Published:Updated:

``எனது தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுவதாக சந்தேகம் இருக்கிறது" - தெலங்கானா ஆளுநர் தமிழிசை

ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

தனது தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்படுவதாகவும், தெலங்கானாவில் ஜனநாயக விரோதச் சூழல் நிலவுவதாகவும் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பகீர் குற்றச்சாட்டு தெரிவித்திருக்கிறார்.

தெலங்கானா ஆளுநரான தமிழிசை சௌந்தரராஜன், தெலங்கானா ராஜ்நிவாஸில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``எனது தொலைபேசி ஒட்டுக்கேட்கப்படுவதாக சந்தேகம் இருக்கிறது. குறிப்பாக, மாநிலத்தில் ஆளுநருக்கு மரியாதை கொடுப்பதில் ஜனநாயகமற்ற சூழல் உள்ளது. இவை அனைத்தையும் நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். டி.ஆர்.எஸ் எம்.எல்.ஏ-க்களை விலை பேசிய வழக்குடன் தொடர்புபடுத்தி சில சமூக ஊடகப் பதிவுகள் வருகின்றன" என்றார்.

தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன்

முன்னதாக, தெலங்கானா பல்கலைக்கழகங்களின் பொது ஆட்சேர்ப்பு வாரிய மசோதா, 2022-ஐ நிறைவேற்றுவதில் ஆளுநர் தாமதம் செய்வதாக மாநிலக் கல்வித்துறை அதிகாரிகள் வெளிப்படையாகக் குற்றம்சாட்டினர். ஆனால் அது உண்மையல்ல என்று ஆளுநர் தமிழிசைத் திட்டவட்டமாக மறுத்திருக்கிறார். தெலங்கானாவில் இந்தப் பணி நியமனங்களில் ஆட்களை நியமனம் செய்வது தாமதம் ஆகும் விவகாரம் ஆளுநர் தமிழிசைக்கும் டி.ஆர்.எஸ் அரசுக்கும் இடையேயான உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தியிருக்கிறது.