Published:Updated:

பிரதமர் மோடியைப் புகழ்ந்த இளையராஜா... வாதமும் விளக்கமும்!

இளையராஜா

பிரதமர் மோடி குறித்து இசையமைப்பாளர் இளையராஜா ஒரு புத்தகத்தின் முன்னுரையில் புகழ்ந்து எழுதியுள்ளார்.

பிரதமர் மோடியைப் புகழ்ந்த இளையராஜா... வாதமும் விளக்கமும்!

பிரதமர் மோடி குறித்து இசையமைப்பாளர் இளையராஜா ஒரு புத்தகத்தின் முன்னுரையில் புகழ்ந்து எழுதியுள்ளார்.

Published:Updated:
இளையராஜா

புளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேஷன் நிறுவனம் `மோடியும் அம்பேத்கரும்’ என்ற புத்தகத்தை வெளியிட்டிருந்தது. இந்த புத்தகத்தின் முன்னுரையை இசையமைப்பாளர் இளையராஜா எழுதியிருக்கிறார். அதில், ``நாட்டின் வளர்ச்சி, சமூகநீதி, பெண்களின் முன்னேற்றம், தொழில் வளர்ச்சி போன்றவற்றில் பிரதமர் மோடியின் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும், அம்பேத்கரின் கருத்து சந்திக்கும் இடத்தையும் இந்தப் புத்தகம் ஆய்வு செய்ய முயன்றுள்ளது. இந்தியாவில் சாலைகள், ரயில் போக்குவரத்து, மெட்ரோ ரயில் போன்றவை உலகத்தரத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. சமூகநீதியைப் பொறுத்தவரை பிரதமர் மோடி பல்வேறு சட்டங்களைச் செயல்படுத்தியிருக்கிறார். சமுகத்தில் பின்தங்கிய மக்களுக்கு சட்டரீதியான பாதுகாப்பை அவர் உறுதிசெய்துள்ளார்" என்றிருக்கிறார்.

இளையராஜா முன்னுரை எழுதிய 'அம்பேத்கர் மற்றும் மோடி' புத்தகம்
இளையராஜா முன்னுரை எழுதிய 'அம்பேத்கர் மற்றும் மோடி' புத்தகம்

மேலும், ``முஸ்லிம் பெண்களின் வாழ்வில் முத்தலாக் தடை சட்டத்தின் மூலமாகப் பிரதமர் பெரும் மாற்றத்தைச் செய்துள்ளார். மோடிக்கும் அம்பேத்கருக்கும் பல விஷயங்களில் ஒற்றுமை இருக்கிறது. இருவருமே ஏழ்மை, ஒடுக்குமுறைகளை அனுபவித்தவர்கள். இருவருமே இந்தியாவின் மீது பெரிய கனவுகளைக் கண்டதுடன் செயல்பாடுகளின் மீது நம்பிக்கை கொண்டவர்கள். இருவரும் ஒன்றுபடுவதை இந்தப் புத்தகம் எடுத்துக்காட்டுகிறது. விடுதலைப் போராட்ட வீரர்களின் கனவின்படி புதிய இந்தியா எப்படிக் கட்டமைக்கப்படுகிறது என்பதை இந்தப் புத்தகம் விளக்குகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த விவகாரம் தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசுவிடம் பேசினோம். ``அண்ணல் அம்பேத்கரோடு மோடியை ஒப்பிடுவதை அருவருப்பான ஒன்றாகத்தான் நான் பார்க்கின்றேன். நன்மதிப்புள்ள ஒருவரின் மூலம் அவர்களின் சித்தாந்தத்தைத் திணிக்கும் முயற்சியை எப்போதுமே பாஜக செய்வது வழக்கம். தற்போது சனாதனத்தையும், இந்துத்துவக் கொள்கைகளையும் இளையராஜா மூலம் கொண்டுவரச் செய்யப்பட்ட முயற்சிதான் இது. இந்த ஒப்பீடு மிகவும் தவறானது.

வன்னியரசு
வன்னியரசு

சனாதனத்தைக் கொண்டுவர வேண்டும் என்று போராடும் ஒருவருக்கும், சனாதனத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற கருத்தியல் கொண்ட ஒருவருக்கும் பெரும் வேறுபாடு உள்ளது. அம்பேத்கர், தன் வாழ்நாள் முழுவதையும் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று போராடியவர். ஜனநாயக இந்தியாவை அமைக்கப் போராடிய ஒருவரை, சாவர்க்கரின் வாரிசாக இருக்கும் மோடியோடு ஒப்பிடுவது அநீதி. கண்டிப்பாக இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இசைப் புலமைகொண்ட இசைமேதை இளையராஜாவையும், இசையே தெரியாத ஒருவருடன் ஒன்றாக ஒப்பிட முடியுமா... இதனை இளையராஜா புரிந்துகொள்ள வேண்டும்" என்று பேசினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது தொடர்பாகத் தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம். ``தமிழகம் முழுவதும் கட்டபஞ்சாயத்து செய்து, சாதிரீதியாக, மதரீதியாகப் பிளவு ஏற்படுத்திவரும் ஒரு கட்சி விசிக. இளையராஜா போன்ற ஒரு மூத்த அற்புதமான கலைஞரை மனம் புண்படும்படி பேசுவது என்பது அந்தக் கட்சி தொடர்ந்து நல்ல உள்ளங்களைப் புண்படுத்தி வருவதைத்தான் குறிக்கிறது.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

கருத்து சுதந்திரம் பற்றிப் பேசுபவர்கள், இளையராஜா கருத்துக்கு தடை போடுவதும், விமர்சிப்பதும் என்ன வகையில் நியாயம்... சிறு வயது முதல் உழைத்து, பாடுபட்டு, முன்னேறி இந்தக் கலைக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட ஒருவரின் பேச்சை கொச்சைப்படுத்தும்படி பேசுவதை விசிக-வினர் வழக்கமாகவே வைத்துள்ளார்கள். இந்தச் செயலுக்கு திமுக-வும் துணைபோகிறது" என்று கூறினார். மேலும், இந்த விவகாரம் குறித்து சமூக வளைதளங்களில் பலரும் இளையராஜாவுக்கு ஆதரவும், எதிராகவும் தங்களின் கருத்துகளைப் பதிவுசெய்துவருகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism