Published:Updated:

``அதிமுக-வினரை போலீஸாரைவைத்து மிரட்டுகிறார்கள்!" - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

வாக்குவாதம் செய்யும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ( நா.ராஜமுருகன் )

`உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க-வினரைக் குறிவைத்து, தி.மு.க-வினர் போலீஸாரைவைத்து அராஜகத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.' - எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

``அதிமுக-வினரை போலீஸாரைவைத்து மிரட்டுகிறார்கள்!" - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

`உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க-வினரைக் குறிவைத்து, தி.மு.க-வினர் போலீஸாரைவைத்து அராஜகத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.' - எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

Published:Updated:
வாக்குவாதம் செய்யும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ( நா.ராஜமுருகன் )

கரூர் மாவட்ம், புகலூர் அ.தி.மு.க நகரச் செயலாளராக இருப்பவர் கே.சி.எஸ்.விவேகானந்தன். இவர்மீது, புகலூர் நகராட்சி அலுவலகத்தில் பணியாற்றிவந்த அலுவலக உதவியாளர் கருப்பையா என்பவர், கரூர் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. அதில், தன்னை பணி செய்யவிடாமல் கடந்த ஆண்டு தடுத்ததுடன், விவேகானந்தன் கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அதனால் மிரட்டலுக்கு பயந்து மருதூர் பேரூராட்சிக்கு பணி மாறுதல் பெற்றுச் சென்றுவிட்டதாகவும் கருப்பையா குறிப்பிட்டிருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், பசுபதிபாளையம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் நான்கு போலீஸார் இன்று அதிகாலை புகலூர் வேலாயுதம்பாளையத்தில் உள்ள விவேகானந்தன் வீட்டுக்குச் சென்றனர்.

எம்.ஆர்.விஜயபாஸ்கரோடு விவேகானந்தன்
எம்.ஆர்.விஜயபாஸ்கரோடு விவேகானந்தன்
நா.ராஜமுருகன்

அவர்களைக் கண்ட விவேகானந்தன், சட்டை போட்டுக்கொண்டு வருவதாக உள்ளே சென்று, கதவைச் சாத்திக்கொண்டாராம். அங்கிருந்தபடி விவேகானந்தன், கட்சியினருக்குத் தகவல் கொடுத்ததாகச் சொல்கிறார்கள். அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க கரூர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையிலான அ.தி.மு.க வழக்கறிஞர்கள், கட்சி நிர்வாகிகள் விவேகானந்தன் வீட்டின் முன் குவிந்தனர். அவர்கள் அங்கிருந்த போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, கைது நடவடிக்கைக்கு உரிய காரணம் கேட்டு, எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலீஸாருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், போலீஸார் விவேகானந்தனை கைதுசெய்ய முடியாமல், சுமார் மூன்று மணி நேர போராட்டத்துக்குப் பிறகு திரும்பிச் சென்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த எம்.ஆர்.விஜயபாஸ்கர், ``நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் புகலூர் நகராட்சியில் போட்டியிடுவதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்யவிருக்கும் நிலையில், நகரச் செயலாளரை அரசு அலுவலரை மிரட்டியதாக பசுபதிபாளையம் போலீஸார் கைதுசெய்ய முயல்வதன் பின்னணியில், கரூர் மாவட்ட தி.மு.க பொறுப்பாளரும், அமைச்சருமான செந்தில் பாலாஜியும், அவர் சகோதரரும் இருக்கிறார்கள். கரூர் மாவட்ட காவல்துறையினர், தி.மு.க-வின் அடியாள்கள்போலச் செயல்படுகிறார்கள்.

 பேட்டியளிக்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
பேட்டியளிக்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
நா.ராஜமுருகன்

தி.மு.க-வினரின் அராஜகம் தலைதூக்கத் தொடங்கியிருக்கிறது. கைதுசெய்ய வந்த காவலர்களில் ஒருவர், பத்து நாள்களுக்கு முன்பு புகார் பெற்றதாகக் கூறுகிறார். மற்றொருவர், நேற்று மாலை புகார் பெறப்பட்டதாகக் கூறுகிறார். காவல்துறையினரின் முரணான தகவல்களைப் பார்க்கும்போது, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க-வினரைக் குறிவைத்து, தி.மு.க-வினர் போலீஸாரைவைத்து அராஜகத்தில் ஈடுபட்டுவருவதாகத் தெரியவருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஏற்கெனவே, கரூர் மாவட்டத்திள்ள அ.தி.மு.க-வினரை போலீஸார் கஞ்சா, கள்ளச் சாராயம் எனப் பொய் புகார்களில் கைதுசெய்து குண்டாஸ் போன்ற சட்டங்களில் சிறையில் அடைப்பதை வழக்கமாகக்கொண்டிருக்கின்றனர். தி.மு.க-வினருக்கு தோல்வி பயம் ஏற்பட்டிருப்பதால், இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதற்கு கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துணை போகிறார். நகர்ப்புறத் தேர்தலில் போட்டியிட்டால், 'போலீஸாரை வைத்து கைது செய்வோம். அ.தி.மு.க-வினர் நடத்திவரும் தொழில்களை முடக்குவோம்' என மிரட்டிவருகின்றனர். அதிகாலை 4:00 மணிக்கு கைதுசெய்யும் அளவுக்கு அ.தி.மு.க-வினர் எந்தக் கொலைச் சம்பவத்திலும் ஈடுபடவில்லை. வீட்டில் குடும்பத்துடன் வசித்துவரும் அ.தி.மு.க நிர்வாகியை அதிகாலை நேரத்தில் கைதுசெய்வதற்கு வந்த காவல்துறையினர், 'கதவைத் திறக்காமல், கதவை உடைத்து கைது செய்வோம்' என கூறுகின்றனர். தமிழகத்தில் நடப்பது ஜனநாயக ஆட்சியா இல்லை சர்வாதிகார ஆட்சியா என்ற சந்தேகம் எழுகிறது.

ஏற்கெனவே, ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற அ.தி.மு.க பிரதிநிதிகள் மீது பொய் வழக்கு போடுவதாக மிரட்டி தி.மு.க-வில் இணையவைத்திருக்கின்றனர். கரூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவராக இருப்பவரை தி.மு.க-வில் இணையாவிட்டால் கைதுசெய்வோம் என போலீஸார் மிரட்டுகின்றனர். இவ்வாறான செயல் ஜனநாயகத்துக்கு எதிரானது. காவல் நிலையங்களில் கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது.

வாக்குவாதம் செய்யும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
வாக்குவாதம் செய்யும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
நா.ராஜமுருகன்

கரூர் மாவட்டத்தில் 24 மணி நேரமும் சந்துக் கடைகளில் மது விற்பனை நடக்கிறது. அதை காவல்துறையினர் தடுத்து நிறுத்தவில்லை. காவல்துறையினரின் இது போன்ற செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். புகலூர் நகரச் செயலாளரைக் கைதுசெய்ய காவல்துறையினர் அதிகாலை 4 மணிக்கு வரவேண்டிய அவசியம் என்ன? இதனால், புகலூர் நகராட்சித் தேர்தலில் அ.தி.மு.க வெற்றிபெறும். தி.மு.க தோல்வியைச் சந்திக்கும். மக்கள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தி.மு.க கட்சியினரின் அராஜகம் தலைவிரித்தாடுகிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்கள், போட்டியிடவே அச்சப்படுகின்றனர். காவல்துறையின் அராஜக நடவடிக்கைக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். இல்லையென்றால், தக்க நடவடிக்கை கோரி நீதிமன்றத்தை நாடுவோம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism