Published:Updated:

`உள்ளாட்சித் தேர்தல் முடியும்வரை விலக்கு' -லஞ்ச ஒழிப்புத்துறைக்கு எம்.ஆர்.விஐயபாஸ்கர் கடிதம்

லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் அவர் ஆஜராவாரா என்று எதிர்பார்ப்பு இருந்தது. இந்தநிலையில், உள்ளாட்சித் தேர்தல் முடியும் வரை விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கு கேட்டு, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கடிதம் அனுப்பியிருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அதிமுக முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு, லஞ்ச ஒழிப்புத்துறையில் நேரில் ஆஜராகச் சொல்லி சம்மன் அனுப்பியிருந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தல் பரப்புரையைக் காரணம் காட்டி, விலக்கு கேட்டு கடிதம் அனுப்பியிருக்கிறார்.

லஞ்ச ஒழிப்புதுறை
லஞ்ச ஒழிப்புதுறை
நா.ராஜமுருகன்
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் ஆஜராக வேண்டும்! - லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன்

திமுக ஆட்சிக்கு வந் பிறகு, கடந்த ஆட்சியில் வருமானத்துக்கு மீறி சொத்துச் சேர்த்ததாக, முன்னாள் அமைச்சர்கள்மீது ரெய்டு நடத்தப்பட்டுவருகிறது. முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, கே.சி.வீரமணி என்று தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தி வருகிறது. தற்போது, வேலுமணி தொடர்புடைவர்களின் இல்லங்களிலும் சோதனை தொடர்ந்து வருகிறது. அந்தவகையில், கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு, தொழில் நிறுவனங்கள் போன்றவற்றில், கடந்த ஜூலை 21-ம் தேதி, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை மேற்கொண்டனர். அவரின் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

பிரசாரத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
பிரசாரத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
நா.ராஜமுருகன்

அவர் போக்குவரத்துறை அமைச்சராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்ததாக அவர் சம்பந்தப்பட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் முடிவில், கணக்கில் வராத ரூ.25 லட்சம் பணம், ஆவணங்களைக் கைப்பறியதாகத் தெரிவித்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்திருந்தனர்.

இந்தநிலையில், வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதை அடுத்து, 30-ம் தேதியான நேற்று, எம்.ஆர்.விஜயபாஸ்கரை நேரில் ஆஜராக லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியது. கரூர், 8-வது வார்டு மாவட்ட ஊராட்சிக்குழுப் பதவிக்கு போட்டியிடும் தானேஷ் என்கிற முத்துக்குமாருக்குக் கடந்த சில நாள்களாக வாக்குச் சேகரித்துவருகிறார் எம்.ஆர் விஜயபாஸ்கர். லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் அவர் ஆஜராவாரா என்று எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், உள்ளாட்சித் தேர்தல் முடியும் வரை விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கு கேட்டு, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கடிதம் அனுப்பியிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு