Published:Updated:

``கரூர் எஸ்.பி., திமுக மாவட்டச் செயலாளர்போல் செயல்படுகிறார்!" - குற்றம்சாட்டிய எம்.ஆர்.விஜயபாஸ்கர்

வாக்குவாதம் செய்யும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ( நா.ராஜமுருகன் )

காவல் ஆய்வாளரைப் பின்தொடர்ந்த அதிமுக-வினர், 'எதற்காக எங்கள் அலுவலகத்துக்கு வந்தீங்க, திமுக அமைச்சர் ஒரு ஓட்டுக்கு 2,000 ரூபாய் கொடுத்துவருகிறார். நாங்கள் புகார் தருகிறோம். உங்களால் அதைத் தடுக்க முடியுமா?' எனக் கேள்வி கேட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.

``கரூர் எஸ்.பி., திமுக மாவட்டச் செயலாளர்போல் செயல்படுகிறார்!" - குற்றம்சாட்டிய எம்.ஆர்.விஜயபாஸ்கர்

காவல் ஆய்வாளரைப் பின்தொடர்ந்த அதிமுக-வினர், 'எதற்காக எங்கள் அலுவலகத்துக்கு வந்தீங்க, திமுக அமைச்சர் ஒரு ஓட்டுக்கு 2,000 ரூபாய் கொடுத்துவருகிறார். நாங்கள் புகார் தருகிறோம். உங்களால் அதைத் தடுக்க முடியுமா?' எனக் கேள்வி கேட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.

Published:Updated:
வாக்குவாதம் செய்யும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ( நா.ராஜமுருகன் )

கரூர் பழனியப்பா தெருவிலுள்ள அ.தி.மு.க கட்சி அலுவலகத்தில் வாக்காளர்களுக்குப் பட்டுவாடா செய்ய பரிசுப்பொருள்கள் பதுக்கிவைத்திருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஒரு மணி நேரம் மேற்கொண்ட அதிரடிச் சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், அவர்களின் சோதனையில் எதுவும் சிக்கவில்லை என்று தெரிகிறது.

வாக்குவாதம் செய்யும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
வாக்குவாதம் செய்யும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
நா.ராஜமுருகன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கரூர் மாநகராட்சிக்கான தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. மொத்தமுள்ள 48 வார்டுகளில் தி.மு.க., அ.தி.மு.க உள்ளிட்ட முக்கியக் கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தியிருக்கின்றன. இந்த நிலையில், கடந்த 17-ம் தேதியோடு பிரசார காலம் முடிவடைந்த நிலையில், 18-ம் தேதி பிரதான கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள், வாக்காளர்களுக்குப் பணம், பரிசுப்பொருள்கள் உள்ளிட்டவற்றை வழங்குவதாகப் புகார் வந்தது. அந்த வகையில், கரூர் அ.தி.மு.க அலுவலகத்தில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பரிசுப்பொருள்களைப் பதுக்கிவைத்திருப்பதாக, புகார் சென்றிருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதைத் தொடர்ந்து, கரூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் செந்தூர்பாண்டியன் திடீரென்று அ.தி.மு.க அலுவலகத்துக்குள் சென்று சோதனை மேற்கொண்டார். அவர்களோடு தேர்தல் பறக்கும் படையினரும் சென்றனர். அப்போது, பறக்கும் படையினர், காவல்துறையினரிடம் முன்னாள் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும், அ.தி.மு.க-வினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், சோதனையில் எதுவும் கிடைக்காததால், கரூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் செந்தூர்பாண்டியன் மற்றும் காவல் துறையினர் அ.தி.மு.க அலுவலகத்தைவிட்டு உடனடியாகத் திரும்பி வேகமாகச் சென்றனர். ஆய்வாளரைப் பின்தொடர்ந்த அ.தி.மு.க-வினர், 'எதற்காக எங்கள் அலுவலகத்துக்கு வந்தீங்க, தி.மு.க அமைச்சர் ஒரு ஓட்டுக்கு 2,000 ரூபாய் கொடுத்துவருகிறார். நாங்கள் புகார் தருகிறோம். உங்களால் அதைத் தடுக்க முடியுமா?' எனக் கேள்வி கேட்டதால், காவல் ஆய்வாளர் பதில் சொல்ல முடியாமல் திணறினார். அதன் பிறகு, ஒருவழியாக அங்கிருந்த ஆய்வாளர் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் சென்றனர்.

பேட்டியளிக்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
பேட்டியளிக்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
நா.ராஜமுருகன்

இந்நிலையில், அ.தி.மு.க முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அ.தி.மு.க மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "2 லட்சம் ஹாட் பாக்ஸ், ஓட்டுக்கு 2,000 ரூபாய் என ஆளும் தி.மு.க கட்சியினர் கொடுத்துவருகின்றனர். கரூரிலும், கோயம்புத்தூரிலும் பண மழை கொட்டுகிறது. அதை எந்தத் தேர்தல் பறக்கும் படையும் பிடிக்கவில்லை. கோவை அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள், நிர்வாகிகளைக் கைதுசெய்ததைப்போல், கரூரிலும் தேவையற்ற வதந்திகளைப் பரப்பி கைதுசெய்ய தி.மு.க-வினர் முயல்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கரூர் மாநகராட்சியில் 48 வார்டுகளிலுள்ள ஒரு வார்டு, ஒரு அ.தி.மு.க வேட்பாளரை ஏற்கெனவே விலைக்கு வாங்கியதுபோல் மற்ற வேட்பாளர்களையும் விலைக்கு வாங்கப் பார்த்தார்கள். எவரும் போகாததால், அனைத்து அ.தி.மு.க வேட்பாளர்களையும் மிரட்டி தேர்தல் வேலை பார்க்கவிடாமல் செய்ய முயல்கின்றனர். திருட்டு தி.மு.க., கரூரில் திருட்டுத்தனமாக வெற்றிபெற முயல்கிறது. கரூர் மண்டலத் தேர்தல் பொறுப்பாளர் மந்திராச்சலம், ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த மாட்டார். அவர், கட்சி வேட்டி, வேட்டி கட்டாத தி.மு.க புள்ளிபோலச் செயல்படுகிறார். அதேபோல், கோவை மாவட்டத்தில் தொடர்ந்து, கரூர் மாவட்டத்தில் ஆளுங்கட்சியினர் பல்வேறு அராஜகங்களில் ஈடுபட்டுவருகின்றனர். அதன் தொடர்ச்சியாகவே, அ.தி.மு.க கட்சி அலுவலகத்தில் சோதனை நடைபெற்றுள்ளது. ஏற்கெனவே, ஊரக உள்ளாட்சித் தேர்தலை அ.தி.மு.க மிக அமைதியாக நடத்தியது. தற்போது, தி.மு.க ஆட்சியில் கோவையிலும் கரூரிலும் மட்டும் இது போன்ற அராஜகங்கள் அரங்கேறிவருகின்றன.

அ.தி.மு.க அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படையினர்
அ.தி.மு.க அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படையினர்
நா.ராஜமுருகன்

குறிப்பாக, காவல்துறையினர் அ.தி.மு.க-வினர் மீது பொய் வழக்குகள் பதிந்து, தி.மு.க-வுக்கு ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். வேட்புமனுத்தாக்கல் தொடங்கிய நாள் முதல் அ.தி.மு.க வேட்பாளர்கள் மிரட்டப்பட்டனர். தற்போது, வாக்குப்பதிவு நடைபெறும் மையங்களுக்குச் செல்லும் அ.தி.மு.க முகவர்களை, தி.மு.க-வினர் மிரட்டிவருகின்றனர். திமுக-வினருக்கு தோல்வி பயம் இருப்பதால் பணப் பட்டுவாடா மேற்கொண்டுவருகின்றனர். ஜனநாயக முறைப்படித் தேர்தல் நடைபெற்றால் அதிமுக அதிக இடங்களில் வெற்றிபெறும். கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தி.மு.க கட்சியின் மாவட்டச் செயலாளர்போல செயல்பட்டுவருகிறார். நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க அதிக இடங்களைக் கைப்பற்றி, கரூரில், குறிப்பாக மேயர் பதவியைக் கைப்பற்றும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism