Published:Updated:

நபிகள் நாயகம் விவகாரம்: ``எந்த மதத்தையும் புண்படுத்துவது என் நோக்கமல்ல!" - நவீன்குமார் விளக்கம்

நவீன்குமார் ஜிண்டால் ( ட்விட்டர் )

``எங்கள் கடவுள்கள் குறித்து சிலர் மோசமான வார்த்தைகளால் பேசுகின்றனர். அப்படிப்பட்டவர்கள் மீதே நான் கேள்வியெழுப்பினேன்." - நவீன்குமார் ஜிண்டால்

நபிகள் நாயகம் விவகாரம்: ``எந்த மதத்தையும் புண்படுத்துவது என் நோக்கமல்ல!" - நவீன்குமார் விளக்கம்

``எங்கள் கடவுள்கள் குறித்து சிலர் மோசமான வார்த்தைகளால் பேசுகின்றனர். அப்படிப்பட்டவர்கள் மீதே நான் கேள்வியெழுப்பினேன்." - நவீன்குமார் ஜிண்டால்

Published:Updated:
நவீன்குமார் ஜிண்டால் ( ட்விட்டர் )

நபிகள் நாயகம் குறித்து, பா.ஜ.க-வின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா தெரிவித்த கருத்து சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நுபுர் ஷர்மாவின் கருத்துக்கு ஆதரவாக பா.ஜ.க-வின் மற்றொரு செய்தித் தொடர்பாளர் நவீன்குமார் ஜிண்டாலின் கருத்தும் மேலும் இந்த விவகாரத்தை பரபரப்பாக்கியது. அதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில், இஸ்லாமிய நாடுகள் இந்தியாவுக்குக் கண்டனம் தெரிவித்ததையடுத்து, நுபுர் ஷர்மா, நவீன்குமார் ஜிண்டாலுக்கு பல்வேறு கொலை மிரட்டல்கள் வந்துகொண்டிருப்பதாகவும் பா.ஜ.க தரப்பில் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ``எந்த மதத்தையும் புண்படுத்துவதோ, அவமதிப்பதோ என்னுடைய நோக்கமல்ல" என நவீன்குமார் ஜிண்டால் தெரிவித்திருக்கிறார்.

நவீன்குமார் ஜிண்டால், நுபுர் ஷர்மா
நவீன்குமார் ஜிண்டால், நுபுர் ஷர்மா

உத்தரப்பிரதேசத்தில் நேற்று பாங்கே பிஹாரி கோயிலுக்குச் சென்ற நவீன்குமார் ஜிண்டால், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்றே பாங்கே பீஹாரி ஜி-யிடம் நான் பிரார்த்தனை செய்வேன். எங்களின் கடவுள்கள் குறித்து சிலர் மோசமான வார்த்தைகளால் பேசுகின்றனர். அப்படிப்பட்டவர்கள் மீதே நான் கேள்வியெழுப்பினேன். இது தவிர எந்த ஒரு மதத்தினரின் மத உணர்வுகளை அவமதிப்பதோ... புண்படுத்துவதோ என்னுடைய நோக்கம் அல்ல" என விளக்கமளித்தார்.

மேலும், தன்மீதான கொலைமிரட்டல்கள் குறித்தான கேள்விக்கு பதிலளித்த ஜிண்டால், ``நான் பாங்கே பிஹாரிக்கு வந்திருக்கிறேன். இதைவிடப் பெரிய பாதுகாப்பு என்ன இருக்க முடியும்? இத்தகைய அச்சுறுத்தல்கள் குறித்து டெல்லி காவல்துறைக்குத் தெரிவித்திருக்கிறேன். காவல்துறையும் அதன் வேலையைச் செய்துவருகிறது" எனக் கூறினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism