என்கிற கெட்டபெயர் வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான், அவருடைய சமூகத்தைச் சேர்ந்த ஆர்.பி.உதய குமாரிடமே மணிகண்டனின் பதவியை வழங்கியிருக்கிறார் எடப்பாடி.’’

‘‘ஓ... ராஜதந்திரமாக்கும். சரி, தி.மு.க கூட்டணிக் குள் குஸ்தி ஆரம்பித்துவிட்டது போலிருக்கிறதே?’’

‘‘வைகோ பிரச்னையைச் சொல்கிறீரா?

பி.ஜே.பி கொண்டுவந்த காஷ்மீர் தொடர்பான மசோதாவை எதிர்த்துப் பேசும்போது, ‘காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிதான் முதலில் துரோகம் செய்தது’ என்று வைகோ பேசியிருந்தார். `காங்கிரஸைப் பற்றித்தான் விமர்சிக்கப் போகிறேன்’ என்று சொல்லியே, சபாநாயகரிடம் நேரம் பெற்று பேசினார் வைகோ. மூன்று நாள் களுக்குப் பிறகு, ‘சந்தர்ப்பவாத அரசியல் செய்யும் பச்சோந்தி’ என்று வைகோவை கடுமையாக விமர்சித்திருக்கிறார் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி. ‘காங்கிரஸ் கட்சியை எதற்காக வைகோ தாக்கிப் பேசவேண்டும், அதை ஏன் நீங்கள் கண்டிக்காமல் இருக்கிறீர்கள்?’ என்று அழகிரியை மூத்த தலைவர் கள் சிலர் உசுப்பேற்றியிருக்கிறார்கள். அதற்குப் பிறகுதான் இந்த அதிரடி அறிக்கை!’’

‘‘ஓஹோ!’’

‘‘ `காங்கிரஸ் கட்சியுடன் இனி கூட்டணியே வைக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு, நம் வாக்குகளையும் பெற்றுதானே இப்போது ராஜ்ய சபா உறுப்பினர் ஆகியிருக்கிறார். டெல்லியில் கூட்டணிக் கட்சிக்காரர் மாதிரியா செயல்படு கிறார்? பழைய பி.ஜே.பி பாசம் அவர் மனதில் இன்னுமிருக்கிறது’ என்று காங்கிரஸ் தரப்பில் கொந்தளிக்கிறார்கள்.’’

‘‘ம.தி.மு.க தரப்பில் என்ன சொல்கிறார்கள்?’’

‘‘பழைய வரலாற்றைப் பேசும்போது, காங்கிரஸ் செய்த தவற்றையும் சொல்ல வேண்டிய நிலை வந்தது. அழகிரி கொடுத்த அறிக்கையில் மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக் கிறார். ஆர்.எஸ்.எஸ் முகமாக தமிழகத் தில் இருக்கும் குருமூர்த்தி, நிதியமைச்சர் ஆக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேசியதை அழகிரி ஏன் கண்டுகொள்ள வில்லை என்கிறார்கள்.’’

‘‘தி.மு.க இதை எப்படிப் பார்க்கிறது?’’

‘‘தி.மு.க அமைதியாக வேடிக்கை பார்க்கிறது. டெல்லியில் வைகோ தனி ஆவர்த்தனம் செய்கிறார் என்று தி.மு.க தலைமைக்கே அவர் மீது வருத்தமிருந்தது. இப்போது காங்கிரஸ் கட்சியை கொம்பு சீவிவிட்டு வேடிக்கை பார்ப்பதைப்போலிருக்கிறது. அதேசமயம், ம.தி.மு.க-விலேயே இரண்டாம்கட்டத் தலைவர்கள் வைகோவின் இத்தகைய நடவடிக்கையை ரசிக்கவில்லையாம்.’’

``அடடா...’’

``வராது வந்த மாமணியாக எம்.பி பதவி கிடைத்துள்ளது. அதை வைத்துக்கொண்டு இஷ்டம்போல் நடந்துகொள்கிறார். தேவையில் லாமல் காங்கிரஸ் கட்சியைச் சீண்டியிருக்கிறார். இவருக்கு பதவி கிடைத்துவிட்டது என்பதற்காக, கூட்டணிக் கட்சியினரை உதாசீனப்படுத்தலாமா? நாளைக்கே உள்ளாட்சித் தேர்தல் வந்தால், எங்களுடைய ஆள்களுக்கு வாய்ப்புகளை வாங்கித் தரவேண்டியிருக்கும். அப்போது காங்கிரஸ் கட்சி காலைவாரிவிடும் வேலையைச் செய்தால் என்னாவது? என்றொல்லாம் பொருமுகிறார்கள் ம.தி.மு.க-வில்.’’

‘‘கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில், சீனியர்கள் பலருக்கும் சங்கடமாகிவிட்டதாகச் சொல்கிறார்களே...’’

‘‘உண்மைதான்... மம்தாவை வரவேற்பதிலேயே வருத்தங்கள் ஆரம்பித்துவிட்டன. மூத்த தலைவர்களை அனுப்பாமல், பொன்முடியோடு உதயநிதியை அனுப்பிவைத்தார் ஸ்டாலின். வரவேற்க வேண்டுமென்ற ஆர்வத்தில் டெல்லியில் கனிமொழி கிளம்பத் தயாரானபோது, ‘நீங்கள் இதற்காகக் கிளம்பி வரவேண்டாம்’ என்று சென்னையிலிருந்து உத்தரவு போனதாம். அதில் கனிமொழி ரொம்பவே அப்செட் என்கிறார்கள்.’’

‘‘அப்புறம்?’’

‘‘நினைவுநாளன்று அண்ணா சிலையில் இருந்து ஊர்வலம் நடைபெற்றது. அதில் ஸ்டாலினுடன் கனிமொழியும் சேர்ந்து நடந்துவந்தார். அவரைத் தள்ளிக்கொண்டு ஸ்டாலின் பக்கத்தில் வர முயன்றிருக்கிறார் பெண் நிர்வாகி ஒருவர். ஒருகட்டத்தில் கனிமொழி டென்ஷனாகி, ‘நீங்கள் முன்னுக்கு வர, என்னைப் பின்னுக்குத் தள்ளா தீர்கள்’ என்று கடுப்பாகச் சொல்லிவிட்டாராம். அதே ஊர்வலத்தில் இளைஞர் அணியின் செயலாளர் உதயநிதி பின்னால் நடந்துவந்தார். ஊர்வலம் தொடங்கும் வரை ஸ்டாலின் பின்னால் நின்ற சட்டமன்ற உறுப்பினர்களும் நிர்வாகிகளும், ஊர்வலம் கிளம்பியதும் உதயநிதியின் பின்னால் முண்டியடித்துக்கொண்டு நின்றார்கள்.’’

மிஸ்டர் கழுகு: மணிகண்டன் முதல் விக்கெட்... இன்னும் மூவருக்கு பிராக்கெட்!

‘‘சரி...’’

‘‘ஊர்வலம் நினைவிடத்தை அடைந்தபோது உதயநிதி கொஞ்சம் பின்தங்கியே வந்தார். தலைவர் அஞ்சலி செலுத்திய பிறகு தனியாக தன் பரிவாரங்களுடன் அஞ்சலி செலுத்தவே இந்த முன்னேற்பாடு. உதயநிதி அஞ்சலி செலுத்துவதற் காக மலர்வளையத்துடன் காத்திருந்தார்கள் அவருடைய ஆதரவாளர்கள். கனிமொழியும் தன் குடும்பத்தினருடன் தனியாக வந்து அஞ்சலி செலுத்தினார். கருணாநிதி மறைவுக்குப் பிறகு இதே நினைவிடத்தில்வைத்து குரல்கொடுத்த மு.க.அழகிரி, எந்தச் சத்தமும் இல்லாமல் தன் குடும்பத்தினருடன் வந்து அஞ்சலி செலுத்தி விட்டுச் சென்றார்.’’

‘‘பொதுக்கூட்டத்தில் ஏதாவது விசேஷம்?’’

‘‘காஷ்மீர் பிரச்னை காரணமாக ஃபரூக் அப்துல்லா வர முடியவில்லை. சென்னை வந்த மம்தா, அவரிடம் தொலைபேசியில் பேசியிருக்கி றார். பொதுக்கூட்டத்தின் முன்வரிசையில் கருணாநிதியின் குடும்பத்தினர் அமர்ந்திருந்தார்கள். அதில் துர்கா மட்டும் மிஸ்ஸிங். கனிமொழி, மேடையில் மிஸ்ஸிங். சால்வை அணிவிக்கும் வைபவத்தின்போது கனிமொழியைத் தேடினார் மம்தா பானர்ஜி. அவர் பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருக்க, தேடிப்பிடித்து அவருக்கு சால்வை வழங்கினார் மம்தா. உடன் இருந்த செல்விக்கும் ஒரு சால்வை கொடுத்து மகிழ்ந்தார்.’’

‘‘காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்குள்ளும் கடும் உரசல்போலிருக்கிறதே?’’

