Published:Updated:

நாகாலாந்து: ராணுவத்தால் கொல்லப்பட்ட 12 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம்! - நெஞ்சை உலுக்கிய கதறல்

நாகாலாந்து
News
நாகாலாந்து

துரதிர்ஷ்டவசமான இந்த உயிர் இழப்புகளுக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்த ராணுவம், இந்த விவகாரம் விசாரிக்கப்பட்டு வருவதாக உறுதிப்படுத்தியுள்ளது.

தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தில் ராணுவத்தின் 21 பாரா சிறப்புப் படையினரால் தாக்கப்பட்டதில் 14 பொதுமக்கள் கொல்லப்பட்டு மூன்று நாள்கள் முடிந்துவிட்டது. துயரத்தில் மூழ்கிய குடும்பங்கள் தங்கள் அன்புக்குரியவர்களின் இழப்பை தாங்க முடியாமல் கதறிய காட்சிகள் மனதை உலுக்குவதாக அமைந்திருக்கிறது.

கடந்த சனிக்கிழமை(04-12-2021) அன்று தவறாக நடந்த ராணுவ நடவடிக்கையாலும் , அதனைத் தொடர்ந்து நடந்த வன்முறையாலும் கொல்லப்பட்ட 14 பேரில் 12 பேரின் உடல் நேற்றிரவு, அடக்கம் செய்யப்பட்டது

12 பேரும் நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் உள்ள ஓடிங் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இப்படி இறந்தவர்கள், ஒரே இடத்தில் புதைக்கப்பட்டனர். இந்த இறுதி சடங்கின் காட்சிகள் மனத்தை கனமாக்குகின்றது.

நாகாலாந்து: ராணுவத்தால் கொல்லப்பட்ட 12 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம்! - நெஞ்சை உலுக்கிய கதறல்

ஒரு பெண், தன்னை தேற்றிக்கொள்ள இயலாமல் அழுவதும் , ஒரே இடத்தில் பல சவப்பெட்டிகளை சூழ்ந்து கதறும் உறவுகளும், துயரமும் துக்கமும் சூழ்ந்த அந்த இறுதி சடங்கின் காட்சிகள் இந்தியாவையே ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சனிக்கிழமையன்று நாகாலாந்தின் மோன் மாவட்டத்தைச் சேர்ந்த எட்டு கிராமவாசிகள் ராணுவத்தின் 21 பாரா SF ஆல் கொல்லப்பட்டனர். கிளர்ச்சியாளர்கள் குறித்து கிடைத்த தகவலின் பேரில் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தப்பட்டதாக ராணுவம் தரப்பில் கூறப்பட்டது .

மற்ற கிராமவாசிகள் துப்பாக்கிச் சூடு சத்தத்தைக் கேட்டு அவ்விடத்தை வந்து பார்த்தபோது தாக்கப்பட்டதாகவும், அதில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர் என்றும் நாகாலாந்து காவல்துறையின் முதற்கட்ட தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ராணுவ வட்டாரங்களோ, சடலங்களை காவல் நிலையத்திற்கு கொண்டு செல்ல முயன்றனர் என்றும் இதனை மறைக்க எந்த நோக்கமும் இல்லை என்றும் கூறினர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பதற்றங்கள் அதிகமாக இருந்த நிலையில், இதற்கு அடுத்த நாள்(05-12-2021) அதிக வன்முறை வெடித்தது. இம்முறை, மோன் நகரில் உள்ள அஸ்ஸாம் ரைபிள்ஸ் முகாம் தாக்கப்பட்டது. அப்போது தற்காப்புக்காக மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியிருந்தது என்று ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த வன்முறையிலும் பொதுமக்களில் ஒருவர் கொல்லப்பட்டார் .

நாகாலாந்து: ராணுவத்தால் கொல்லப்பட்ட 12 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம்! - நெஞ்சை உலுக்கிய கதறல்

நாகாலாந்து காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில், ராணுவத்தின் உயரடுக்கு சிறப்புப் பிரிவைக் குறிப்பிட்டு, "கொலை" என்று குற்றம் சாட்டியுள்ளது. பாதுகாப்புப் படையினரின் "நோக்கம் பொதுமக்களை கொலை செய்து, காயப்படுத்துவது" என்றும் கூறியுள்ளது .

துரதிர்ஷ்டவசமான இந்த உயிர் இழப்புகளுக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்த ராணுவம், இந்த விவகாரம் விசாரிக்கப்பட்டு வருவதாக உறுதிப்படுத்தியுள்ளது. ராணுவ வட்டாரங்கள், ட்ரக்கில், வேட்டையாடும் துப்பாக்கியைக் கண்டதாகவும், ஆரம்ப துப்பாக்கிச் சூட்டை தற்காத்ததாகவும் கூறினர். ஆனால் ட்ரக்கில் ஆயுதங்களோ வெடிமருந்துகளோ மீட்கப்படவில்லை.

மோன் பகுதி நாகா குழு NSCN(K) மற்றும் அசாமின் ULFA (United Liberation Front of Assam) ஆகியவற்றின் கோட்டையாகும். பதற்றம் நிறைந்த பகுதி என்று அறியப்பட்ட இந்த மாவட்டம் மியான்மருடன் சர்வதேச எல்லையையும், அஸ்ஸாமுடன் ஒரு மாநில எல்லையையும் பகிர்ந்து கொள்கிறது.

உள்துறை அமைச்சர் அமித் ஷா
உள்துறை அமைச்சர் அமித் ஷா

இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று நாடாளுமன்றத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டார். ஆனால் சர்ச்சைக்குரிய AFSPA இன் கீழ் வழக்கில் சம்பந்தப்பட்ட வீரர்கள் பாதுகாக்கப்பட வேண்டுமா என்பதை அவர் அந்த அறிக்கையில் தெளிவுபடுத்தவில்லை.

நாகாலாந்து முதல்வர், AFSPA அகற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருக்கிறார். இந்த கோரிக்கையை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நேற்று நாடாளுமன்றத்தில் எழுப்பியதையடுத்து, சிலர் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

தங்கள் உறவுகளை இழந்த பொதுமக்களுக்கு இந்த அரசாங்கம் என்ன ஆறுதல் கூறப்போகிறது? இந்த கோர சம்பவங்களுக்கு யார் பொறுப்பு? இப்படி பல கேள்விகளை மக்கள் மனதில் இந்த துயர் சம்பவம் விதைத்துள்ளது!