Published:Updated:

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்: சட்டசபை தேர்தல்... ஒரு பார்வை! #TNelections2021

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

பிரசாரத்தைத் தொடங்கிய சில தினங்களிலேயே பன்னீர்செல்வத்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, அவரால் தொடர்ந்து பிரசாரத்துக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அவருக்காக அவரது மகன் எம்.ஆர்.கே.பி.கதிரவன் பிரசாரத்தில் ஈடுபட்டது வாக்காளர்களை எந்த அளவுக்கு கவர்ந்தது என்பது தெரியவில்லை.

திமுகவின் செல்வாக்கு மிக்க தொகுதிகளில் ஒன்றான குறிஞ்சிப்பாடி தொகுதியில், அக்கட்சியின் சார்பில் தொடர்ந்து 6 வது முறையாக இந்தத் தேர்தலிலும் களமிறக்கப்பட்டார் திமுக வேட்பாளரும், கடலூர் கிழக்கு மாவட்டதிமுக செயலாளருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். 1962 முதல் 2016 வரை இத்தொகுதியில் நடைபெற்ற தேர்தல்களில் 9 முறை திமுக-வும் 4 முறை அதிமுக-வும் வெற்றி பெற்றுள்ளன. எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் இத்தொகுதியில் 1996, 2001, 2006 மற்றும் 2016 சட்டமன்ற தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளார். கடந்த தேர்தலில் இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கு கிடைத்த வாக்குகள் 82,864. இவரை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்த அதிமுக வேட்பாளர் ஆர்.ராஜேந்திரன் பெற்ற வாக்குகள் 54,756. இந்த முறை எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தை எதிர்த்து அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், நாம் தமிழர் கட்சியின் சுமதி, மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் சந்திரமௌலி, அமமுகவின் ஏ.வசந்தகுமார் உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளராக போட்டியிட்டாலும், நேரடிப் போட்டி திமுக - அதிமுக இடையேதான் காணப்பட்டது.

 எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

அதே சமயம், அதிமுகவில் நிலவிய இந்தக் கோஷ்டி பூசல் எம்.ஆர்.கேவுக்குச் சாதகமான அம்சமாக பார்க்கப்பட்டது. இருப்பினும், பிரசாரத்தைத் தொடங்கிய சில தினங்களிலேயே பன்னீர்செல்வத்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, அவரால் தொடர்ந்து பிரசாரத்துக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அவருக்காக அவரது மகன் எம்.ஆர்.கே.பி.கதிரவன் பிரசாரத்தில் ஈடுபட்டது வாக்காளர்களை எந்த அளவுக்கு கவர்ந்தது என்பது தெரியவில்லை. ஆனால் இத்தொகுதியில் திமுகவுக்கு இருக்கிற வழக்கமான செல்வாக்கு, கடந்த காலங்களில் திமுக வேட்பாளருக்குக் கிடைத்த தொடர் வெற்றி போன்றவை, எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்தின் வெற்றி வாய்ப்புக்கு சாதகமான அம்சங்களாக தேர்தல் சமயத்தில் பார்க்கப்பட்டது.

அடுத்த கட்டுரைக்கு