கருணாநிதி நினைவுநாள் ஊர்வலத்தில்...
கருணாநிதி நினைவுநாள் ஊர்வலத்தில்...

‘‘மத்திய அரசு கொண்டுவந்த மசோதாவை, ப.சிதம்பரம், குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் எதிர்த்தனர். ஆனால், ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்ட சில இளம் காங்கிரஸ் தலைவர்கள் ‘அந்த மசோதாவை நாம் ஆதரித்திருக்க வேண்டும்’ என்று குரல் எழுப்பினார்கள். இந்த முரண்பாட்டால்தான் இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பேசுவதையே ராகுல் காந்தி தவிர்த்துவிட்டார் என்கிறார்கள்.’’

‘‘மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆகஸ்ட் 11-ம் தேதி சென்னைக்கு வருகிறாரே?’’

‘‘ஆமாம். துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடுவின் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டுவிட்டு, அன்று மாலையே டெல்லி திரும்புகிறார். அமித் ஷா சென்னை விசிட்டின் போது அவரை தனியாகச் சந்திக்க அப்பாயின் மென்ட் கேட்டிருக்கிறார்கள் சில அ.தி.மு.க புள்ளிகள்!’’

‘‘அதுசரி... தமிழக பி.ஜே.பி-க்கு புதிய தலைவர் நியமிப்பார்களா இல்லையா?’’

‘‘அதற்கான வேலை வேகமாக நடக்கிறது. பொன்னார், சி.பி.ஆர்., வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் எனப் பலரும் பட்டியலில் இருக்கிறார்கள். தமிழிசை, பொன்னார், சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைவர் பதவியைப் பார்த்தவர்கள். வானதி கொஞ்சம் ஜூனியர் என்பதால், நயினார் நாகேந்திரனுக்கு வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதோடு, திராவிட அரசியல் தெரிந்தவர் என்பதும் அவருக்கு பலமாகச் சொல்லப்படுகிறது.’’

‘‘அனைத்து மாவட்ட ஆட்சியர்களையும் அழைத்து கூட்டம் போட்டாரே முதல்வர். அதில் ஏதாவது விசேஷம்?’’

மம்தாவுடன் ஸ்டாலின்
மம்தாவுடன் ஸ்டாலின்

‘‘ஒவ்வொரு மாவட்டத்திலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களை, தனித்தனியாக முதல்வர் கேட்டிருக்கிறார். `நீர்மேலாண்மைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், நம் அரசு அறிவித்த எந்தத் திட்டத்தையும் கிடப்பில் போட்டுவிடாதீர்கள்’ என்று அட்வைஸ் செய்திருக்கிறார் முதல்வர்.’’

‘‘அத்திவரதரைக் காண்பதற்கு நாளுக்கு நாள் கூட்டம் அதிகமாகிக்கொண்டேயிருக்கிறதே?’’

‘‘கடைசி மூன்று நாள்கள் கடுமையான கூட்டம் இருக்கும் என்று, பாதுகாப்பை பலப் படுத்துமாறு காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி யிருக்கிறது அரசு மேலிடம். ஆனால், பிரச்னையே அவர்களால்தான் என்கிறார்கள் அங்கு இருக்கிற வர்கள். மேற்கு வாயிலின் வழியாகவே கூட்டம் வெளியேற வழி இருக்கிறது. அந்த வழியாகவே தங்களுக்கு வேண்டியவர்களை காவல் துறையினர் உள்ளே அழைத்துச் செல்வதால், உள்ளே இருப்பவர்கள் வெளியே வரத் திண்டாடுகின்றனர். கடைசி நாளில் இதை அனுமதித்தால், பெரிய சிக்க லாகும் என்ற புலம்பல் அத்திரவரதர் சந்நிதியில் கேட்கிறது’’ என்ற கழுகார் ‘‘மழைக்கு முன் கிளம்புகிறேன்’’ என்று சொல்லி, சிறகு விரித்தார்.

வாரிசுக்கு ஒரு வாரிசு!

மிழக வாரிசு அரசியல் தலைவர் ஒருவருக்கும், இளம் நடிகை ஒருவருக்கும் நெருக்கம் அதிகமாகி, வாரிசு ஒன்று கருவானதாம். பெரிய இடத்திலிருந்து கடுமையான அழுத்தம் கொடுத்து, கருவைக் கலைத்து விட்டார்களாம். நடிகை மிகுந்த மனவேதனையில் இருப்பதை அறிந்த ஒரு டீம், அவரை வைத்து அரசியல் வாரிசுக்கு எதிராக அஸ்திரத்தை ஏவத் தயாராகிவருகிறதாம்.