Published:Updated:

``நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நடுநிலையோடு செயல்பட வேண்டும்” - தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவு!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் வருகிற பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதன் காரணமாக திமுக,அதிமுக,காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய அரசியல் கட்சித் தலைவர்கள் மும்முரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மாநில தேர்தல் ஆணையம்
மாநில தேர்தல் ஆணையம்

இந்த நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் காவல் கண்காணிப்பாளர்களோடு நேற்று ஆலோசனை நடைபெற்றது. இதையொட்டி இன்று மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் உடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் ஆலோசனை மேற்கொண்டார்.அப்போது, “ தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்துவது, பணப்பட்டுவாடாவைத் தடுப்பது, உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வாக்குச்சாவடி மையங்களில் எந்த வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் வாக்குப்பதிவு நடைபெறுவதைத் தேர்தல் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். வேட்புமனு பரிசீலனையில் எந்தவித விருப்பு வெறுப்புமின்றி நடுநிலையோடு செயல்பட வேண்டும்” என அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism