Published:Updated:

உதய்பூர் சம்பவம்: ``கொலைகாரர்களுக்கு கொலை மூலம் பாடம் புகட்ட வேண்டும்!" - கர்நாடக முன்னாள் அமைச்சர்

முன்னாள் அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா

``ஜனநாயக நாட்டில் இந்தக் கொலைகாரர்களுக்கு கொலை மூலம் பாடம் புகட்ட வேண்டும்." - கர்நாடக முன்னாள் அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா

உதய்பூர் சம்பவம்: ``கொலைகாரர்களுக்கு கொலை மூலம் பாடம் புகட்ட வேண்டும்!" - கர்நாடக முன்னாள் அமைச்சர்

``ஜனநாயக நாட்டில் இந்தக் கொலைகாரர்களுக்கு கொலை மூலம் பாடம் புகட்ட வேண்டும்." - கர்நாடக முன்னாள் அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா

Published:Updated:
முன்னாள் அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா

ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் டெய்லர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. உதய்பூரின் பூத்மஹால் பகுதியில் தையல் கடை நடத்திவந்த 40 வயதான கன்ஹையா லாலை, கவுஸ் முகமது, ரியாஸ் முகமது ஆகியோர் நேற்று தலை துண்டித்துக் கொலைசெய்தனர். கொலை செய்துவிட்டுத் தப்பிக்க முயன்ற இருவரையும் ராஜ்சமந்த் மாவட்டத்தின் பீம் பகுதியில் நேற்றிரவு போலீஸ் கைதுசெய்தது. தற்போது இந்தக் கொலை வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது.

உதய்பூர் சம்பவம்: கொலையாளிகள் கவுஸ் முகமது, ரியாஸ் முகமது
உதய்பூர் சம்பவம்: கொலையாளிகள் கவுஸ் முகமது, ரியாஸ் முகமது

இந்த விவகாரத்தில் கன்ஹையா லால், முன்னதாக நபிகள் நாயகம் குறித்து பா.ஜ.க-வின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா பேசிய கருத்தை ஆதரித்து ஃபேஸ்புக்கில் வீடியோ பதிவிட்டிருந்தார் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் டெய்லரின் படுகொலைக்குக் கண்டனம் தெரிவித்திருக்கும் கர்நாடக முன்னாள் அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா, ``ஜனநாயக நாட்டில் இந்தக் கொலைகாரர்களுக்கு கொலை மூலம் பாடம் புகட்ட வேண்டும். அல்லது அவர்களுக்குச் சரியான தண்டனை வழங்க வேண்டும்" எனக் கூறியிருக்கிறார். மேலும் மோடியை மிரட்டுவதாக வெளியான வீடியோ குறித்துப் பேசிய கே.எஸ்.ஈஸ்வரப்பா, ``பிரதமர் மோடியைக் கொல்லப்போவதாக மிரட்டும் இந்தத் துணிச்சலான கருத்தை எந்த தேசியவாதியும் சகித்துக்கொள்ள மாட்டார். நாட்டில் அமைதி காக்கப்பட வேண்டும் என்று பிரதமர் கூறலாம். ஆனால் அதற்காகக் கொலையாளிகளைப் பாதுகாக்க வேண்டும் என்று அது அர்த்தமல்ல" எனத் தெரிவித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அசாதுதீன் ஒவைசி
அசாதுதீன் ஒவைசி

இதே விவகாரத்தில் அசாதுதீன் ஒவைசி, ``இவர்கள் செய்தது மிகக் கொடூரமான செயல். நிச்சயமாக இது சந்தேகத்துக்கு இடமின்றி கண்டிக்கப்பட வேண்டும். சாதி, மதம், அரசியல் அல்லது வேறு எதுவாக இருந்தாலும்... யாரேனும் வன்முறை நிகழ்த்தினால் தண்டிக்கப்பட வேண்டும்" எனக் கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.