Published:Updated:

தேசத்தை உலுக்கிய உதய்பூர் படுகொலை... மாநில காங்கிரஸ் அரசு, மத்திய பாஜக அரசுகளின் அணுகுமுறை எப்படி?

உதய்பூர் படுகொலை

ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் தையல் கடைக்காரர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

தேசத்தை உலுக்கிய உதய்பூர் படுகொலை... மாநில காங்கிரஸ் அரசு, மத்திய பாஜக அரசுகளின் அணுகுமுறை எப்படி?

ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் தையல் கடைக்காரர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
உதய்பூர் படுகொலை

முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவரும் ராஜஸ்தானில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய படுகொலைச் சம்பவம் ஒன்று நிகழ்ந்திருக்கிறது. உதய்பூரிலுள்ள மால்தாஸ் பகுதியில் தையல் கடை நடத்திவந்தவர் கன்ஹையா லால். நேற்று முன்தினம் (ஜூன் 29-ம் தேதி) அவரின் கடைக்குள் வாடிக்கையாளர்களைப்போல நுழைந்த இரண்டு நபர்கள், அங்கு வேலை செய்துகொண்டிருந்த கன்ஹையா லாலை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர்.

அசோக் கெலாட்
அசோக் கெலாட்

பிறகு, கன்ஹையா லாலின் தலையை அவர்கள் துண்டித்துள்ளனர். அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். அந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. உதய்பூரில் கடைகள் அடைக்கப்பட்டன. இணையதள சேவை முடக்கப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பாஜக-வின் முன்னாள் செய்தித் தொடர்பாளரான நுபுர் ஷர்மாவின் சர்ச்சைக்குரிய கருத்தை அந்த தையல் கடைக்காரர் ஆதரித்ததுதான், கொலைக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. தொலைக்காட்சி விவாதம் ஒன்றில், முஸ்லிம்களின் இறைத்தூதர் முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை நுபுர் ஷர்மா தெரிவித்தார்.

அதற்கு இந்தியாவில் மட்டுமல்லாமல், இஸ்லாமிய நாடுகளிடமிருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. நுபுர் ஷர்மாவின் அந்தக் கருத்துக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கன்ஹையா லால் கருத்து வெளியிட்டிருக்கிறார். அதனால் ஆத்திரமடைந்த அந்த நபர்கள், கன்ஹையா லாலைக் கொலை செய்திருக்கிறார்கள் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

நுபுர் ஷர்மா
நுபுர் ஷர்மா

குற்றவாளிகள் இருவரையும் வீடியோ காட்சி மூலம் அடையாளம் கண்ட போலீஸார், அவர்களைக் கைதுசெய்தனர். உடனடியாக, சிறப்புப் புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்தச் சம்பவத்தில், பயங்கரவாத அமைப்புகளுக்குத் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரிக்கப்படுவதாக பயங்கரவாத தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “உதய்பூரில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. இது ஒரு சோகமான சம்பவம். தவறு செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். அதுவரை மாநில மக்கள் அமைதி காக்க வேண்டும்" என்று முதல்வர் அசோக் கெலாட் கூறியிருக்கிறார்.

அசோக் கெலாட்
அசோக் கெலாட்

மேலும், அச்சம் மிகுந்த ஒரு சூழலை உருவாக்குவதற்காகவே இந்தக் கொலைச் சம்பவம் நிகழ்த்தப்பட்டிருக்கிறது என்பது ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்திருக்கிறது என்றும் அசோக் கெலாட் கூறியிருக்கிறார். இந்தக் கொலை தொடர்பாக, பயங்கரவாத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. கொலைசெய்யப்பட்டவரின் குடும்பத்துக்கு ரூ.31 லட்சம் இழப்பீடு வழங்க ராஜஸ்தான் மாநில அரசு உத்தரவிட்டிருக்கிறது.

இன்னொரு வீடியோவில், கத்தியைச் சுழற்றியவாறு, பிரதமர் நரேந்திர மோடிக்கும் அந்த நபர்கள் கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்கள். இந்தக் கொலைச் சம்பவத்தை சீரியஸாக அணுகும் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசு, உதய்பூரின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்ததுடன், மக்கள் கூடுவதற்கான தடையுத்தரவை மாநிலம் முழுவதும் பிறப்பித்திருக்கிறது.

அமித் ஷா
அமித் ஷா

சமூகப் பதற்றத்தையும், இரு சமூகங்களிடையே பகையுணர்வையும் ஏற்படுத்தக்கூடிய இந்தச் சம்பவத்தை, மாநில அரசைப்போலவே, மத்திய அரசும் மிகவும் சீரியஸாகப் பார்க்கிறது. இந்தச் சம்பவம் குறித்து என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமையின் விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது. இந்தக் கொலையில் தொடர்புடைய அமைப்பு பற்றியும், சர்வதேசத் தொடர்புகள் பற்றியும் முழுமையாக விசாரிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

குற்றவாளிகளில் ஒருவருக்கு பாகிஸ்தானில் செயல்படும் ஒரு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாகவும், அந்த நபர் 2014-ம் ஆண்டு கராச்சிக்கு சென்றுவந்ததாகவும் காவல்துறை தரப்பிலிருந்து ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.