Published:Updated:

ரஜினி - பி.ஜே.பி உறவு: இருக்கமாட்டார்... ஆனால், இருப்பார்!

தனித்துவமான தலைவராகவும் வலம்வர விரும்புகிறார் ரஜினி. அவருக்காக அண்டை மாநில முதல்வர் ஒருவர் டெல்லி பி.ஜே.பி மேலிடத்தில் பேசிவருகிறார்.

ரஜினி
ரஜினி

காஷ்மீர் பிரச்னையில் தி.மு.க எம்.பி-க்கள் போர்க்குரல் கொடுத்தார்கள். அதற்கு, பி.ஜே.பி-யின் ரியாக்‌ஷன் என்ன என்பது தெரியவில்லை. ஆனால், தமிழகத்தில் இரண்டு மதுபான நிறுவனங்களில் கடந்த வாரத்தில் திடீரென ரெய்டு நடந்தது. அதற்குப் பின்னணியில் அரசியல் காரணம் இருப்பதாகப் பேசிக்கொள்கிறார்கள். ஏனெனில், அதில் ஒரு நிறுவனத்தினர், ஆழ்வார்பேட்டை அதிகார மையத்துக்கு நெருக்கமானவர்களாம். மற்றொரு நிறுவனம் தி.மு.க தலைவர் ஒருவருக்கு நெருக்கமானதாம். இந்த ரெய்டுகளில், கணக்கில் வராத 700 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமானவரித் துறை அதிகாரிகள் தரப்பில் சொல்கிறார்கள். https://bit.ly/2YINZpY

பி.ஜே.பி-யின் அடுத்த தமிழகத் தலைவரே அவர்தான்' என்றெல்லாம் பேசுகிறார்கள்

ரஜினியின் 'கிருஷ்ணன் - அர்ஜுனன்' பேச்சு பரபரப்பாகிவிட்டது. அந்த நிகழ்ச்சிக்கு அவர் வருவதே சந்தேகமாக இருந்ததாம். ஆனால், ஆடிட்டர் ஒருவர் மற்றும் பத்திரிகையாளர்கள் சிலரின் ஆலோசனைகளைக் கேட்டுவிட்டு, கடைசி நேரத்தில் நிகழ்ச்சிக்குக் கிளம்பினாராம். அங்கே போய் பரபரப்பைப் பற்றவைத்துவிட்டார். அவருக்காக துணை ஜனாதிபதியின் புரொட்டகாலில் சில மாற்றங்கள் செய்தார்களாம். ரஜினியின் பேச்சைவைத்து, 'அவர் கட்சி தொடங்கி பி.ஜே.பி-யுடன் கூட்டணி வைக்கப்போகிறார். பி.ஜே.பி-யின் அடுத்த தமிழகத் தலைவரே அவர்தான்' என்றெல்லாம் பேசுகிறார்கள். ஆனால், '2020, ஜனவரி வரை அவரிடமிருந்து அரசியல் அறிவிப்பு எதுவும் வராது' என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்."

சந்திரசேகர ராவ், நவீன் பட்நாயக் பாணியில் பி.ஜே.பி-யுடன் நட்பைத் தொடரவும்... அதேநேரத்தில் தனித்துவமான தலைவராகவும் வலம்வர விரும்புகிறார் ரஜினி. அவருக்காக அண்டை மாநில முதல்வர் ஒருவர் டெல்லி பி.ஜே.பி மேலிடத்தில் பேசிவருகிறார். 'ரஜினியை பி.ஜே.பி-யில் சேரச்சொல்லி கட்டாயப்படுத்த வேண்டாம். நான் எப்படி காங்கிரஸ் எதிர்ப்பு உணர்வில் உங்களோடு நெருக்கமாக இருக்கிறேனோ, அதேபோல் உங்களுக்கு ரஜினி இருப்பார். அதற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன். ஸ்டாலின், காங்கிரஸை விட்டுப் பிரிய மாட்டார் என்பதை நான் நேரடியாகப் பேசியதால் புரிந்துகொண்டேன். ரஜினியை சரியான முறையில் பயன்படுத்தினால்தான் தி.மு.க-வைத் தோற்கடிக்க முடியும். கூட்டணி இல்லாமல் நட்பு வளையத்துக்குள் அவரைப் பயன்படுத்திக்கொள்ளலாம்' என்று கூறியிருக்கிறார்.

ரஜினி - பி.ஜே.பி உறவு: இருக்கமாட்டார்... ஆனால், இருப்பார்!

'ரஜினி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. பிரச்னைகளின் தன்மையைப் பொறுத்து பி.ஜே.பி-யின் முடிவுகளை ஆதரிப்பார். அதேசமயம், தனித் தன்மையுடன் தமிழக அரசியல் சூழல்களை முன்னெடுப்பார்' என்றெல்லாம் பி.ஜே.பி தலைமையிடம் எடுத்துச் சொன்னாராம்.

- இத்துடன், ஜூனியர் விகடனில் கழுகார் வெளியிட்டுள்ள 'ஊழல் ஸ்பெஷல்' தகவல்களை வாசிக்க > மிஸ்டர் கழுகு: கோட்டை முதல் குமரி வரை... கோடிகளில் புரளுது டிரான்ஸ்ஃபர்... துறைதோறும் கேன்சர்! https://www.vikatan.com/government-and-politics/politics/mr-kazhugu-politics-and-current-affairs-11

> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/