Published:Updated:

``30 தொகுதிகளில் வேட்பாளர்களைக் களமிறக்குவோம்’’ - முத்தரையர் சங்கத்தின் கே.கே.செல்வக்குமார் அதிரடி!

முத்தரையர் சங்கம் செல்வக்குமார்

சட்டநாதன் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்தக் கோரி, முத்தரையர் சமூகத்தினரின் மாநாடு ஜனவரி 31-ம் தேதி மதுரையில் நடைபெறுகிறது. பா.ஜ.க தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா மதுரைக்கு வந்திருக்கும் சூழலில், இந்த மாநாடு அரசியல் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

``30 தொகுதிகளில் வேட்பாளர்களைக் களமிறக்குவோம்’’ - முத்தரையர் சங்கத்தின் கே.கே.செல்வக்குமார் அதிரடி!

சட்டநாதன் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்தக் கோரி, முத்தரையர் சமூகத்தினரின் மாநாடு ஜனவரி 31-ம் தேதி மதுரையில் நடைபெறுகிறது. பா.ஜ.க தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா மதுரைக்கு வந்திருக்கும் சூழலில், இந்த மாநாடு அரசியல் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

Published:Updated:
முத்தரையர் சங்கம் செல்வக்குமார்

தேர்தல் நெருங்கிவிட்டாலே சமுதாய அமைப்புகள் மாநாடு, ஆர்ப்பாட்டம், பேரணிகள் நடத்தி தங்கள் பலத்தை அரசியல் கட்சிகளுக்குக் காட்டுவார்கள். அந்த வகையில், வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் கே.கே.செல்வக்குமார், `வலையர் வாழ்வுரிமை மாநாடு’ என்கிற பெயரில் மாநாடு ஒன்றை ஜனவரி 31-ம் தேதி மதுரை ஒத்தக்கடையில் நடத்தவிருக்கிறார். இந்த மாநாட்டுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மூத்த அமைச்சர்கள், தெலங்கானா சுகாதாரத்துறை அமைச்சர் இட்டாலா ராஜேந்தர் முதிராஜ், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பண்டா பிரகாஷ் முதிராஜ், பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்துகொள்வதால், அரசியல் அரங்கம் சூடுபிடித்திருக்கிறது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தின் அ.தி.மு.க மாவட்டச் செயலாளராக இருந்த குழ.செல்லையா, தன்னுடைய முத்தரையர்கள் சங்கம் சார்பாக, 1979, ஆகஸ்ட் 12-ம் தேதி புதுக்கோட்டையில் முத்தரையர்கள் மாநாட்டை நடத்தினார். அ.தி.மு.க தோற்றுவிக்கப்பட்டபோது, ஐந்தாவது நபராக விண்ணப்பக் கடிதத்தில் குழ.செல்லையா கையெழுத்திட்டவர் என்பதால், அந்தச் சமயத்தில் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். ஒரு சாதி அமைப்பு மாநாட்டில் எம்.ஜி.ஆர் கலந்துகொண்டது முதலும் கடைசியுமாக அதுதான். அதற்குப் பிறகு, கே.கே.செல்வக்குமார் நடத்தவிருக்கும் மாநாட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளவிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தச் சூழலில், இரண்டு நாள்கள் பயணமாக மதுரை வந்திருக்கும் பா.ஜ.க தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, தேர்தல் சம்பந்தமாக பா.ஜ.க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவிருக்கிறார். முத்தரையர்களின் கோரிக்கை தொடர்பாகப் பேசுவதற்கு ஜெ.பி.நட்டாவைச் சந்திக்கவும் கே.கே.செல்வக்குமாருக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. டெல்டாவிலும், தென்மாவட்டங்களிலும் முக்குலத்தோர் சமுதாயம் அல்லாத ஒரு சமூக அரசியலைக் கையில் எடுக்க பா.ஜ.க ஏற்கெனவே ஒரு திட்டம் தீட்டியிருந்தது. முத்தரையர்கள், தேவேந்திர குல வேளாளர்கள், எண்ணிக்கையில் சிறிதாக இருக்கும் பிற சமுதாயங்களை ஒன்று திரட்டி, இந்தப் பகுதியில் திராவிடக் கட்சிகளுக்கு நெருக்கடி கொடுக்கவும் வியூகங்களை வகுத்தனர். இதன் ஒரு பகுதியாகத்தான், ஆகஸ்ட் 2015-ல் மதுரையில் நடைபெற்ற தேவேந்திர குல வேளாளர் பிரதிநிதிகள் மாநாட்டில் அமித் ஷா கலந்துகொண்டார். இப்போது, முத்தரையர்களின் மாநாடு வெற்றியடைய பா.ஜ.க-வின் கலைப்பிரிவுச் செயலாளர் காயத்ரி ரகுராம் வாழ்த்து தெரிவித்திருப்பதும், முத்தரையர் பிரதிநிதிகளை ஜெ.பி.நட்டா சந்திக்கவிருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜெ.பி.நட்டா
ஜெ.பி.நட்டா

முத்தரையர்களின் கோரிக்கை, அரசியல் திட்டம் குறித்து வீர முத்தரையர்கள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் கே.கே.செல்வக்குமாரிடம் பேசினோம்.

``உங்கள் கோரிக்கை என்ன?’’

``சமூகத்தில் பிற்படுத்தப்பட்டவர்களின் நிலையை அறிய, 1971-ல் சட்டநாதன் ஆணையம் அமைக்கப்பட்டது. 1976-ல் அரசாங்கத்துக்கு, ஆணையம் அளித்த அறிக்கையில், `வலையர் மக்களின் வாழ்வு மிகவும் மோசமாக இருக்கிறது. அரசாங்கத்தின் திட்டங்களைத் தெரிந்துகொள்ளக்கூட முடியாத அளவுக்கு விழிப்புணர்வற்ற சமூகமாக இருக்கிறார்கள். அதனால், வலையர் புனரமைப்பு வாரியம் அமைக்க வேண்டும். இதன் மூலமாக அவர்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் முன்னேற முடியும்’ என்று பரிந்துரை செய்தனர். தமிழகத்தில் கள்ளர் புனரமைப்பு வாரியத்தின் கீழ் 285 பள்ளிகள் செயல்படுகின்றன. இந்த பட்ஜெட்டில்கூட வாரியத்துக்காக 60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆகவே, சட்டநாதன் கமிஷனின் பரிந்துரையின்படி, வலையர் புனரமைப்பு வாரியம் அமைக்க வேண்டுமென்பதுதான் எங்களின் பிரதான கோரிக்கை.''

கே.கே.செல்வக்குமார்
கே.கே.செல்வக்குமார்

``இந்தக் கோரிக்கை மாநாட்டைத் தேர்தல் நெருக்கத்தில் நடத்துகிறீர்களே..?''

``அப்போதுதானே எங்கள் பலத்தைக் காட்ட முடியும்... இதுவரை, `நாங்கள் பெரும்பான்மையாக இருக்கிறோம்; எங்கள் கோரிக்கையைப் பரிசீலியுங்கள்’ என்று தெரியப்படுத்தும்விதமாக எந்த மாநாட்டையும் நடத்தி மத்திய, மாநில அரசுகளிடம் முத்தரையர்கள் நிரூபிக்கவில்லை. அப்படி கோரிக்கைக்காக நடத்தப்பட்ட ஒரு சில கூட்டங்களிலும் அரசின் பிரதிநிதிகள் யாரும் கலந்துகொண்டதில்லை. இதனால், எங்களின் பலம் என்னவென்பதே அரசாங்கத்துக்குத் தெரியாமல் போய்விட்டது. இதற்காகத்தான் முதன்முறையாக மத்திய, மாநில அரசுகளின் பிரதிநிதிகளை அழைத்து மாநாட்டை நாங்கள் நடத்துகிறோம். எங்கள் பலத்தைக் காட்டினால் மட்டுமே எங்களுக்கான உரிமையைப் பெற முடியும்.''

``ஜெ.பி.நட்டாவிடம் என்ன பேசவிருக்கிறீர்கள்?''

``ஜனவரி 30-ம் தேதி எங்களிடம் பேசுவதற்காக அழைத்திருக்கிறார் ஜெ.பி.நட்டா. எங்கள் மக்களுக்கு குறிக்கப்பட்ட சமூகம் அதாவது, டி.என்.சி என சாதிச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. ஆனால், பல இடங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகம் என்றே சான்றிதழை வழங்குகிறார்கள். இந்தநிலையை மாற்றுவதோடு, `எங்களுக்கு குறிக்கப்பட்ட பழங்குடியினர் (DNT) அந்தஸ்து அளிக்க வேண்டும்’ என்று நட்டாவிடம் கோரிக்கை வைக்கவிருக்கிறோம். மத்திய அரசின் பணிகளில் முத்தரையர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் உள்ளிட்ட 20 கோரிக்கைகளை அவரிடம் அளிக்கவிருக்கிறோம்.''

கே.கே.செல்வக்குமார்
கே.கே.செல்வக்குமார்

``அரசியல்ரீதியாக என்ன செய்யப்போகிறீர்கள்?’’

``எங்கள் சமூகப் பிரதநிதிகள் சட்டமன்றத்தில் அமர வேண்டுமென்பதுதான் எங்கள் சங்கத்தின் நோக்கம். இதற்காக அ.தி.மு.க., தி.மு.க என இரண்டு கட்சிகளிடமும் சங்கத்துக்காக ஐந்து சீட் கேட்கவிருக்கிறோம். யார் எங்கள் கோரிக்கைக்குச் செவி சாய்க்கிறார்களோ, அவர்களுடைய கூட்டணியில் இடம்பெறுவோம். எங்கள் கோரிக்கை ஏற்கப்படவில்லையென்றால், முத்தரையர்கள் பெரும்பான்மையாக இருக்கும் 30 தொகுதிகளில் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக வேட்பாளர்களைக் களமிறக்குவோம். ஏறத்தாழ 1,500 கிராமங்களில் எங்கள் சங்கத்தின் கிளைகள் செயல்படுகின்றன. தொகுதிக்கு 30,000 வாக்குகள் பெறும் அளவுக்கு நாங்கள் வலிமையாகத்தான் இருக்கிறோம். எங்களால் வெற்றி பெற முடியவில்லையென்றாலும், வாக்கு சதவிகிதத்தில் ஒரு பாதிப்பை நிச்சயமாக ஏற்படுத்த முடியும். இதன் மூலமாக எங்கள் பலம் என்னவென்பது தமிழக அரசியல் கட்சிகளுக்குத் தெரியவரும்.''